அந்த கிரிக்கெட்டர் உடன் பிரேக்கப்.. கல்யாணம் பண்ணாதது இதனால் தான்.. மனம் திறந்த நடிகை கௌசல்யா
சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்த நடிகை கௌசல்யா பல வருடங்களுக்கு பிறகு பேட்டி ஒன்றில் தன்னுடைய கடந்த கால வாழ்க்கைகளை குறித்து பேசி இருக்கிறார்.
அதில் தான் நடித்த திரைப்படங்கள் மற்றும் அதில் கிடைத்த அனுபவங்கள் தனக்கு பிடித்த நடிகர்கள் நடிகைகள் பற்றி பல விஷயங்களை கவுசல்யா பேசியிருக்கிறார்.

அத்தோடு தான் இத்தனை வருடங்களாக எதற்காக திருமணம் செய்யவில்லை என்பது பற்றியும் கௌசல்யா அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திரைப்படங்களில் மட்டுமல்லாமல் பேட்டிகளில் கூட எப்போதும் சிரித்த முகமாகவே இருக்கும் நடிகை கௌசல்யா வெள்ளி திரையில் கதாநாயகியாக இருக்கும் போது இருந்த அதே அழகை இப்போதும் மெயின்டனன்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதைப் பார்த்து அதிகமான ரசிகர்கள் இவருக்கு மட்டும் வயது ஆகவில்லையா என்று கேட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் கௌசல்யாவின் சொந்த பெயர் அதாவது அவருடைய வீட்டில் வைத்த பெயர் என்றால் அது "கவிதா" தானாம். அவர் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அப்போது அங்கு அவர் அறிமுகமான முதல் திரைப்படத்தில் அவருடைய பெயர் நந்தினி என்பதால் அந்தப் பெயரை வைத்து தான் இப்போதும் பலர் அழைத்து வருகிறார்களாம்.
அதேபோலவே தமிழில் இவர் நடிகர் முரளி நடித்த காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் கௌசல்யா என்ற கேரக்டரில் அறிமுகமானதாலே இவரை தமிழில் கௌசல்யா என்று ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். முதல் திரைப்படமே இவர் எதிர்பார்க்காத அளவிற்கு இவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில் இவர் விஜய் கூட இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். அதுபோல பல முன்னணி நடிகர்களோடும் ஜோடியாக கௌசல்யா நடித்திருந்தார்
ஆனாலும் விஜய் உடன் கதாநாயகியாக நடித்த கௌசல்யா சில வருடங்கள் கழித்து அவருக்கு அக்காவாகவும், அண்ணியாகவும் நடிக்க தொடங்கிவிட்டார். திருமலை திரைப்படத்தில் நடிகர் ரகுவரனின் மனைவியாக விஜய்க்கு அண்ணி கேரக்டரில் நடித்திருப்பார். அதுபோல சந்தோஷ் சுப்ரமணி திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்கா கேரக்டரிலும் நடித்திருந்தார்.
சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்த கௌசல்யா பிறகு சில வருடங்களாகவே சினிமாவை விட்டு விலகி இருந்தார். அப்போது அவருடைய உடல் எடை பல மடங்கு கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவில் இருந்திருக்கிறார். அவருடைய புகைப்படங்கள் வெளியான போது கூட அவருடைய ரசிகர்கள் இது கண்டிப்பாக கௌசல்யாவாக இருக்க முடியாது என்று கூறி இருக்கிறார்கள். அந்த அளவிற்கு கௌசல்யா மாறிவிட்டாராம்.
அதற்கு காரணம் கௌசல்யாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது அவர் எடுத்துக் கொண்ட மருந்துகள் மாத்திரைகள் தான் என்று சமீபத்தில் பேட்டியில் கௌசல்யா கூறியிருக்கிறார். பிறகு 105 கிலோ எடை இருந்த கௌசல்யா தற்போது மீண்டும் தன்னுடைய உடல் எடையை குறைத்து சில சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் இப்போது பிரபல தனியார் youtube சேனல் ஒன்றில் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் தான் எதனால் திருமணம் செய்யவில்லை என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார். தான் திருமணம் செய்யாததற்கு காரணம் தான் அதிகமாக தன்னுடைய பெற்றோரோடு ஒன்றி வாழ்ந்து விட்டேன். நான் இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது. அதுபோல அவர்களைப் பிரிந்து என்னால் இருக்கவும் முடியாது.
அது ஒரு காரணமாக இருந்தது. அதுபோல நான் என்னுடைய வாழ்க்கையை தொடர்வதற்கு சரியான ஒரு நபரை பார்க்கவில்லை. எனக்கு பிடித்த மாதிரி ஒரு நபரை பார்த்தால் தானே நான் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஒரு சிந்தனையை வரும். அந்த மாதிரி ஒரு நபரை நான் சந்திக்கவில்லை. அப்படி ஒரு வேலை ஒரு நபரை சந்தித்திருந்தால் நானும் திருமணத்தை பற்றி யோசித்து இருப்பேன் என்று பேசி இருக்கிறார்.
அதுபோல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது உடல்நிலை சரியில்லாமல் போயிருந்தது. பிறகு அதிலிருந்து மீண்டு வருவதற்கும் கொஞ்சம் வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் அந்த நேரத்தில் கூட என்னைப் பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வந்தது. நான் பிரபல கிரிக்கெட்டர் ஒருவரிடம் காதலித்து வருவதாகவும் அவருக்கும் எனக்கும் பிரேக்கப் ஆகிவிட்டது என்றும் கூட சொன்னார்கள். அந்த கிரிக்கெட்டர் பெயர் கூட இப்போது எனக்கு மறந்து விட்டது.
ஆனால் அப்போது கூட நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டதே கிடையாது. நம்மைப் பற்றியும் மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த மாதிரி வதந்திகள் எல்லாம் பரவிக் கொண்டிருக்கிறது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். மத்தபடி நான் திருமணம் செய்யாததற்கு காரணம் வேறு எதுவும் இல்லை என்று அந்த பேட்டியில் கௌசல்யா பேசியிருக்கிறார்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications