மலரை மடக்கிட்டானே போலீஸ் கதிர்... மலரும் நல்ல முடிவெடுத்துட்டா....!
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியல் மலர் போலீஸ் கதிரிடம் தன் வாழ்வை ஒப்படைக்க முடிவெடுத்துட்டா.
மலர் தற்காப்புக்காக ஒருவனை கொலை செய்வது போல ஃபிளாஷ் பேக் காமிச்சாலும், கதையை இன்னும் முழுமையாக சொல்லலை.
ஒரு பக்கம் உதவி ஆணையர் வரும் கால கணவர், இன்னொரு பக்கம் தான் ஒரு குற்றவாளி... எப்படி இருக்கும் திருமணம் ஆகப் போகும் ஒரு இளம் பெண்ணின் மனம்...

ஒய்வு ராணுவ அதிகாரி
இந்த லட்சணத்தில் மாமனார் வேற ஓய்வுப் பெற்ற ராணுவ அதிகாரி... வீட்டில் ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர். அவரைக் கண்டாலும் நடுங்குது. மலருக்கு. சொல்லாமல் கதிருடன் வெளியில் போய்விட்டு வந்ததற்கு நிற்க வச்சு கிளாஸ் எடுத்தவர்.இது வேறு மலருக்கு பயத்தை கொடுக்க அவளால் நார்மலாக இருக்கவே முடியலை.எப்போது ஏதாவது நிகழ்ந்து இந்த கல்யாணம் நின்னுட கூடாதா என்கிற ஏக்கத்தில் எப்போதும் முக வாட்டத்துடன் இருப்பவள்.

மலரை கதிர் காதலிக்கிறான்
கதிர் மலரை ரொம்ப காதலிக்கிறான். அவளுக்கு தேவையானதை கல்யாணத்துக்கு முன்பே பார்த்து பார்த்து செய்யறான். அவனை ஒதுக்கவும் முடியலை... அவன் மலர் தன் வாயால் தன்கிட்ட ஐ லவ் யூன்னு சொல்லணும்னு என்னென்னவோ செய்து பார்க்கிறான். மலருக்கே கூட இப்படிப்பட்டவனா தனக்கு கணவனாக வரப்போகிறவன்னு ஆச்சரியம் ஆனந்தம் வந்துருது.

கடமை தவறாத கணவன்
மலரை கதிரிடம் பேச சொல்லிவிட்டு ஒதுங்கிக் கொள்கிறாள் தங்கச்சி சுவாதி. அப்போது பேசிய கதிர்... நீ இன்னும் உன்னை ரொம்ப லவ் பண்ணனும்னு எதிர்பார்க்கற மலர். அதை நான் உனக்கு கொடுப்பேன் மலர்.உன்னை சந்தோஷமா வச்சிருப்பேன்.. உன் வாயால நீயே உன்னை மறந்து ஐ லவ் யூன்னு சொல்ல வைப்பேன்னு சொல்றான்.

கையை மெதுவாக பிடிச்சு
மலரின் கையை மெதுவாக பிடிச்சு...காய் கோர்த்து பிடிச்சுக்கிட்டு நெற்றியில் முத்தமிடுகிறான். அடுத்து கண்களில் முத்தம்.. அடுத்து என்று போவதற்குள் தள்ளி விட்டு ஓடுகிறாள் மலர். ஓடும் அவளின் கையை பிடிச்சு இழுத்து கட்டிக்கறான். யாரோ கூப்பிடுவது போல கேட்க இருவரும் விலக மலர் ஓடிடறா

மலர் சுவாதியிடம்
சுவாதி அக்கா மாமாகிட்ட ஏதாவது பேசுனியா இல்லையா... நீ வேஸ்ட்டுக்கான்னு சொல்றா.இல்லை சுவாதி...அவர் என் கையை பிடிச்சப்போ ரொம்ப பாதுகாப்பா உணர்ந்தேன். கதிருக்குள்ள போலீஸ் அதிகாரி,பொறுப்பான குடும்ப தலைவன்னு ரெண்டு உருவத்தை பார்க்கறேன்...ரெண்டுலேயும் அவர் நூறு சதவிகிதம் சரியாத்தான் இருக்கார்னு சொல்றா.

மாமா உன்னை முழுசா
அதுதான்க்கா சொல்றேன்..நீ பழசு எதையும் நினைச்சுகிட்டு, உன் சந்தோஷத்தை இழந்துடாதே.. உன்னை முழுசா மாமாகிட்ட ஒப்படைச்சுடுன்னு சொல்றா... எப்படியோ பயத்தில் ஒதுங்கி ஒதுங்கி இருந்த மலரையும் கதிர் மடக்கிட்டானே...
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications