புகழும் பாலாவும் என்கிட்ட வாய்ப்பு கேட்டு வந்தாங்க.. இன்னிக்கு பாருங்க.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக்!
சென்னை: விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பெண் வேடத்தில் நடித்து வந்த நாஞ்சில் விஜயன், தான் பெரிய அளவில் வளரக் கூடாது என்பதற்காக தன்னை ஒதுக்கிவிட்டதாக வருத்தத்துடன் கூறியுள்ளார்.
விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் பெண் வேடத்தில் காமெடியில் கலக்குவார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தனக்கென யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு லாக்டவுனின் போது வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

நாஞ்சில் விஜயனும் சூர்யா தேவி எனும் யூடியூபரும்தான் வனிதாவின் திருமணத்தை அவ்வப்போது விமர்சித்து வீடியோ போட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஏதோ ஒரு விவகாரத்தில் இருவருக்கும் இடையே தகராறு நிகழ்ந்தது. இவர்களுக்கிடையே கைகலப்பு, அடிதடி அளவுக்கு சண்டை நடந்தது. இந்த விவகாரம் இரு ஆண்டுகள் ஆறப்போடப்பட்டிருந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு சூர்யாதேவியை அவதூறாக பேசி மிரட்டி தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் வளசரவாக்கம் போலீஸார் நாஞ்சில் விஜயனை கைது செய்திருந்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நாஞ்சில் விஜயன், நடிகை ஷகிலா கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அளித்துள்ள போட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் விஜய் டிவியில் வருவதில்லையே என ஷகிலா இவரிடம் கேள்வி கேட்டார். அதற்கு அவர் வேற டீம் மாறிவிட்டது. இப்போதுள்ள புதிய டீம் அவர்களுக்கு தெரிந்த நண்பர்களை மட்டும்தான் உள்ளே நுழைத்து வாய்ப்பு கொடுப்பார்கள்.
நான் இன்னமும் நிகழ்ச்சி தொகுப்பாளர், தயாரிப்பாளர்களிடம் தொடர்ந்து வாய்ப்புகளை கேட்டுக் கொண்டுதான் வருகிறேன். ஆனாலும் எனக்கு கிடைக்கவில்லை. இன்று என்னை தாண்டி எத்தனையோ பேர் எங்கேயோ போய்விட்டார்கள். புகழ், பாலாவையெல்லாம் பாருங்கள். அவர்கள் எங்கே போய்விட்டார்கள். அவர்களை யூஸ் செய்வார்களா என்னை யூஸ் செய்வார்களா? புகழ், பாலாவின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் ஆரம்பத்தில் நிகழ்ச்சிகளுக்கு ஆடியன்ஸை அழைத்து வரும் வேளையில் இருந்தேன். அப்படித்தான் புகழும், பாலாவும் என்னிடம் வாய்ப்பு கேட்டு வந்தார்கள். ஆனால் இன்று நானோ வாய்ப்பில்லாமல் தவிர்க்கிறேன். அவர்களை பார்க்கும் போது எனக்கு தன்னம்பிக்கையாக இருக்கிறது என்றார்.

மேலும் நான் ஜெயிலுக்கு போய்ட்டு வந்தும் எனக்கு வாழ்க்கையே மாறிவிட்டது. என்னுடன் யாராவது போட்டோ எடுத்து போட்டாலும் அய்யய்யே ஜெயிலுக்கு போயிட்டு வந்தவர் கூடவா போட்டோ எடுத்து இருக்கீங்க என சிலர் கமென்ட் போடும்போது எனக்கு குற்ற உணர்ச்சி ஆகிறது. நம்மால் யாருக்கும் கெட்ட பெயர் வரக் கூடாது என்பதற்காக நான் நிறைய பேரிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டேன் என்றார்.
அது போல் சூர்யாதேவி குறித்து கேட்டதற்கு நாஞ்சில் விஜயன் கூறுகையில், லாக்டவுன் நேரத்தில் யூடியூப் சேனலை ஆரம்பித்தேன். அப்போது வனிதா விஜயகுமார் திருமணத்தை வைத்து சூர்யாதேவி அவதூறாக பேசி வந்தார். இதையடுத்து நானும் சூர்யாதேவிக்கு எதிராக வீடியோ போட்டேன். ஒரு கட்டத்தில் செலிபிரிட்டிகளை இன்டர்வியூ எடுத்த போது சூர்யாதேவியை இன்டர்வியூ எடுத்தேன்.

அப்போது அந்த பெண் நிறைய கெட்ட வார்த்தைகளை பேசியிருந்தார். அதையெல்லாம் அந்த பெண்ணின் வருங்காலத்தை நினைத்து கட் செய்து எடிட் செய்து பாசிட்டிவாக போட்டேன். அந்த வீடியோ வைரலானது. இதையடுத்து அந்த பெண்ணை நிறைய பேர் இன்டர்வியூ எடுக்கத் தொடங்கினார். அப்போது அங்கும் அந்த பெண் அநாகரீகமாக பேசியிருந்தார். நான் போட்ட வீடியோவைவிட அவரது உண்மையான முகம் மற்ற சேனல் இன்டர்வியூக்களில் தெரிந்து விட்டது. இதனால் நான்தான் காரணம் என என் மீது அந்த பெண்ணுக்கு கோபம். என்னை பற்றி தப்பு தப்பாக வீடியோ போட்டார். நான் பதிலுக்கு எதுவும் சொல்லாமல் அந்த பெண்ணுக்கு போன் செய்து அழுதேன். பிறகு இந்த பிரச்சினை சுமூகமாக இருந்தது. திடீரென ஒரு முறை என் வீட்டிற்கு ரவுடிகளை அந்த பெண் அனுப்பி கலாட்டா செய்தார் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications