ராத்திரி 10க்கு போனால் காலை ஒடிச்சிடுவேன்.. தட்ஸ் கேப்டன்.. அண்ணியாரிடம் தந்த கணக்கு! சபாஷ் கிங்காங்

Subscribe to Oneindia Tamil
Vijayakanth Anniyar fantastic qualities and and sabitha joseph praises King Kong daughter Grand Wedding Reception

vijayakanth, anniyar fantastic qualities, King Kong daughter Grand Wedding Reception jaishankar, விஜயகாந்த் அண்ணியார் அருமை பண்பு, கிங்காங் மகளின் திருமணம்,

Television, Vijayakanth, Anniyar, தொலைக்காட்சி, விஜயகாந்த், அண்ணியார்,

அண்ணியாரிடம் தந்த கணக்கு.. ராத்திரி 10 மணிக்கு போனால் காலை ஒடிச்சிடுவேன்.. தட்ஸ் விஜயகாந்த்: பிரபலம்

சென்னை: கிங்காங் யாரிடமும் உதவியாய் சென்று கேட்கவில்லை.. அனைவருக்கும் பத்திரிகை மட்டுமே வைத்துவந்தார்.. இதை விமர்சனம் செய்பவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை.. தன்னுடைய மகளுக்கு கல்யாணத்தை நடத்தி, அதை 100 கோடி ரூபாய்க்கு ஆவணப்படமாக விற்க போகிறாரா கிங்காங்? ஒரு சின்ன நடிகர், தன்னுடைய மகளுக்கு பல பிரபலங்கள் வந்து வாழ்த்தினால் சந்தோஷம் என்று நினைத்துதான் பத்திரிகை தந்தார். அதையும் விமர்சிப்பவர்களை என்னவென்று சொல்வது?" என்று மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.

Behind Talkies அன்றைய காலங்களிலும் நடிகர்களை விழாவுக்கு அழைத்தால் பணம் தர வேண்டும்.. குறைந்தது 5 ஆயிரம் ரூபாயாவது தரவேண்டும்..ஆனால், நடிகர் ஜெய்சங்கர் தங்களை விழாவுக்கு அழைப்பவர்களிடம், ஆதரவற்றோர் இல்லத்தில் சென்று, அந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை தந்துவிட்டு, அதற்கான ரசீதை வாங்கிவிட்டு வந்துடுங்க என்பார்..

ஜெய்சங்கர் சபாஷ்

ரசீதை காட்டினால், உடனே யார் அழைத்தாலும் அவர்களது விழாவில் கலந்துகொள்வார்.. இதனால் அவரை பலரும் தேடி வந்து விழாக்களுக்கு அழைத்து சென்றார்கள்.. இப்படியெல்லாம் நடிகர்கள் அன்று இருந்தனர். தனக்கென்று ஒரு யூனிட்டையே வைத்திருந்தார் ஜெய்சங்கர்.. எந்தெந்த கேரக்டருக்கு யார் யாரை போட வேண்டும் என்று சொல்லிவிடுவார்..

ஏனென்றால், ஜெய்சங்கர் ஒருவரை பரிந்துரைத்தாலே, அவர்கள் பாதி சம்பளத்தைதான், அந்த படத்துக்காக பெற்றுக் கொள்வார்கள்..தனக்கான யூனிட்டை, இப்படி வைத்திருந்தார் ஜெய்சங்கர்.. இதனால் பல டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் பிழைத்தனர். இப்போதெல்லாம் அப்படியில்லை.. 2 படம் ஓடினாலே, நான்தான் முதலமைச்சர் என்கிறார்கள்.

சின்ன நடிகர் - பெரிய சம்பளம் இல்லை


கிங்காங்கை பொறுத்தவரை, அவர் சின்ன நடிகர்.. சம்பளமும் பெரிதாக கிடையாது.. 250 கோடியை விட்டுட்டு வந்து தெருக்கோடியில் நிற்கிறேன் என்று விஜய் சொன்னதுபோல கிடையாது.. கிங்காங் வெறும் ரூ.25000, 50 ஆயிரம் வாங்கலாம். அதுகூட முழுமையாக வராது..பல நடிகர்களுடன் நடித்ததால், அவர்களுக்கு பத்திரிகை கொண்டுபோய் தரும்போது, சிலர் உதவி செய்வதுண்டு.. இப்படி தரப்படும் பணம், அவர்களது திருமணத்துக்கு உபயோகப்படும்..

உரிய நேரத்தில் பணம் கொடுத்து உதவுவதும் தவறில்லை.. தன்னுடன் நடித்தவர்கள், பழகியவர்களிடம்தான் உரிமையுடன் பத்திரிகை வைக்க முடியும். அந்தவகையில் கிங்காங் தந்திருக்கலாம்.விஜய் போன்றவர்கள் 2 கோடி ரூபாய் தந்துகூட உதவியிருக்கலாம்.. ஆனால், அவரே வேறு ஏதோ விழாவுக்கு வெறும் ரூ.500 தந்தாராம்.. இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் ரசீதுடன் ஒரு போஸ்ட் பார்த்தேன்.. அவரது அப்பாவை போலவே, விஜய்யும் , யாருக்கும் செலவு செய்ய மனதில்லை.

யாரிடமும் உதவி கேட்கவில்லை

ஆனால், கிங்காங் யாரிடமும் உதவியாய் சென்று கேட்கவில்லை.. அனைவருக்கும் பத்திரிகை மட்டுமே வைத்துவந்தார்.. இதை விமர்சனம் செய்பவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை..

தன்னுடைய மகளுக்கு கல்யாணத்தை நடத்தி, அதை 100 கோடி ரூபாய்க்கு ஆவணப்படமாக விற்க போகிறாரா கிங்காங்? அவர் ஒரு சின்ன நடிகர்.. தன்னுடைய மகளுக்கு பல பிரபலங்கள் வந்து வாழ்த்தினால் சந்தோஷமாக இருக்குமே என்று நினைத்துதான் பத்திரிகை தந்தார்.

இன்னும் பல நடிகர்கள் கல்யாணத்துக்கு வந்திருக்கலாம்.. சின்ன நடிகரை பெருமைப்படுத்துவதில் தவறில்லையே? எங்கேயோ பணியிலிருந்த முதலமைச்சரே ஓடோடி வந்துவிட்டாரே? அவர் நேரில் வரவேண்டிய தேவையே இல்லையே? அமைச்சர் மா.சுப்பிரமணியன் போன்றோரை தன் சார்பாக அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால், நேரில் செல்ல வேண்டும் என்று நினைத்த முதல்வரின் அந்த மனசுதான் காரணம். ஒருவரை மதித்து வந்ததுதான் அவரது மனிதநேயம்.

நடிகர் சங்க பொறுப்பில் இருந்ததால் விஷால் வந்துதான் ஆக வேண்டும்.. அந்தவகையில் விஷால் வந்தது நல்ல விஷயம்தான்.. அதேபோல மற்ற நடிகர்களும் வந்திருக்கலாம்.. பணம் தராவிட்டாலும், கல்யாணத்தில் பங்கேற்றிருக்கலாம்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

அண்ணியாரிடம் கணக்கு

தொடர்ந்து விஜயகாந்த் பற்றி சபிதா ஜோசப் பேசும்போது, "விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது, அனைத்தையும் முறைப்படி செய்தார்.. எல்லா பிரச்சனைகளையும் உடனடியாக கவனிப்பார்.. தன்னுடைய சொந்த காசை செலவு செய்துதான், நடிகர் சங்கத்துக்கு செல்வார்.. தான் அங்கு சாப்பிடுவது முதல் பிறருககு சாப்பாடு வாங்கி தருவதுவரை சொந்த பணத்தில்தான் செலவு செய்தார்..அவரது கார் டிரைவர் எனக்கு நன்றாக தெரியும்.,..

தினமும் காலையில் பணம் தருவது அண்ணியார்தான்.. எனவே, வீடு திரும்பியது, அன்றைய தினம் ஆகும் செலவை அண்ணியாரிடம் தருவதை நான் பார்த்திருக்கிறேன்..

விஜயகாந்த் தலைமைநடிகர் சங்கத்திற்கு வந்து சிலர் தண்ணி அடித்துவிட்டு, கலாட்டா செய்கிறார்கள் என்பதால், "ராத்திரி 10 மணிக்கு மேல யாராவது நடிகர் சங்கம் பக்கம் போனால் காலை ஒடிச்சிருவேன்" என்றார் விஜயகாந்த்.. அப்போது முதல் யாரும் இரவு 10 மணிக்கு மேல் அந்த பக்கம் போவதேயில்லை.. இப்படியெல்லாம் கண்டிப்புடன் இருந்தார் விஜயகாந்த்.

இன்று விஜயகாந்த் இன்றிருந்தால், மொத்த செலவையும் செய்து, கிங்காங் மகளின் கல்யாணத்தையே தன்னுடைய தலைமையில் நடத்தி முடித்திருப்பார்" என்றார்.

King Kong daughter Grand Wedding Reception and sabitha joseph says about Anniyar, vijayakanth , jaishankar,

நடிகர் சங்கத்திற்கு வந்து சிலர் தண்ணி அடித்துவிட்டு, கலாட்டா செய்கிறார்கள் என்பதால், "ராத்திரி 10 மணிக்கு மேல யாராவது நடிகர் சங்கம் பக்கம் போனால் காலை ஒடிச்சிருவேன்" என்றார் விஜயகாந்த்.. இப்படியெல்லாம் கண்டிப்புடன் இருந்தார் விஜயகாந்த். இன்று விஜயகாந்த் இன்றிருந்தால், மொத்த செலவையும் செய்து, கிங்காங் மகளின் கல்யாணத்தையே தன்னுடைய தலைமையில் நடத்தி முடித்திருப்பார்" என்கிறார் சபிதா ஜோசப்

{https://lh3.googleusercontent.com/a/ACg8ocJWPKElIHjZrs8SP6KWxjayVJvW4OFt5t7gkWqNEMw2AKqtjdnM=s40-p}
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+