நல்லது செய்வது தப்பா? நான் அரசியலுக்கு வர மாட்டேன்! 8-வது ஆம்புலன்ஸ் கொடுத்து, பதிலடி கொடுத்த KPY பாலா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் பாலா. தனது நகைச்சுவைத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்த இவர், மறுபக்கம் தான் சம்பாதித்ததை மக்களுக்கு உதவுவதிலும், குறிப்பாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பதிலும் செலவிட்டு, பலரின் பாராட்டைப் பெற்றார். ஆனால், அவருடைய உதவிகள் குறித்துச் சிலர் விமர்சித்து வந்த நிலையில், இப்போது 8-வது ஆம்புலன்ஸை வாங்கிக் கொடுத்துள்ள பாலா, செய்தியாளர்கள் சந்திப்பில் விமர்சித்தவர்களுக்கு நறுக்குன்னு பதிலடி கொடுத்துள்ளார்.

நகைச்சுவைக்கு மட்டுமல்ல
நடிகர் பாலா, வெறும் காமெடி நடிகராக மட்டும் இல்லாமல், தனது சமூக அக்கறையின் மூலம் பொதுமக்களின் மனதில் இடம்பிடித்தவர். அவர் பல ஏழை எளியோர்களுக்கு நேரடியாக நிதி உதவியும், மருத்துவ உதவிகளும் செய்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இவருடைய உதவிகளில் மிகவும் முக்கியமானது, அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களை வாங்கி, அதை உரியவர்களுக்கு வழங்குவதுதான். இதுவரை அவர் 7 ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கியிருந்த நிலையில், இப்போது 8-வது ஆம்புலன்ஸை வாங்கிக் கொடுத்துள்ளார்.
விமர்சகர்களுக்கு பதிலடி
பாலா தொடர்ந்து உதவி செய்து வந்தாலும், சிலர் அவர் உதவி செய்வது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எழுப்பி வந்தனர். உதவி செய்வதன் பின்னணியில் வேறேதோ நோக்கம் இருப்பதாகச் சிலர் பேச ஆரம்பித்தனர். இந்நிலையில், 8-வது ஆம்புலன்ஸை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாலா, தன்னை விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுத்தார்:
"என்னைப்பற்றிச் சிலர் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு நல்லது செய்கிறது தப்பா? அல்லது நான் நல்லது செய்வது தப்பா? என்பதுதான் எனக்கு இருக்கும் கேள்வி. நான் எந்த விளக்கமும் கொடுக்க விரும்பல. கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார். சிலர் என்ன பற்றித் தவறாகப் பேசும் போதுதான், எனக்கு மக்கள் எவ்வளவு சப்போர்ட் கொடுக்குறாங்கன்னு தெரியுது."
நான் அரசியலுக்கு வரமாட்டேன்
பாலாவின் உதவிகள், அவர் அரசியலுக்கு வரப் போவதற்கான அறிகுறி என்று சிலர் பேசிய நிலையில், அதற்கு அவர் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தார்: "நான் வேணா எழுதி தரேன், அரசியலுக்கு நான் வரப்போவது கிடையாது! ஆனால், தொடர்ந்து மக்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்து கொண்டிருக்கிறேன்."
2 வருட பழைய சம்பவம்
தன்னை டார்கெட் செய்து பேசுபவர்கள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசினார். ஒரு பழைய சம்பவத்தை இப்போது பேசுவதன் மூலம், அதன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என்று அவர் சந்தேகிப்பதாகக் கூறினார்: 2 வருஷத்துக்கு முன்னாடி நான் ஒரு ஆம்புலன்ஸ் கொடுத்தேன். அந்த ஆம்புலன்ஸ் கொடுத்த ரெண்டு நாள் கழிச்சுதான் எனக்கு அதற்கு எப்.சி முடிந்துவிட்டது என்று தெரிந்தது. உடனே அந்த ஆம்புலன்ஸ்க்கு பதிலாக இன்னொரு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்துவிட்டோம். அதை இவ்வளவு நாள் கழிச்சு இப்ப வந்து பேசுறாங்கன்னா, அவங்களுக்குப் பின்னாடி யாரோ இருக்கிறாங்கன்னு தானே அர்த்தம்?"
"அவங்க எதுக்காக என்ன டார்கெட் பண்ணிப் பேசுறாங்கன்னு எனக்குத் தெரியல. நானும் இப்போ கண்டுகொள்ளக் கூடாதுன்னு விட்டுட்டேன். என்னுடைய வேலையில் நான் பிஸியா இருக்கிறேன். என்னால் முடிந்ததை நான் எல்லோருக்கும் செஞ்சிட்டே இருக்கணும்னு நினைக்கிறேன்" என்று கூறி, தொடர்ந்து தனது மக்கள் பணியைத் தொடர்வேன் என்று நம்பிக்கையுடன் பேசிச் சென்றார் KPY பாலா.
தொடர்ந்து விமர்சனங்கள் வந்தாலும், தனது வேலையையும், சமூக சேவையையும் நிறுத்தாமல் பாலா செய்வது, அவருடைய உண்மையான சமூகப் பொறுப்பை வெளிப்படுத்துகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications