விஜய்யின் அரசியல் வாழ்க்கை.. சீரியலில் கண்கலங்க வைத்த எஸ்.ஏ சந்திரசேகர்.. இப்படி ஒரு பஞ்ச் டயலாக்கா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் சீரியலில் நடிகர் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே பல திரைப்படங்களை இயக்கி நடித்து இருந்தாலும் இப்போது சின்ன திரையில் முதல் முறையாக இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் சந்திரசேகர் பேசிய வசனம் தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
ஏற்கனவே நடிகர் விஜய் புதியதாக அரசியல் கட்சியை தொடங்கியிருக்கும் நிலையில் அது குறித்த விவாதங்களும் அட்வைஸ்களும் இணையத்தில் பலரும் செய்து கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் விஜய்யின் தந்தை கிழக்கு வாசல் சீரியலில் பேசிய வசனங்களும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியலில் நடிகர் விஜய்யின் அப்பாவும் பிரபல இயக்குனராகவும் இருக்கும் சந்திரசேகர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். ஒரு குடும்பத்தில் தந்தையாக முக்கிய கேரக்டரில் இருக்கும் எஸ்.ஏ சந்திரசேகர் தன்னுடைய பிள்ளைகளிடம் நடந்து கொள்ளும் விதம்... பிள்ளைகளுக்காக பார்த்து பார்த்து பல விஷயங்களை செய்திருந்தாலும் இப்போது வயதான காலத்தில் அவர்கள் செய்யும் அலட்சியங்கள் போன்றவை தான் இந்த சீரியலில் மையக்கருத்தாக இருக்கிறது.
இதில் எஸ் ஏ சந்திரசேகர் நடிக்கிறார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே பல நடிகர்களை இயக்கிய இவருக்கு நடிக்க சொல்லியா கொடுக்க வேண்டும். தன்னுடைய மனதில் இருக்கும் மொத்த கோபத்தையும் சீரியலில் டயலாக்கில் காட்டிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இந்த சீரியல் தொடங்கும் போது விஜய்யும் அவருடைய அப்பாவும் சிறு சிறு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த போது விஜய்க்கு அட்வைஸ் செய்ற மாதிரியே பல டயலாக்குகள் இடம் பெற்று இருந்தது.

இப்போது நடிகர் விஜய்யும் அவருடைய அப்பாவும் சேர்ந்து விட்ட பிறகு கதையில் பெரிய அளவில் வித்தியாசம் தெரியவில்லை. அதே சமயத்தில் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கிறார். தன்னுடைய கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் வைத்திருக்கும் நிலையில் அது குறித்து பல பிரபலங்களும், ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர். பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இப்படியான நிலையில் கிழக்கு வாசல் சீரியலில் பிப்ரவரி ஆறாம் தேதி முதல் 10ஆம் தேதி வரைக்கும் ஆன ப்ரோமோ வெளியேறி இருக்கிறது. அதில் சுவாமியப்பனாக நடிக்கும் எஸ் ஏ சந்திரசேகரும் அவருடைய மனைவி பாஞ்சாலியும் அழுது கொண்டிருக்கின்றனர். அப்போது சுவாமி அப்பனின் மகன் நேற்று தன்னுடைய மகள் மீது சத்தியம் செய்து தான் இனி குடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு இன்று மீண்டும் குடித்துவிட்டு வந்திருக்கிறார்.

அது குறித்து பாஞ்சாலி கேள்வி கேட்கிறார். நேற்று தானடா உன் பொண்ணு மேல சத்தியம் பண்ணிட்டு இனி நான் குடிக்கவே மாட்டேன்னு அழுதுட்டு இருந்த... அப்புறம் இன்னைக்கும் குடிச்சிட்டு வந்திருக்கியே? என்று அவர் கேள்வி கேட்க அதற்கு அவருடைய மகன், என் புள்ள மத்தவங்க முன்னால் அவமானப்பட்டு நிற்கிறத என்னால பார்க்க முடியல. அதனால தான் நான் குடிச்சேன் என்று சொல்ல, அதனால் கோபமான சுவாமியப்பன், போதும் நிறுத்துடா..
உனக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? உன் புள்ள அவமான படுறதை தாங்க முடியாமல் நீ குடிச்ச, அப்போ என் புள்ள அவமானபடுறதை தாங்க முடியாம நான் குடிக்கவா? போய் சாராய பாட்டிலை வாங்கிட்டு வா... ரெண்டு பேரும் சேர்ந்து குடிச்சிட்டு சாவோம் என்று சொல்லிவிட்டு சுவாமியப்பன் போக, அவருடைய காலில் விழுந்து மகன் கதறி அழுது கெஞ்சுகிறார். இதனால் மனம்மாறும் சுவாமியப்பன் கணேசா நீ நல்லா இருக்கணும் டா என்று கண்ணீரோடு பேசிக் கொண்டிருக்கிறார். இந்த ப்ரோமோ வெளியானதை தொடர்ந்து இணையத்தில் அதிகமான ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

அதாவது இந்த சீரியலில் ஒருவர் வீட்டில் குடிப்பதால் அவரை சார்ந்த மனைவி, அப்பா, அம்மா, குழந்தைகள் எல்லோரும் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதை தத்ரூபமாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு தந்தையாக சரியான அட்வைஸை சுவாமியப்பனாக எஸ் ஏ சந்திரசேகர் கொடுத்திருக்கிறார் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications