விக்ரம் கோட் வேர்ட் கவனிச்சீங்களா? 2026 தேர்தல் சூடுபிடித்தது! திரை பிரபலங்கள் வாக்களிப்பு
சென்னை: 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 ஏப்ரல் 23 அன்று மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. காலை 7 மணி முதலே வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

வரிசையில் பிரபலங்கள்
நடிகர் அஜித் குமார் வழக்கம்போல இந்த முறையும் அதிகாலை நேரத்திலேயே சென்னை வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அஜித் ஒவ்வொரு வருஷமும் முதல் ஆளாக வாக்கு செலுத்த வந்துவிடுவார் அதே போல இந்த முறையும் ஏழு மணிக்கு வாக்கு செலுத்துவது தொடங்க இருந்த நிலையில் அவர் 6:30 மணிக்கு காத்திருந்து வாக்கு செலுத்தி இருக்கிறார்.
அதேபோல், விஜய் தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் சார்பில் இந்த தேர்தலில் அரசியல் களமிறங்கியுள்ள நிலையில், தனது வாக்கை பதிவு செய்தது பெரும் கவனம் பெற்றது.
முன்னணி நட்சத்திரங்களின் வருகை
இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்தனர். காலை முதலே நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்த காட்சி, தேர்தல் மீதான உற்சாகத்தை வெளிப்படுத்தியது.
குடும்பத்துடன் வாக்களித்த பிரபலங்கள்
நடிகர் பிரபு தனது மனைவி, மகன், மருமகளுடன் டி.நகர் பகுதியில் உள்ள பள்ளியில் வாக்களித்தார். அதேபோல் பிரசன்னா மற்றும் அவரது மனைவி சினேகா பனையூர் அரசு பள்ளியில் வாக்கு பதிவு செய்து புகைப்படங்களை பகிர்ந்தனர்.
சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் வந்து, "ஜனநாயக கடமை ஒவ்வொருவரின் உரிமை; அதை மறக்காமல் செய்ய வேண்டும்" என வேண்டுகோள் வைத்தார்.
விக்ரம் உடை விவாதம்
நடிகர் விக்ரம் வாக்குச்சாவடிக்கு வந்தபோது அவர் அணிந்திருந்த உடை சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது. சமீப காலமாக அரசியலில் ஈடுபட்டுள்ள விஜய் பயன்படுத்தும் வெள்ளை சட்டை, சந்தன நிற பேண்ட் போன்ற தோற்றத்தில் வந்ததால், "இது விஜய்க்கு ஆதரவா?" என்ற கேள்விகளும் எழுந்தன.

மேலும் பலர் வாக்களிப்பு
நடிகர்கள் ஜீவா, ஜெய் உள்ளிட்ட பலரும் அதிகாலையிலேயே வந்து வாக்களித்தனர். திரையுலக பிரபலங்கள் வரிசையாக வந்து வாக்களித்தது, ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தேர்தல் களம்
இந்த தேர்தலில் முக்கியமாக திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை முக்கோணப் போட்டியில் உள்ளன. பல இடங்களில் கடும் போட்டி நிலவி வருவதால், வாக்குப்பதிவு சதவீதமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் உற்சாகம்
மாநிலம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருவது, இந்த தேர்தலை உண்மையான ஜனநாயக விழாவாக மாற்றியுள்ளது.
மொத்தத்தில், 2026 தேர்தல் சினிமா பிரபலங்களின் பங்கேற்பும், மக்களின் அதிக ஈடுபாடும் காரணமாக மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. முடிவுகள் வெளியாகும் வரை இந்த அரசியல் சூடு தொடர்ந்து நீடிக்கும் என்பது உறுதி.
-
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?












Click it and Unblock the Notifications