ஆஹா.. நாம சொன்ன மாதிரியே நடந்து போச்சு பாருங்க.. அடுத்த முல்லை இவர்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லை வேடத்தில் அடுத்து நடிக்கப் போவது யார் என்ற கேள்விக்கு ஒரு வழியாக விடை கொடுத்து விட்டது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.

பாரதி கண்ணம்மா தொடரில் அறிவு என்ற வேடத்தில் நடித்து வரும் காவ்யாதான் முல்லை வேடத்தில் அடுத்து நடிக்கப் போகிறார் என்பதை அதிகாரப்பூர்வமாகவை சொல்லி விட்டார் குடும்பத் தலைவரான மூர்த்தி.

காவியா வேறு யாரும் அல்ல பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருபவர்தான்.

நாம சொன்னது நடந்தது

நாம சொன்னது நடந்தது

அதில் கண்ணம்மாவின் நாத்தனராக, நடித்து வந்தார். இப்போது இவரைத்தான் அடுத்த முல்லையாக்கியுள்ளனர். நாம சொன்னது போலவே நடந்திருப்பது சுவாரஸ்யானதுதான். நாம்தான் காவ்யாதான் அடுத்த முல்லையாக நடிப்பார் என்று சமீபத்தில் அடித்துச் சொல்லியிருந்தோம். அதுபோலவே நடந்து விட்டது கடைசியில்.

அடுத்த முல்லை

அடுத்த முல்லை

முல்லை கேரக்டரில் அடுத்து யார் நடிப்பார் என்பதுதான் சித்ராவின் மரணத்திர்குப் பிறகு எழுந்த முதல் கேள்வியாக இருந்தது .காரணம் யாராலும் ரீப்ளேஸ்செய்ய முடியாத அளவுக்கு அவரது கதாபாத்திரம் அமைந்திருந்தது . அந்த அளவுக்கு சித்ரா அருமையாக அதில் பொரு்நதிப் போயிரு்நதார் .இதனால் இந்த கேரக்டரை என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியாமல் இருந்து வந்தது.

யாரைப் போடலாம்

யாரைப் போடலாம்

பலரும் வேறு நடிகையை நடிக்க வைப்பதற்குப் பதில் பேசாமல் அவரது கேரக்டரையும் முடித்து விடுங்கள் என்று கேட்டு வந்தனர் .ஆனால் அப்டிச் செய்தால்சீரியலை நகர்த்திக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் அந்தக் கோரிக்கையை பரிசீலிக்கவில்லை போலும் நாடகக் குழு.

எப்படி இருக்கிறார் புது முல்லை

எப்படி இருக்கிறார் புது முல்லை

இந்த நிலையில் அவரது வேடத்தில் அவர் வரப் போகிறார் இவர் வரப் போகிறார் என்று சொல்லிவந்தனர். கடைசியில் பார்த்தால் காவியா வந்துள்ளார் .ஆனால் காவ்யாதான் அடுத்து நடிக்கப் போகிறார் என்று நாம் ஏற்கனவே தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருந்தோம் .அதன்படியே தற்போது காவ்யா நடிக்கப் போகிறார் என்று செய்தி வந்துள்ளது.

வந்து நின்ற புதிய முல்லை

வந்து நின்ற புதிய முல்லை

குடும்பத் தலைவர் மூர்த்தியே கூட்டிட்டு வாடா முல்லையை என்று தம்பி கண்ணனிடம் சொல்ல, அவரும், முல்லை அண்ணி என்று கூப்பிட தலை காட்டியபடி வருகிறார் காவ்யா அறிவுமணி. மேக்க்கப்பில் அவர் முல்லை போல இருந்தாலும் மனசில் முல்லையாக அவர் மாறுவாரா என்பதை இனி போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

அலைய விடுவாராம்

அலைய விடுவாராம்

காவியா ஒரு என்ஜீனியர்ங்க, அதாவது ஆர்க்கிடெக். எப்போதும் மாடர்னாக இருக்கப் பிடிக்கும் அவருக்கு ஆண்கள் என்றாலே கடலை முட்டாய் சாப்பிடுவது போலயா்ம், அதாவது நல்லாஅலைய விட்டு வேடிக்கை பார்ப்பாராம். சினிமாவிலும் நடிக்க வேண்டும் என்பதுதான் கனவு .பிகில் படத்தில் நடிக்க சான்ஸ் வந்து கடைசியில் நழுவிப் போயிருச்சாம். பார்க்கலாம் முல்லையாக எப்படி அசத்தப் போகிறார் என்பதையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+