இது பைத்தியக்காரத்தனம்.. சீ இவ்வளவு கேவலம்! Kpy பாலா பற்றி ஆதங்கத்தோடு பேசிய பயில்வான் ரங்கநாதன்
சென்னை: விஜய் டிவியில் தனது நகைச்சுவைத் திறமையால் பிரபலமானவர் KPY பாலா. அவர் நடிப்பைத் தாண்டி, சமூகத்தில் ஏழைகளுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் ஆம்புலன்ஸ் வழங்குவது, மருத்துவ உதவிகள் செய்வது எனப் பல நற்பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தச் சமூக சேவையின் காரணமாகவே, அவர் மக்கள் மத்தியில் பரவலான பாராட்டுக்களையும், பிரபலத்தையும் பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில், அவர் மீது சில கடுமையான விமர்சனங்களும், சர்ச்சைகளும் எழுந்துள்ளன. இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, நடிகரும் திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் ஆதங்கத்துடன் பேசியிருக்கும் கருத்துகள், இணையத்தில் இப்போது விவாதப் பொருளாக மாறியுள்ளன.

பாலா மீதான குற்றச்சாட்டுகள்
சமூக சேவை செய்து வரும் பாலா மீது, பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொள்ளும் உமாபதி என்பவர், மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். குறிப்பாக, பாலா ஒரு "சர்வதேசக் குற்றவாளி" என்றும், அவர் "வெளிநாட்டுக் கைக்கூலி" என்பது போலவும் சித்தரித்துப் பேசியிருந்தார். மேலும், பாலா வெளிநாட்டில் இருந்து பணத்தைப் பெற்று, அதை மக்களுக்கு உதவுவது போல நடித்துக்கொண்டிருக்கிறார் என்றும், அவர் எதிர்காலத்தில் பெரிய பிரச்சனையான நபராக வருவார் என்றும் உமாபதி பேசியிருந்தார்.
இதேபோல, கே.பி.ஒய் பாலாவின் சக நண்பரும் நடிகருமான ஆதவன், பாலா குறித்து வெளியிட்ட சில வீடியோக்களும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த வீடியோக்களில் ஆதவன், பாலா கொடுத்த ஆம்புலன்ஸ்கள் குறித்துப் பேசியிருந்தார். பாலா கொடுத்த ஆம்புலன்ஸ்களில் ஒன்று 30 வருடங்களுக்கு முந்தைய பழைய ஆம்புலன்ஸ் என்றும், மருத்துவப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தினால் இழப்புகள் தான் வரும் என்றும், யாருக்கேனும் உயிருக்கு ஆபத்து வந்தால் என்ன செய்வது என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
மற்றொரு ஆம்புலன்ஸ், 2016-ல் வாங்கியதாக இருந்தாலும், அதன் முதல் உரிமையாளரின் பெயர்தான் இன்னும் இருக்கிறது என்றும், பாலா பணத்தைக் கொடுத்து ஆம்புலன்ஸை வாங்கி இருந்தால், பெயர் மாற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஆதவன் குற்றம் சாட்டியிருந்தார். பாலா இப்படிச் சில விஷயங்களை மறைத்து வைத்திருக்கிறார் என்றும் ஆதவன் தெளிவாகச் சொல்லியிருந்தார்.
பயில்வான் ரங்கநாதனின் ஆதங்கம்
பாலா மீதான இந்த கடுமையான விமர்சனங்கள் இணையத்தில் வைரலான நிலையில், திரைப்பட விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், ஊடகம் ஒன்றில் இந்தக் குற்றச்சாட்டுகளைக் குறித்துத் தன்னுடைய ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
பயில்வான் ரங்கநாதன் நேரடியாக, "பாலா மீது சிலருக்குப் பொறாமை இருக்கிறது. அதனால்தான் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார். பத்திரிகையாளர் என்று சொல்லிக்கொண்டு, அந்த உமாபதி பாலா பற்றி அவ்வளவு பேசுகிறாரே! அவருக்குத் தைரியம் இருந்தால் ஆதாரத்தை வெளியிடட்டும். ஆதாரம் இருந்தால் அவர் வெளியிட்டால் தானே அதை மக்கள் நம்புவார்கள்? மூன்று வாரமாக 'ஆதாரத்தை வெளியிடுவேன், வெளியிடுவேன்' என்று பாலாவை மிரட்டி கொண்டு இருக்கிறார்" என்று பயில்வான் ரங்கநாதன் சாடினார். மேலும், "இப்போது இருக்கிற சூழ்நிலையில், வெளிநாட்டில் இருந்து பணத்தை அவ்வளவு ஈசியாக வாங்கி கொடுத்து விட முடியுமா? சமீபத்தில் கூட ஒரு கிறிஸ்தவ அமைப்பிற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததை மோடி அரசு தடுத்து நிறுத்திவிட்டது. இப்படியான சூழ்நிலையில், பாலாவுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருகிறது என்று இவராக அடித்து விடுகிறார். அதற்கான ஆதாரம் இருந்தால், அதை அனைவரிடமும் காட்ட வேண்டும்." என்று பயில்வான் சவால் விடுத்தார்.
நடிகர் ஆதவன் மீது குற்றச்சாட்டு
ஆதவன் குறித்துப் பேசிய பயில்வான், "அவருக்கு, நம்முடன் இருந்த பையன் எவ்வளவு வளர்ந்துட்டானே, இவ்வளவு பிரபலம் கிடைத்துவிட்டது என்ற பொறாமை இருக்கிறது. அதனால்தான் அவர் பாலா மீது குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்" என்று பகிரங்கமாகத் தெரிவித்தார். மேலும், " பொதுவாக ஒரு வாகனம் வாங்கி 25 வருடங்கள் ஆனாலே, அதற்கான சான்றிதழ் (Certificate) எல்லாம் வாங்கிவிட்டால், வண்டியை மீண்டும் சாலையில் ஓட்டலாம். அந்த வண்டி நல்ல கண்டிஷனாக இருப்பதால்தான் பாலா கொடுத்திருப்பார்" என்றும் விளக்கமளித்தார்.
விளம்பர விமர்சனங்களுக்கு மறுப்பு
"பாலா பிரபலத்துக்காகச் செய்கிறார், விளம்பரத்துக்காகச் செய்கிறார் என்று சொல்கிறார்கள். அவர் உதவி செய்து விளம்பரம் தேட வேண்டிய அவசியம் கிடையாது. அவருக்கு விஜய் டிவியிலேயே நல்ல விளம்பரம் கிடைத்தது; நல்ல பெயரும் கிடைத்துவிட்டது. இப்போது சினிமாவுக்கும் போயிருக்கிறார். அவர் செய்யும் உதவியை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் போஸ்ட் போடுகிறார், அவ்வளவுதான். அவர் பத்திரிகையாளர் கூப்பிட்டு வைத்து, 'நான் எவ்வளவு உதவி செய்திருக்கிறேன் என்று வந்து பாருங்கள்' என்று சொல்லவில்லை" என்று பயில்வான் ரங்கநாதன் ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பாலா மீதான விமர்சனங்கள் அனைத்தும், அவரது உழைப்புக்கும், பெயருக்கும் கிடைத்திருக்கும் வெற்றியைப் பொறுக்க முடியாதவர்களின் பொறாமைதான் என்று பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது, இந்தச் சர்ச்சைக்கு ஒரு புதிய கோணத்தைக் கொடுத்திருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: நிஜ கேரக்டரை காட்டிய சைக்கோ அருண்.. முத்துவால் உடைந்த உண்மை.. விஜயாவுக்கு ஆப்பு -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications