"கிஷ்கிந்தா காண்டம்" படம் ஹைப் ஏற்றிய அளவுக்கு நல்லா இல்லையே.. ஓடிடியில் பார்த்த ரசிகர்களின் கேள்வி
சென்னை: கடந்த சில மாதங்களாக மலையாள சினிமாவின் முக்கிய பேச்சுப்பொருளாக இருந்த 'கிஷ்கிந்தா காண்டம்' திரைப்படம் ஓடிடி தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தியேட்டரில் வெளியான போது மிகப்பெரிய வரவேற்பை பெற்று, மலையாள சினிமாவின் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக திகழ்ந்த இந்த படம், ஓடிடி தளத்தில் வெளியான பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
படம் மிகவும் ஸ்லோவாக செல்கிறது என்றும், எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை என்றும் பல ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். குறிப்பாக, படத்தின் இரண்டாம் பகுதி மிகவும் இழுபறி தன்மையுடன் இருப்பதாகவும், கதை சொல்லும் முறை மிகவும் மெதுவாக இருப்பதாகவும் பலர் குறிப்பிடுகின்றனர்.

மெய்யழகன் விவாதம்: இந்த சூழ்நிலை, தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு முக்கியமான கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. அதாவது, மலையாள படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே கிடைக்கும் அதிகப்படியான ஆதரவுக்கு காரணம் என்ன? முன்னதாக, 'மெய்யழகன்' போன்ற தமிழ் படங்கள் திரையரங்குகளில் மெதுவாக செல்வதாக கூறி தமிழ் ரசிகர்களே விமர்சித்திருந்தனர். ஆனால், கிஷ்கிந்தா காண்டம் போன்ற மலையாள படங்கள் அதேபோல் மெதுவாக சென்றாலும், தமிழ் ரசிகர்கள் அதனை புகழ்ந்து திரை விமர்சனங்களை எழுதுவது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
ஓவராக புகழப்பட்ட படம்?: ஓடிடி தளங்களில் கிஷ்கிந்தா காண்டம் படத்தை பார்த்த பல ரசிகர்கள், இந்த படம் ஓவராக புகழப்பட்ட படம்தான் என்று கருதுகின்றனர். தியேட்டரில் பார்க்கும்போது கூட்டம், சூழல் என பல காரணங்களால் படம் நன்றாக இருப்பதாக தோன்றும். ஆனால், வீட்டில் தனியாக அமர்ந்து பார்க்கும் போது படத்தின் குறைகள் தெளிவாக தெரியும் என்று பலர் கூறுகின்றனர்.
மலையாள சினிமா மீதான கேள்வி: ஓடிடி தளங்களின் வருகையால், திரைப்படங்களை வீட்டில் உட்கார்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதால், திரைப்படங்களின் உண்மையான தரத்தை அறிந்து கொள்ளவும் உதவுகிறது. தியேட்டரில் கூட்டம் மற்றும் சூழ்நிலை காரணமாக பல குறைகள் மறைக்கப்பட்டு விடும். ஆனால், ஓடிடி தளத்தில் தனிமையில் படத்தை பார்க்கும் போது, படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ஆழமாக ஆராய்ந்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
ஒரு படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிப்பது முற்றிலும் தனிப்பட்ட விருப்பம். ஆனால், கிஷ்கிந்தா காண்டம் படம் போன்ற சில படங்கள், தியேட்டரில் வெளியாகும் போது பெறும் வரவேற்பு, ஓடிடி தளங்களில் வெளியாகும் போது பெறும் விமர்சனம் ஆகியவற்றை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. தமிழில் வாழை போன்ற படங்களும் ஓடிடியில் விமர்சனத்திற்கு உள்ளாகின. ஓடிடி தளங்கள் படங்களைப் பற்றிய உண்மையான பார்வையை நமக்கு வழங்குகின்றன என்பதை மறக்கக்கூடாது.












Click it and Unblock the Notifications