அருந்ததி.. அட ஏனுங்க இது.. திகில் சீரியலில் நம்ம காமெடி கோவை சரளாவா..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் வரும் திங்கள் முதல் தினம் இரவு 10 மணிக்கு அருந்ததி திகில் சீரியல் ஒளிபரப்ப போறாங்க.

அருந்ததி டப்பிங் சீரியல்தான்னாலும் இதை குழந்தைகளும் எதிர்பார்க்கற மாதிரி கோவை சரளாவை வச்சு ப்ரோமோ போட்டுக்கிட்டு இருக்காங்க.

Kovai sarala in Arundhati tv serial promo

காஞ்சனா படத்தில் இருந்தே கோவை சரளாவை அதுவும் பேய் படத்தில் மட்டும்தான் சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்புகிறார்கள்.

இந்த ஒரு விஷயத்தை கையில் எடுத்துகிட்டு, சன் டிவி அருந்ததி திகில் சீரியல் ப்ரோமோவுக்கு கோவை சரளாவை பயன்படுத்திகிட்டு இருக்காங்க.

காஞ்சனா 3 படம் மட்டும்தான் பல வாரங்களையும் தாண்டி இப்போது சக்கைப் போடு போட்டு ஓடிகிட்டு இருக்கு. அதனால, அருந்ததி சீரியலை அனைவரும் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்ககும்படியா ஈர்க்க வேண்டும் என்று ப்ரோமோவை நல்ல யுக்தியில் கையாண்டு இருக்கு.

சந்திரமுகி படத்துல ரஜினி,வடிவேலு பங்களா அறையில் படுக்கப் போகும் போது பேசும் டயலாக் போல கோவை சரளாவுடன் வேறு ஒருவர் பேசுவது போல ப்ரோமோ எடுத்திருக்காங்க.

பேய் வந்தா ஜன்னல் கதவு ஆடும்பாங்கன்னு சரளா சொல்லும் போதே கதவு அடிச்சுக்குது.காத்து பலமா வீசும்னு சொல்றாங்கன்னு சொல்லும்போதே காத்து அடிக்குது.

பேய் கண்ணுக்கு தெரியும்னு சொல்லுவாங்கன்னு சொல்லும்போதே பேய் படியில் இறங்கிகிட்டே வரப்போறேன்னு சொல்லுது. அலறிக்கிட்டு எதுல வரப்போறேன்னு சொல்லலையேன்னு சொல்ல,சன் டிவியிலன்னு சொல்லுது பேய்.

எத்தனை மணிக்கு சொல்லாமலே போயிருச்சேன்னு சரளா அலற... ராத்திரி 10 மணிக்குன்னு பேய் சொல்லுது.

இப்போ குழந்தைகளுக்கு விடுமுறை காலம்...ராத்திரி 10 மணி ஆனாலும் குழந்தைங்க தூங்கறதில்லை. அதனால, குழந்தைகளை அருந்ததி சீரியலை பார்க்க வைக்க சன் டிவி இந்த யுக்தியை கையாண்டு இருக்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+