விஜயகாந்த் மகன் முன்னிலையில் சபதம் எடுத்த கேபிஒய் பாலா! இவர் மனதிற்குள் இவ்வளவு விஷயம் இருக்கா? கிரேட்
சென்னை: விஜய் டிவியில் காமெடி நடிகராகப் புகழ்பெற்ற 'கேபிஒய் பாலா', தற்போது 'காந்தி கண்ணாடி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்துகொண்டார். அப்போது, விஜயகாந்த் குறித்து பாலா பேசிய நெகிழ்ச்சியான பேச்சு அனைவரின் மனதையும் உருக வைத்தது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு
'கலக்கப் போவது யாரு சீசன் 6' டைட்டில் வின்னரான பாலா, தனது அதிரடியான பஞ்ச்களாலும், அனல் பறக்கும் கவுண்டர்களாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஒரு காலகட்டத்தில், விஜய் டிவியில் பாலா இல்லாத நிகழ்ச்சியே இல்லை என்ற அளவுக்குப் பிரபலமடைந்தார். இந்த உழைப்பும், தனித்துவமும் அவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தன.
சமூகப் பணி
பாலா, தனது வருமானத்தை தனக்கென்று வைத்துக்கொள்ளாமல், ஏழை எளிய மக்களுக்காகவும், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் முழு மனதுடன் செலவழித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் போன்ற நடிகர்களுடன் இணைந்து சிறு சிறு உதவிகளைச் செய்து, தனது மனிதநேயத்தை நிரூபித்து வருகிறார்.
விஜய பிரபாகரனின் வாழ்த்து
காந்தி கண்ணாடி இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய பிரபாகரன், பாலாவின் வளர்ச்சி குறித்துப் பாராட்டினார். "பாலா ஒரு சிறந்த கலைஞன் மட்டுமல்ல, அவரைப் பற்றிப் பேசும்போதே அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்பது தெரிகிறது. அவருடைய இந்த குணம், என் தந்தையின் குணத்தை நினைவுபடுத்துகிறது. கேப்டன் எப்படி ஏழை மக்களுக்கு உதவினாரோ, அதேபோல் பாலாவுக்கும் உதவும் குணம் இருக்கிறது. சினிமா பயணத்தில் அவருக்கு அனைத்து வெற்றியும் கிடைக்க வேண்டும்" என்று வாழ்த்து தெரிவித்தார்.
கேப்டன் நினைவில் கண்கலங்கிய பாலா
விஜய பிரபாகரனின் வாழ்த்தைக் கேட்ட பாலா, உணர்ச்சிவசப்பட்டு மேடையிலேயே கண்கலங்கினார். பின்னர், மைக் பிடித்து அவர் பேசிய பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
"நான் முதல் முதலில் நேரில் பார்த்த ஒரு செலிபிரிட்டி, அது கேப்டன் விஜயகாந்த் சார்தான். தேர்தல் சமயத்தில் எங்கள் ஊருக்குப் பிரச்சாரத்திற்கு வந்தபோதுதான் அவரைப் பார்த்தேன். அப்போது அவரை யார் என்று தெரியாது. என் தாத்தாதான் அவர் யார் என்று சொன்னார். அப்போது, எங்கள் ஊரில் உள்ள மக்கள் ஆண்கள், பெண்கள் என அனைவரும் அவரைப் பார்த்ததும் ஆரவாரம் செய்தனர்."
"சென்னை வந்த பிறகு, நான் முதல் முதலாக நேரில் சந்திக்க ஆசைப்பட்டது கேப்டன் அவர்களைத்தான். ஆனால், என் துரதிர்ஷ்டம், அவரை நேரில் பார்க்க இயலவில்லை. அவரது மறைவின்போதுதான் அவரைப் பார்த்தேன். அன்று என் மனம் மிகவும் கலங்கியது. 'ஒருத்தரின் இறப்பிற்கு ஒரு வீடு அழுதது என்றால், அவர் அந்தக் குடும்பத்தின் தலைவன். அதுவே ஒரு நாடு அழுதது என்றால், அவர் தான் உண்மையான தலைவன்' என்ற ஒரு வாக்கியம் உண்டு. கேப்டன் உண்மையான தலைவன்."
"என் வாழ்க்கையில் எனக்கு ஒரு மிகப்பெரிய கனவு இருக்கிறது. அது, கேப்டன் மக்களுக்குச் செய்ததில் ஒரு சதவீதமாவது நான் இறப்பதற்குள் இந்த மக்களுக்குச் செய்துவிட வேண்டும். அவ்வளவுதான்" என்று விஜய பிரபாகரனின் முன்னிலையில் சபதம் எடுத்துக்கொண்டார்.
சின்னத்திரையில் பல அவமானங்கள், புறக்கணிப்புகள் எனப் பலவற்றைச் சந்தித்து, தனது விடாமுயற்சியால் இந்த இடத்திற்கு வந்திருக்கும் பாலா, தனது முதல் படத்தின் வெற்றி மூலம், விஜயகாந்தின் கனவுகளையும் நிறைவேற்றுவார் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications