கயல் சீரியல் நடிகரின் மனைவி சூட்டிங் ஸ்பாட்டில் வாக்குவாதம்.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் மூர்த்தி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஐயப்பனின் மனைவி கயல் சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் வந்து வாக்குவாதம் செய்து இருக்கிறார். அப்போது தன்னுடைய கணவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கூறியிருக்கிறார்.
சன் டிவியில் நான்கு வருடங்களுக்கு மேலாக கயல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் பலரும் ரசிகர்களுக்கு ஃபேவரைட் ஆக இருக்கிறார்கள். அதில் நடிகர் ஐயப்பனும் ஒருவர். இவர் இந்த சீரியலில் மூர்த்தி கேரக்டரில் நடித்த வருகிறார். அதாவது கயலின் அண்ணனாக நடித்துக் கொண்டிருக்கிறார். கயல் சீரியலுக்கு முன்பு கனா காணும் காலங்கள் சீரியலில் ஐயப்பன் நடித்திருந்தார்.

கயல் அண்ணன்
அதுபோல கயல் சீரியலில் ஆரம்பத்தில் கயலின் அண்ணன் பொறுப்பில்லாமல் குடித்துவிட்டு இருப்பார். இப்போது தன்னுடைய குடும்பத்திற்காக பொறுப்பாக மாறி இருக்கிறார். தன்னுடைய தங்கைக்கு உறுதுணையாக இருந்து கொண்டிருக்கிறார். சீரியலில் இவர்களுடைய கதை இப்படி போய்க்கொண்டிருந்தாலும் நிஜத்தில் இந்த சீரியல் நடிகரால் என்னுடைய வாழ்க்கையே போயிருச்சு என்று அவருடைய மனைவி என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் கண்ணீரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் மனைவி வாக்குவாதம்
இன்று சென்னை வளசரவாக்கத்தில் கயல் சீரியலுக்கு சூட்டிங் நடைபெற்று இருக்கிறது. அப்போது அங்கு வந்து நடிகர் ஐயப்பனின் மனைவி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பிறகு போலீசார் அங்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், நான் சீரியல் நடிகர் ஐயப்பனுடைய மனைவி. கயல் சீரியலில் அவர் மூர்த்தியாக நடித்திருக்கிறார்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
மூன்று வருஷமா அவர் வீட்டிற்கு காசு தருவது கிடையாது. குழந்தையும் சரியாக கவனிக்கிறது கிடையாது. அதனால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். கடந்த இரண்டு மாதமாக வீட்டுக்கும் வரதே கிடையாது. அதனாலதான் நான் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தேன். ஒரு நியாயம் கேட்கலாம் என்று வந்தேன். ஆனால் உள்ளே யாரும் உள்ளே விடமாட்டிருக்காங்க.

வேண்டுகோள்
என் புருஷன் கூட பேச விடாம தடுக்குறாங்க. நான் கையெடுத்து கும்பிடுறேன். இந்த கயல் சீரியல் வேண்டாம். என் புருஷனை இந்த சீரியலில் இருந்து எடுத்துருங்க. இந்த சீரியலால் என் வாழ்க்கையே போயிடுச்சு. என் புருஷன் இந்த சீரியலை விட்டு வெளியே வந்தால் நாங்க என்ன வேலை செஞ்சாலும் பொழைச்சுக்குவோம் என்று நடிகர் ஐயப்பனின் மனைவி பேசி இருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications