பரிதாப நிலையில் “எங்கேயும் காதல்” பட பாடகர்.. கேபிஒய் பாலா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. கலங்க வைத்த காட்சி
சென்னை: கே பி ஒய் பாலா தன்னால் முடிந்த அளவிற்கு பலருக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கிறார் அது பலருக்கும் தெரிந்த செய்தி தான் ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ தான் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது அதிலிருந்து நபர் நாம் பலமுறை கேட்டு ரசித்த பாடலை பாடியவர் என்பது வியப்பை தரலாம்.

மறக்கப்பட்ட குரல்
இந்த வீடியோவில், பாடகர் ரிச்சர்ட்- டின் தற்போதைய நிலை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு காலத்தில் தனது குரலால் ரசிகர்களை கவர்ந்த இவர், எங்கேயும் காதல் படத்தில் "நங்கை..." பாடல் மூலம் கவனம் பெற்றவர். அதேபோல், சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தில் "மீசை பியூட்டி..." போன்ற பாடல்களையும் பாடியுள்ளார்.
இப்படி பல நல்ல பாடல்கள் பாடிய திறமையான குரல் கொண்ட இவர், தற்போது உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நிலை பாதிப்பு
தற்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நிலை பிரச்சனை காரணமாக, முகம் ஒரு பக்கமாக இழுத்து போனது போன்ற நிலை உருவாகியுள்ளது. பேசுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஒரு திறமையான பாடகர் இப்படி ஒரு நிலைக்கு வந்திருப்பது ரசிகர்களுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அதிலும் இந்த பாடல்களை எல்லாம் பாடியவர் இவர்தான் என்பதே பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு கிடையாது.
நேரில் சென்று உதவிய பாலா
இந்த நிலையை அறிந்த பாலா, நேரடியாக அவருடைய வீட்டிற்கே சென்று சந்தித்துள்ளார். அவர் தனது வீடியோவில், "என்னால் இப்போ செய்ய முடிஞ்சது ஐம்பதாயிரம் தான்..." என்று கூறி, ₹50,000 பண உதவியை வழங்கியுள்ளார். அதோடு மட்டும் இல்லாமல், "இவருக்கு உதவி செய்ய முடிஞ்சவர்கள் தயவுசெய்து உதவுங்க..." என்று பொதுமக்களிடமும் மனமுவந்து வேண்டுகோள் வைத்துள்ளார்.
கே பி ஒய் பாலா கலக்கப்போவது யாரு மூலம் பிரபலமானவர். தனது காமெடி டைமிங்கால் ரசிகர்களை கவர்ந்த அவர், அதன் பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது தனி இடத்தை உருவாக்கினார். சமீபத்தில் வெளியான காந்தி கண்ணாடி படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஆனால், அவரை வேறுபடுத்தி காட்டுவது அவரது மனிதநேயம் தான்.

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி
நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி, நெருக்கடியில் இருக்கும் குடும்பங்களுக்கு நேரடியாக சென்று உதவி.. இப்படி பலருக்கும் அமைதியாக உதவி செய்து வருகிறார். அதனாலையே சில மாதங்களுக்கு முன்பு அதிகமான சர்ச்சைகளிலும் சிக்கி இருந்த தன்னை பற்றி பல வதந்திகள் பரவி வந்தாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இவர் தொடர்ந்து உதவி செய்து கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோ வெளியானதும், பலரும் அதைப் பகிர்ந்து கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளனர். ஒரு திறமையான பாடகருக்கு இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது, "யாராவது உதவி செய்யணும்", "பாலா மாதிரி இன்னும் பலர் இருந்தா நல்லா இருக்கும்" என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு காலத்தில் மக்களுக்கு இசை மூலம் மகிழ்ச்சி கொடுத்த ரிச்சர்ட், இன்று உதவி தேவைப்படும் நிலையில் இருக்கிறார். அவரை தேடி சென்று உதவிய பாலா, மனிதநேயம் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதை நினைவூட்டியுள்ளார்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications