தேவராஜை காலி பண்றேன்னு சொன்ன நாகப்பன் வீட்டில் மீனில் குண்டு!
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் நிமிஷத்துக்கு நிமிஷம் என்ன நடக்குமோ... ஏது நடக்குமோன்னு திகிலாகும்படி ரெண்டு குடும்பத்துக்கு இடையே விரோதம் வளருது.
கோயில் திருவிழாவுக்கு போகலைன்னு சொன்ன தேவராஜன், அதாவது நிழல்கள் ரவி, திருவிழாவுக்கு கிளம்பின நாகப்பனின் ஆட்களை போட்டுத் தள்ளி, அவரை கோயிலுக்கு போகவிடாம செய்துடறார்.
இப்போ போலீஸ் முன்னால தான் நல்லவன்.. போலீஸ் சொன்னதை அமைதியா கேட்டுகிட்டு வீட்டுலதான் இருந்தேன். ஆனா, ஆத்தா பட்டினி கிடப்பதை பொறுத்துக்க முடியாது. நான் திருவிழாவை நடத்தறேன்னு சொல்லிட்டு மேள தாளத்துடன் கிளம்பி திருவிழாவை நடத்தறார்.

நாகப்பன்
தன்னுடைய ஆட்களை கொன்ற தேவராஜை பழிவாங்குவேன்னு போலீசிடம் நாகப்பன் சவால் விட , தேவராஜ் வீட்டுக்கும், நாகப்பன் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடறாங்க.

அமைதி
தேவராஜ் அமைதியா இருந்து காரியம் சாதிக்கறவர்... நாகப்பன் அவசரப்பட்டு கத்தி கத்தி காரியத்தைக் கெடுத்துக்கறவர்னு போலீஸ் ஒரு கணக்கு போட்டு வேலை செய்யறாங்க.

பொண்ணுங்க
நாகப்பனின் ரெண்டு பொண்ணுங்களும் அப்பாவை எப்படி காப்பாத்தறதுன்னு யோசிக்கறாங்க. ரெண்டாவது பொண்ணு ரொம்ப பயந்த சுபாவம். முதல் பொண்ணு தைரியசாலி.

மீனில் பாம்
எப்படியோ கவனமா இருந்தும் தேவராஜை கொல்லுவேன்னு சொன்ன நாகப்பன் வீட்டுக்கு வந்த மீனில் பாம் வச்சுடறாங்க தேவராஜின் ஆட்கள். மீனவர்கள் நாகப்பனின் ஆட்கள் என்பதால் சுலபமா பாம் வைக்க முடியுது தேவராஜால்.

காப்பாத்தணும்
அப்பாவைக் காப்பாத்தணும்னு ரெண்டு பொண்ணுங்களும் துடிச்சு.. வீட்டுல வித்தியாசமா ஏதாவது நடக்குதான்னு ஆராய்ச்சி பண்றாங்க.. ரெண்டு பேர் கண்ணுலயும் பாமிருக்கும் மீன் தென்படலை.

வீட்டில்
தேவராஜ் வீட்டில் தன் தங்கை பொண்ணுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்துகிட்டு மிக அமைதியா இருக்கார் அவர். தேவராஜின் மனைவியும், தங்கையும் இங்கே நாகப்பன் ஆட்களால் என்ன நடக்குமோன்னு கவலையில் இருக்காங்க.
இப்படி நடுநடுக்கத்தில் ரெண்டு குடும்பமும் தவிக்க..தேவராஜை விட நக்கப்பன் நல்லவர்ன்ற மாதிரி இப்போ தெரியுது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications