மூன்று முடிச்சு கழுத்தில் ஏறியதுமே, "அந்த" கட்சிக்கு போறாரா கீர்த்தி சுரேஷ்? சினிமாவுக்கு முழுக்கு?
சென்னை: தென்னிந்தியாவே திரும்பி பார்க்கும்வகையில், கீர்த்தி சுரேஷின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் குறித்த தகவல் ஒன்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக வட்டமடித்து, ரசிகர்களின் கவனத்தை திருப்பி வருகின்றன.
தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷ்.. இவரது முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.. எனவே, குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, விஷால் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.. தமிழ் போலவே தெலுங்கிலும் கீர்த்தி சுரேஷூக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிறந்த நடிகை: தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராகவும் உள்ளார் கீர்த்தி சுரேஷ்.. கடந்த வாரம் கீர்த்தி சுரேஷூக்கு கோவாவில் திருமணம் வெகுசிறப்பாக நடந்து முடிந்தது.. பட வாய்ப்புகள் கீர்த்தி சுரேஷூக்கு இல்லாததால்தான், இந்த திருமண முடிவை அவர் எடுத்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கள் கிளம்பின.

ஆனால், கீர்த்தி சுரேஷூக்கு திருமணம் என்ற செய்தி வெளியானதிலிருந்தே, திருமணத்துக்கு பிறகு அவர் சினிமாவில் நடிப்பாரா? நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவாரா? என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்து வருகிறது.. இந்நிலையில்தான் 4 நாட்களுக்கு முன்பு Fine Time Cinema என்ற யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.
அதில், "கீர்த்தி சுரேஷ் நல்ல திறமையான நடிகை என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், நயன்தாரா போல நாமளும் தனியாக நடிக்கலாம் என்று அசாத்திய நம்பிக்கை வந்ததுதான் அவருக்கு மைனஸாகிவிட்டது. கீர்த்தி சுரேஷ்: அதேபோல, ரஜினி, கமல், அஜித் என முன்னணி ஹீரோக்களும் கீர்த்தி சுரேஷை கைவிட்டுட்டாங்க.. இதனால் பட வாய்ப்புகளும் குறைந்துவிட்டது. என்றைக்கு ரஜினிக்கு தங்கச்சியாக நடித்தாரோ, அப்பவே ஆட்டம் க்ளோஸ். எந்த ஒரு நடிகருக்கும், தங்கையாக நடித்தால், அடுத்தமுறை அவருக்கு ஹீரோயின வாய்ப்பு கிடைக்காது. இது சினிமாவில் எழுதப்படாத சட்டம். அதில் கீர்த்தி சுரேஷூம் சிக்கிக்கொண்டார்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், திருமணத்துக்கு பிறகு நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. தற்போது அவர் கைவசம் ரிசால்வர் ரீட்டா, மற்றும் கண்ணிவெடி என்ற 2 படங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த படங்களின் ஷூட்டிங்கும் முடிந்து, ரிலீசுக்கு காத்திருக்கின்றன. ஆனால், வேறு எந்த படமும் கீர்த்தி சுரேஷுக்கு இன்னும் கமிட் ஆகவில்லையாம். சினிமாவை விட்டு விலக முடிவெடுத்திருப்பதால்தான், அவர் படங்களை கமிட் செய்யாமல் இருப்பதாக சொல்கிறார்கள்.
படத்தயாரிப்பு: அதுமட்டுமல்ல, சினிமாவைவிட்டுவிட்டு, படத்தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் ஈடுபட போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. எனவே, படத்தயாரிப்பு பணிகளில் கீர்த்தி சுரேஷ் ஈடுபடுவாரா? அல்லது மீண்டும் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் நிலவி வரும்நிலையில், மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் புது குண்டு ஒன்றை தூக்கி போட்டுள்ளார்.
அதாவது, BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு, தமிழா தமிழாபாண்டியன் தந்திருந்த பேட்டியில், "திருமணம் முடிந்ததும் கீர்த்தி சுரேஷ், விஜய்யின் கட்சியில் இணைய வாய்ப்புள்ளது.. கீர்த்தி சுரேஷ், திரிஷா இவங்களுக்கெல்லாம் அரசியல் தெரியுமா? சிறைக்கு சென்றிருக்கிறார்களா? தியாகங்கள் பற்றி தெரியுமா? உழைக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி தெரியுமா? இந்தம்மா சம்பளம் 5 கோடி, அந்தம்மாவுக்கு 7 கோடி, விஜய்க்கு 150 கோடி.. மக்கள் பூராவும் தெருக்கோடி" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications