அடுத்த அவதாரத்துக்கு ரெடியான கீர்த்தி சுரேஷ்...அசந்து போன ரசிகர்கள்
சென்னை: நடிகையாக கலக்கி கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் எடுத்திருக்கும் புது அவதாரம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் சொன்ன செய்தியைக் கேட்டதும் அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை மழைபோல் பொழிய தொடங்கிவிட்டனர்.
தனது அடுத்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது புது பயணம் குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டது வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

இது என்ன மாயம்
'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிக்க வந்த கொஞ்ச நாட்களிலேயே தன் அழகாலும், திறமையான நடிப்பாலும் சீக்கிரமே முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தார். தெலுங்கில் நடிகை சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட 'மகாநதி' படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.

கேரள கதாநாயகி
பொதுவாக கேரள கதாநாயகிகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் தமிழ் ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ்க்கும் அந்த வரவேற்பை அளிக்க தவறவில்லை.திடீரென்று உடம்பை குறைப்பதாக கூறிக்கொண்டு மெலிந்த தேகத்துடன் வந்த கீர்த்தி சுரேஷ்யை பார்த்து அவரது ரசிகர்கள் கொஞ்சம் மிரண்டுதான் போயினர். தமிழ், தெலுங்கு, மலையாளம், என்று பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்தாலும் தற்பொழுது தயாரிப்பின் பக்கம் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

திரை குடும்பம்
இவரது தாயார் மேனகா ஒரு நடிகையாக இருந்தாலும்,இவரது தந்தையார் சுரேஷ் ஒரு பிரபல தயாரிப்பாளர் ஆவார். அவரது வழியில் தற்போது கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கவிருக்கிறார். முதல் படமாக தன் தாய் மொழியான மலையாளத்தில் எடுக்கவிருக்கிறார்.மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் தமிழில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸை வைத்து விஷ்ணு ஜி ராகவ் இயக்கத்தில் 'வாஷி' என பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரிக்கவிருக்கிறார்.

புது தொடக்கம்
கதாநாயகியாக தாமே நடிக்கவிருக்கும் இப்படத்தின் சூட்டிங் இம்மாத இறுதியில் துவங்க இருப்பதாக தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகியாக கரை சேர்ந்த கீர்த்தி சுரேஷ்.. தயாரிப்பாளராக தப்பிப்பாரா..!! கீர்த்தி சுரேஷின் முயற்சி வெற்றிபெற அவரது ரசிகர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகளும் வாழ்த்தி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications