Kiss movie review: ஒரு ஃபேன்டஸி காதல் கதை! - கவின் நடித்த 'கிஸ்' படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ( Kiss movie review) இன்று தியேட்டர்ல ரிலீசான புதுப் படம் கவின் நடிச்ச கிஸ்! நம்ம சிவகார்த்திகேயன் மாதிரி சின்னத்திரையில இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, டாடா, லிஃப்ட்னு ஹிட் கொடுத்து நம்பிக்கையான ஹீரோவா வளர்ந்து வந்த கவினுக்கு, ஸ்டார் மற்றும் பிளடி பெக்கர் படங்கள் கொஞ்சம் தடுமாற வச்சுச்சு. அதனால, இப்போ ஒரு பெரிய ஹிட் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்துல இருக்காரு. இந்த நேரத்துல வந்திருக்க இந்த கிஸ் படம் எப்படி இருக்குன்னு ரசிகர்களோட கருத்துக்களை ஒரு ரிவ்யூவா பார்க்கலாம் வாங்க!

Kavin vijay tv bigg boss

ஃபேன்டஸி கலந்த காதல்

இந்த 'கிஸ்' படத்தை நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கியிருக்காரு. இதுதான் அவருடைய முதல் படம். கவினுக்கு ஜோடியா ப்ரீத்தி அஸ்ரானி நடிச்சிருக்காங்க. இவங்க கூட விடிவி கணேஷ், சக்தி, ஆர்.ஜே.விஜய் எனப் பலரும் நடிச்சிருக்காங்க. ஜென் மார்ட்டின் இசையமைச்சிருக்காரு.

படத்தின் கதைக்களம் ஒரு ஃபேன்டஸி கலந்த ரொமாண்டிக் காமெடி டிராமா. ஒரு சாதாரண இளைஞனோட வாழ்க்கையில் வர்ற பிரச்சனைகள், அவனோட காதலும் குடும்ப உறவுகளும் எப்படிப் பாதிக்கப்படுதுங்கறதை இந்தப் படம் பேசுது.

ரசிகர்கள் கருத்து

படத்தோட முதல் ஷோ பார்த்த ரசிகர்கள், தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்கள்ல பகிர்ந்துட்டு வர்றாங்க. ஒரு ரசிகர், "சரியான டைட்டில், நேர்த்தியான நடிப்புன்னு கவின் படத்தை தாங்கிப் பிடிச்சிருக்காரு. ப்ரீத்தி, விடிவி கணேஷ், ஆர்.ஜே.விஜய் நடிப்பு நல்லா இருக்கு. படத்துல இருக்குற ஃபேண்டஸி, ஏடிஎம் படத்தோட க்ளைமாக்ஸை ஞாபகப்படுத்துது. முதல் பாதியில் சில மந்தமான காட்சிகள் இருந்தாலும், இடைவேளையில் வரும் டான்ஸ் மற்றும் 2கே கிட்ஸ் காட்சிகள் சூப்பரா இருக்கு. சில அழகான தருணங்களும், காமெடிகளும் இருக்கு. மொத்தத்தில் கிஸ் - மிஸ்" எனப் பதிவிட்டுள்ளார்.

Kavin vijay tv bigg boss

இன்னொரு ரசிகர், "இயக்குனர் சதிஷோட கதைக்களம் நல்லா இருக்கு. ஆனால் படத்தின் முதல் பாதி மெதுவாகவும், இரண்டாம் பாதி சுவாரஸ்யமாகவும் இருக்கு"னு சொல்லிருக்காரு. அதே சமயம், சில ரசிகர்கள் படத்தின் கிளைமாக்ஸ் சரியில்லன்னு குறை சொல்லியிருக்காங்க.

கவின் ரசிகர்கள் சிலர், இந்த படத்திற்கு சிலர் வேண்டுமென்றே நெகடிவ் விமர்சனங்களைப் பரப்பறாங்கன்னு சொல்றாங்க. குறிப்பா, வெளிநாட்டுல படம் பார்த்த ஒரு விமர்சகர், டாடா படத்தையே நல்லா இல்லைன்னு சொன்னவர், அதனால இவர் வேண்டுமென்றே எதிர்மறை விமர்சனம் கொடுக்குறாருன்னு குற்றஞ்சாட்டிருக்காங்க.

மொத்தத்துல, இந்த கிஸ் படம் சுவாரஸ்யம் குறைந்ததாகவே இருக்குன்னு பெரும்பாலான ரசிகர்கள் கருத்து தெரிவிச்சிருக்காங்க. இருந்தாலும், இந்த விமர்சனங்களையும் தாண்டி, கிஸ் படம் பாக்ஸ் ஆபிஸ்ல வசூல் வேட்டையாடி வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+