கல்யாணமாகி 2 மாசம்தான் ஆச்சு.. கீர்த்தி சுரேஷ் போட்டோவை உற்று பார்த்தால்.. திடீர் மாற்றம்
சென்னை: நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), தன் அம்மாவைப் போலவே சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். 'இது என்ன மாயம்' படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான கீர்த்தி, அடுத்தடுத்து விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார். கமர்ஷியல் படங்களில் மட்டும் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், 'மகாநடிகை' என்கிற பயோபிக் படத்தில் நடித்ததால் அவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் மகாநடிகை திரைப்படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. தேசிய விருது வென்றதும் கமர்ஷியல் படங்களுக்கு டாடா காட்டிவிட்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார் கீர்த்தி. ஆனால் அவரின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ், தனது நீண்ட நாள் காதலரான ஆன்டனியை கடந்த டிசம்பர் மாதம் கோவாவில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. திரையுலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் தனது சினிமா பணிகளில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார். பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

திருமணத்துக்கு பின் அவர் சினிமாவை விட்டு விலக உள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் நடித்த இரண்டாவது பாலிவுட் படமான 'அக்கா' படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். சரித்திர கதையம்சம் கொண்ட அப்படத்தில் கழுத்தில் வித்தியாசமான தங்க ஆபரணத்துடன் நடித்திருக்கிறார் கீர்த்தி.

'அக்கா' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் கழுத்தில் தாலி இன்றி வந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் அதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி வருகின்றனர். திருமணமான சில நாட்களுக்குப் பிறகு, கீர்த்தி சுரேஷ் தாலியுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். திருமணத்துக்கு பின்னர் தான் பங்கேற்கும் விழாக்களில் கழுத்தில் மஞ்சள் கயிறு பளிச்சென்று தெரியும் அளவுக்கு வந்து கலந்துகொண்டார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால், சமீபத்தில் அவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களில் தாலி அணியாமல் இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள், "திருமணமாகி இரண்டு மாதங்களிலேயே தாலியை மறைத்து விட்டீர்களா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்போது ஏதோ போலி புலி நகம் போன்ற ஆபரணத்தோடு அவர் போட்டோக்களை வெளியிட்டுள்ளாரே தவிர கழுத்தில் தாலியை காணோம். திருமணம் முடிந்ததும் வலுக்கட்டாயமாக தாலியை வெளியே காட்டிய கீர்த்தி இப்போது அதே போல வலுக்கட்டாயமாக தாலி அணியாத புகைப்படங்களை வெளியிட்டுள்ளாரே என்ற ரசிகர்களின் இந்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications