Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமியார் சுஜாதாவை வெறுப்பேற்றும் ரவி மோகன்? நாசூக்காக அவாய்டு பண்ண ரஜினி? கெனிஷாவால் மாறிய வாழ்க்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரொடக்‌ஷன் கம்பெனி ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாரா நடிகர் ரவி மோகன்? இந்த காலகட்டத்தில் புரொடக்‌ஷன் கம்பெனி துவங்கியது சரியா? வீம்புக்கு செய்கிறாரா? வைராக்கியத்துக்கு செய்கிறாரா? தெரியவில்லை.. ஆனால் ரவி மோகன் ஸ்டுடியோ நிறைய வெற்றி படங்களை தரட்டும்" என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Cheyyaru Balu என்ற தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "10 ஆடியோ லான்ச்சுக்கு சமமாக, சென்னை நந்தனம் டிரேட் சென்டரில், பிரம்மாண்டமான பட விழாவை நடத்தியிருக்கிறார் ரவிமோகன்.. இது பலருக்கும் பலவிதமான ஆச்சரியத்தையும், கேள்விகளையும் தந்து வருகிறது.

Television Kenisha Ravi Mohan

வருடத்துக்கு 10 படங்களை எடுக்கக்கூடிய பிரபலமான தயாரிப்பாளர்கள் காணாமல் போயிருக்கும் சூழலில், ஜெயம் ரவி திடீரென படம் தயாரிக்க முனைந்துள்ளார்.. இதற்காக பிரம்மாண்டமான விழா நடத்தியிருக்கிறார்.

திரண்ட கோடம்பாக்கம்

கர்நாடகாவிலிருந்து சிவா அண்ணா, மகாராஷ்டிரா முதல்வர் மகன் தேஷ்முக், ஜெனிலியா, கேரளாவிலிருந்து சீஃப் கெஸ்ட் இப்படி பலரும் வந்துள்ளார்கள்.

இந்த நிகழ்வுக்கு முன்புதான், தன்னுடைய ஈசிஆர் பங்களாவுக்கு ஜெயம் ரவி, கடந்த 10 மாதங்களாக இஎம்ஐ கட்டவில்லை என்று ஜப்தி நோட்டீஸ் வழங்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அந்த ஜப்தி நோட்டீஸை பேங்கில் வந்து பெற்று கொள்வதாக கூறி, அதை வாங்காமல் திருப்பியனுப்பியிருக்கிறார். இந்த பங்களாவை ஆர்த்தியும், ஜெயம் ரவியும் அன்று சேர்ந்து வாங்கியதால், தற்போது இஎம்ஐ கட்டுவதில் இருவருக்குள்ளும் போட்டி உள்ளதாக தெரிகிறது.

ரூ.6 கோடி எங்கே

அதேபோல, தன்னுடைய படத்தில் நடிப்பதாக சொல்லி 6 கோடி ரூபாய் ஜெயம் ரவி வாங்கி கொண்டு, இதுவரை ஒரு சிங்கிள் ஷாட்கூட நடிக்கவில்லை என்று தயாரிப்பாளர் ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்.. அத்துடன், தன்னுடைய பணத்தையும் ஜெயம் ரவி திருப்பி தரவேண்டும் என்று கேட்டு வருகிறார். ஆனால், தான் தந்த கால்ஷீட்டை வீணாக்கிவிட்டதாக ஜெயம்ரவி பதிலளித்துள்ளார்.

இப்படி ஏற்கனவே வாங்கிய பணத்தை திருப்பி தராமல், வீட்டுக்கு இஎம்ஐ கட்டாமல் உள்ள சூழ்நிலையில் மிக பிரம்மாண்டமான படப்பூஜை நடத்தியிருக்கிறார்.. எப்படியும் 4 கோடி ரூபாய் செலவு செய்திருப்பார்.. இந்த அளவுக்கு செலவு செய்து பூஜை செய்து, சொந்தமாக புரொடக்‌ஷன் கம்பெனியையே துவங்கியிருக்கிறார் என்றால், இதற்கு பின்னணியில் இருப்பது யார்? என்றெல்லாம் கேள்விகளை பலரும் எழுப்பி வருகிறார்கள்.

மாமியார் சுஜாதா விஜயகுமார்

தன்னுடைய புரொடக்‌ஷனில் தானே ஒரு படம் நடிக்க போகிறாராம் ரவிமோகன்.. யோகிபாபு வைத்து படம் எடுக்க போகிறார், எஸ்ஜே சூர்யாவை வைத்து எடுக்க போகிறார், சிவகார்த்திகேயனை வைத்தும் படம் எடுக்க போகிறார்.. இந்த படங்களை தானே டைரக்ட்டும் செய்ய போகிறாராம் ரவி மோகன். ஆனால், இதையெல்லாம் தன்னுடைய மாமியார் சுஜாதா விஜயகுமாரை வெறுப்பேற்றவே ரவி மோகன் செய்வதாக தெரிகிறது.

சினிமாவே என்னவென்று தெரியாத ஒரு நபர், இப்படியொரு புரொடக்‌ஷன் நிறுவனத்தை துவங்கியிருந்தால் பரவாயில்லை. ஆனால், சினிமாவில் ஊறியவர், ஆக்‌ஷன், கட் கேட்டு வளர்ந்தவர், வெறுப்பிலும், வைராக்கியத்திலும் இப்படி துவங்கியிருக்கிறாரா? என்பது ஆச்சரியம்தான்.. இதற்கெல்லாம் காசு எங்கிருந்து வந்தது என்பதும் மர்மம்தான்..

தவிர்த்த ரஜினிகாந்த்

ரஜினியையும் இந்த விழாவுக்கு அழைத்திருக்கிறார் ஜெயம்ரவி.. ஆனால், நிச்சயமாக தன்னால் இதில் கலந்து கொள்ள முடியாது என்ற ரீதியில் ரஜினி சொல்லிவிட்டாராம்..காரணம் சுஜாதா விஜயகுமாரும், ரஜினியும் ஒன்றாக பிலிம் இன்ஸ்டிடியூடில் படித்தவர்கள்.. அந்த நட்பு காரணமாக, ரஜினி இவ்விழாவை தவிர்த்திருப்பதாக தெரிகிறது.

தன்னுடைய எல்லா வளர்ச்சிக்கும் காரணம் கெனிஷாதான் என்று சொல்லியிருக்கிறார்.. இதனை சிலர் வரவேற்றாலும், பெரும்பாலும் அவருக்கு எதிராகவே சோஷியல் மீடியாவில் டிரோல் செய்து வருகிறார்கள்.. ஆர்த்தி - ஜெயம்ரவி தம்பதியரின் விவகாரம் கோர்ட்டில் உள்ளதால் அதை பற்றி பேச முடியாது.. ஆனால், தோளுக்கு மீது வளர்ந்த பிள்ளைகளின் மனநிலைமை எப்படி இருக்கும்?

புரொடக்‌ஷன் கம்பெனி ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாரா ரவிமோகன்? இந்த காலகட்டத்தில் புரொடக்‌ஷன் கம்பெனி துவங்கியது சரியா? வீம்புக்கு செய்கிறாரா? வைராக்கியத்துக்கு செய்கிறாரா? புரொடக்‌ஷன் என்பது மிகப்பெரிய ரிஸ்க்.. இந்த ரிஸ்க்கில் தெரிந்துதான் இறங்கியிருக்கிறாரா? என்பதெல்லாம் இனி வரும் காலங்களில்தான் தெரியவரும். எனினும், ரவிமோகன் ஸ்டுடியோ நிறைய வெற்றி படங்களை தரட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+