மொத்த பணத்தையும் உதவி செஞ்ச பாலாவிற்கா இந்த நிலைமை? அள்ளிக் கொடுத்த கைக்கு ஏற்பட்ட அவலம்
சென்னை: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து இருந்தார்.
அதிலும் தன்னிடம் இருந்த இரண்டு லட்சம் ரூபாயையும் மொத்தமாக எடுத்து அதை புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தலா ஆயிரம் வீதம் பாலா கொடுத்திருந்தார்.
இந்த நிலையில் பலருக்கும் உதவி செய்தது தனக்கு மனநிறைவை கொடுத்தது ஆனால் என்னுடைய கைவிரல் ஒடிந்துவிட்டது என்று பாலா தன்னுடைய instagram பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சின்னத்திரையில் வாய்ப்புக்காக பல வருடங்களாக காத்திருந்த நிலையில் kpy பாலாவிற்கு மறைந்த வடிவேல் பாலாஜி மூலமாக ஒரு வாய்ப்பு கிடைக்க அதே பயன்படுத்திய பாலா விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சி என்றாலும் அங்கே பாலா இல்லாமல் இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல நிகழ்ச்சிகளில் பாலா ஜொலித்து வருகிறார்.
அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு எல்லா சீசனிலும் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் youtube சேனல், கல்லூரி விழாக்கள், கோவில் திருவிழாக்கள் என்று பல நிகழ்ச்சிகளிலும் பாலா தொடர்ச்சியாக கலந்து கொண்டு வருகிறார். சின்னத்திரையை மட்டுமின்றி வெள்ளி திரையிலும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா, தும்பா, பிரண்ட்ஷிப் போன்ற பல திரைப்படங்களிலும் பாலா இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் தமிழகத்தை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்திருந்த மக்களுக்கு பாலா தன்னுடைய சொந்த அக்கவுண்டில் இருந்த 2,30,000 பணத்தையும் மொத்தமாக எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 வீதம் வழங்கியிருந்தார்.
அதோடு சில பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி உட்பட அடிப்படை தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுத்திருந்தார். இது பலரையும் வியந்து பார்க்க வைத்தது. பலரும் இதுகுறித்து பாராட்டி வந்தனர். ஏற்கனவே பாலா சில மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் மற்றும் விவசாய உபகரணங்களும் வாங்கி கொடுத்து இருக்கிறார் இந்த நிலையில் இணையத்தில் பாலா பற்றி பலரும் பேசிவரும் நிலையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதில் "மனம் நிறைந்தது.. விரல் உடைந்தது.. நன்றி..!" என்று போட்டோவோடு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் பாலா இப்படி உதவி செய்வதை பலரும் பாராட்டி வந்தாலும் இருக்கிறதை எல்லாம் இப்படி கொடுத்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு இல்லை என்றால் நீங்கள் ரொம்பவே கஷ்டப்படுவீர்கள்.
ஏற்கனவே இதுபோல பல பேர் உதவி செய்திருந்தாலும் அவர்களுக்கு முடியவில்லை என்றால் யாரும் உதவி செய்யவில்லை என்று பாலாவிற்கு பல ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்திருந்தார்கள். இந்த நிலையில் இப்போது பாலாவின் கைவிரல்கள் உடைந்து இருக்கிறது என்பதை பார்த்து பலர் ஆறுதல் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications