சீரியல் எடுப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல! கயலில் இந்த ஒரு சீனில் சைத்ரா படும்பாட்டை பாருங்க
சென்னை: சீரியலில் நடிப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல, இதை கயல் சீரியல் ஷூட்டிங்கில் வரும் விபத்து சீனை பார்த்தாலே தெரியுது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கயல் ஆகும். இது டிஆர்பியில் அதிக அளவில் முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியலில் கயல் கேரக்டரில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி. எழில் எனும் கதாபாத்திரத்தில் சஞ்சீவி கார்த்திக் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார்.

இவர்கள் இருவரும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த நண்பர்கள். எழில் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவர், அவர் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அது போல் கயல் ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய சம்பாதியத்தில்தான் மொத்த குடும்பமும் நடத்த வேண்டிய சூழல், நாளடைவில் அவருடைய அண்ணன் மூர்த்தி குடும்பத்தை பார்த்து கொள்கிறார். கயலை நீண்ட ஆண்டுகளாக (இது மெகா சீரியல்) எழில் ஒரு தலைபட்சமாக காதலிக்கிறார். தனது காதலை எழில் சொன்ன போது கயல் மறுக்கிறார். "நண்பனாக பார்த்த என்னை எப்படி நீ காதலிக்கலாம்" என கூறி அவருடன் பேசுவதை தவிர்த்துவிடுகிறார்.
பின்னர் எழிலுக்கு வசதியான கயலின் பெரியப்பா பெண்ணை திருமணம் பேசி முடிக்கிறார் எழிலின் அம்மா, ஆனால் அந்த திருமணம் ஒரு வழியாக தடைபடுகிறது. அதுவரை எழிலை விரும்பாத கயல், தனது தங்கையின் திருமணத்தில் வைத்து தனக்குள் இருக்கும் எழில் மீதான காதலை உணர்கிறார்.
இதையடுத்து எப்படியோ எழிலை காதலிக்க கயல் சம்மதிக்கிறார். ஒரு நாள் மாலை எழிலும் கயலும் மீட் செய்கிறார்கள். அப்போது கயல் சாலையில் நடந்து வரும் போது எழிலின் கண்ணெதிரே ஒரு கார் மோதி விபத்தில் சிக்குறார் கயல். தலையில் பலத்த அடியுடன் துடிக்கும் கயலை மருத்துவமனையில் சேர்க்கிறார் கயல். இந்த விபத்தை செய்தது வேறு யாருமில்லை, வேதவள்ளியின் அண்ணன்தான். கயலால் சிறை சென்ற கோபத்தில்தான் அவர் இப்படி ஒன்றை செய்தார்.
Serial it's Not a Joke Bro 👍❤️ pic.twitter.com/KZFK9zdfrb
— குருவியார் (@Kuruviyaaroffl) January 6, 2024
கயல் சீரியலில் இத்தனை மெனக்கெட்டு விபத்தை விரிவாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு 3 வினாடியில் தட்டி தூக்கினாலே அந்த சீன் முடிந்துவிடும் என்ற கமென்டுகள் வந்தாலும் சீரியல் எடுப்பது என்பது அத்தனை எளிதல்ல என்பதற்கு இந்த ஒரு வீடியோவே போதும்.
அந்த வீடியோவில் கார் ரெடியாக நிற்கிறது. அப்போது கயலுக்கு ஏதோ சிவப்பு நிறத்தில் யூஸ் அன்ட் த்ரோ கப்பில் கொடுக்கிறார்கள். அது அனேகமாக தக்காளி சாஸாக இருக்கலாம். அதை வாயில் வைத்திருக்கிறார். நிற்கும் காரில் கயல் விழுகிறார், உடனே வாயில் வைத்திருந்த "ரத்தத்தை" துப்புகிறார்.
இதையடுத்து அவருக்கு பின்னால் சீரியலில் கண்ணுக்கு தெரியாத ஒரு ரப்பர் போன்று ஆளை தூக்கும் பெல்ட் இருக்கிறது. அதன் உதவியுடன் காரில் மேல் தூக்கிவீசப்பட்டு சாலையில் தேய்த்துக் கொண்டு விழுகிறார். இதற்காக சாலையில் குப்பை கூளங்கள் போடப்பட்டு, கயலுக்கு காயம் போன்ற மேக்கப்பும் போடப்படுகிறது. கயல் தரையில் இழுத்து செல்லப்பட்டு விழுந்ததுமே அங்கிருப்போர் தூக்க ஓடி வருகிறார்கள். ரோல், ஆக்ஷன் என சொல்கிறார்கள், அதற்கேற்ப கயல் சுய நினைவில்லாத படி நடிக்கிறார். இப்படியாகத்தான் கஷ்டப்பட்டு ஒரு சீனை எடுக்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications