சன் அவார்டு ஃபங்ஷனுக்கு முதல் முதலாக மகனைக் கூட்டி வந்த கயல் சீரியல் நடிகை.. கூடவே இப்படி ஒரு பதிவா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடிக்கும் நடிகை அபிநவ்யா தன்னுடைய மகனோடு சன் அவார்டு ஃபங்சனில் கலந்துகொண்டு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது.
இந்த நிலையில் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு அவார்டு ஃபங்ஷனில் அபிநவ்யா கலந்து கொண்டிருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகைகளும் தற்போது ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் கயலின் சகோதரியாக நடிகை அபிநவ்யா நடித்து வருகிறார்.
கயல் சீரியலில் நடிக்கும் போது அவர் கர்ப்பமாக இருந்த நிலையிலும் தொடர்ந்து சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு சீரியல் தரப்பினர் கொடுத்த ஆதரவு மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொடுத்த ஆதரவால் தன்னால் தொடர்ந்து நடிக்க முடிகிறது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது.
அபிநவ்யா ஆரம்பத்தில் ஒரு செய்தி வாசிப்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து ஒரு சில சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தற்போது கயல் சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் தான் சன் டிவியில் சன் அவார்ட் பங்க்ஷன் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக அபிநவ்யா அவருடைய கணவர் நடிகர் தீபக் குமார் தான்.

நடிகர் தீபக் குமார் ஈரமான ரோஜாவே சீரியலின் ஜீவா மற்றும் கார்த்திக்கின் தம்பியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த ஜோடிக்கு காதல் திருமணம் தான். தற்போது இவர்கள் இருவரும் தங்களுடைய மகனோடு இந்த அவார்டு பங்க்ஷனில் கலந்து கொண்டு வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு,"our first sun awards with laddu thangam" என்று பதிவிட்டு இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications