Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் சோகம்! சாமி பட வில்லன் கோட்டா ஸ்ரீனிவாச ராவை தொடர்ந்து மனைவியும் காலமானார்! அதிர்ச்சி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் சாமி உட்பட பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்த, தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான கோட்டா ஸ்ரீனிவாச ராவ் கடந்த மாதம் காலமானார். அவரது மறைவின் சோகம் மறைவதற்குள்ளாகவே அவரது மனைவி ருக்மிணி காலமானது தெலுங்கு திரையுலகை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ருக்மிணி திங்கட்கிழமை மதியம் தனது இல்லத்தில் காலமானார். ஒரு மாதத்திற்குள் இந்த தம்பதியினர் மரணமடைந்தது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kota Srinivasa Rao tamil cinema

கோட்டாவின் நடிப்புப் பயணம்

கோட்டா ஸ்ரீனிவாச ராவ் 1942 ஜூலை 10 ஆம் தேதி கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தார். அவரது தந்தை ஒரு ஆயுர்வேத மருத்துவர். ஆரம்பத்தில் வங்கியில் அரசு வேலை பார்த்த கோட்டாவுக்கு நடிப்பு மீது இருந்த ஆர்வம் காரணமாக நாடகங்களில் நடிக்க தொடங்கினார். சினிமா வாய்ப்புகள் வந்ததால் அரசு வேலையை விட்டுவிட்டு முழுநேர நடிகராக மாறினார். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்து கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சோகத்தில் திரையுலகம்

ருக்மிணி ஏற்கனவே பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் தனது கணவர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் இறந்ததால் அவர் மிகுந்த மன வேதனைக்கு உள்ளானார். கணவரின் பிரிவைத் தாங்க முடியாமல் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. ஒரு மாதத்திற்குள் கோட்டா தம்பதியினர் மரணமடைந்தது தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ருக்மிணியின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.

நடிகரும் பாடகருமான கோட்டா ஸ்ரீனிவாச ராவ் தெலுங்கில் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். அதுவும் அதிகமான திரைப்படங்களில் அவர் வில்லனாக நடித்திருக்கிறார். அதேபோல தமிழிலும் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கேரக்டரிலும் நடித்து பிரபலம் அடைந்திருந்தார்.

அது மட்டுமல்லாமல் அவர் நடிகராக மட்டுமல்லாம் 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரைக்கும் ஆந்திர பிரதேச விஜயவாடா கிழக்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தமிழில் முதல்முறையாக மாசி என்ற திரைப்படத்தின் மூலமாக அவர் அறிமுகமாகி பிறகு தாண்டவம் திரைப்படம், மம்பட்டியான் என கிட்டத்தட்ட 30 திரைப்படங்களுக்கு மேலாக நடித்திருக்கிறார்.

சாமி பட வில்லன்

அவருடைய நடிப்பை பார்த்து வியந்து போய் தான் ஹரி அவரை சாமி திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் அவர் பிச்சை பெருமாள் என்ற கேரக்டரில் கதாநாயகனை விடவும் பெஸ்ட் என்று சொல்கிற மாதிரி தான் தன்னுடைய நடிப்பால் மிரட்டி இருப்பார். அவருடைய வசனங்களும் அதற்கு ஏற்ப முக எக்ஸ்பிரஷனும் தனித்துவமாக இருக்கும். பார்த்ததும் பயமுறுத்துவது போன்று தான் இவருடைய நடிப்பு அந்த திரைப்படத்தில் இருக்கும்.

Kota Srinivasa Rao demise: 750+ படங்கள்.. அரசியலிலும் கால் பதித்தவர்! யார் இந்த கோட்டா சீனிவாச ராவ்?
அதைத்தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு வெளியான கோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு அதிகமாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும் அதை தவிர்த்து வருகிறார். இந்த நிலையில் தான் கடந்த மாதத்தில் உடல்நிலை குறைபாடு காரணமாக காலமானார். அதுபோல கோட்டா ஸ்ரீனிவாச ராவுக்கு ருக்மணி என்ற மனைவியும் அவர்களுக்கு பிரசாத் என்ற மகனும் பவானி, பல்லவி என்ற மகள்களும் பிறந்திருக்கின்றனர். இதில் பிரசாத் கடந்த 2016 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் இறந்துவிட்டாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+