குன்றத்தூர் அபிராமிக்கு தண்டனை? மனைவியிடம் கலர் கலர் மாத்திரை அட்டை.. விதவித ருசியில். உறைந்த கணவர்
சென்னை: கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில், தனது கள்ளக்காதலைத் தொடர்வதற்காக கணவர், இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோரின் உணவு மற்றும் காபியில் தூக்கமாத்திரை கலந்து கொல்ல முயன்ற சைத்ரா என்ற 33 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்... இந்த சம்பவம் குறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தன்னுடைய கருத்தை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
KING 24X7 என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள தமிழ்வேந்தன், "கர்நாடக மாநிலத்தில் ஒரு அபிராமி என்றுதான் சொல்ல வேண்டும்.. குன்றத்தூர் அபிராமி கதைதான் பெரும்பாலும் தற்போது நடந்துவிடுகிறது..

கணவனை பிடிக்கவில்லையென்றால் விவாகரத்து செய்துவிட்டு போக வேண்டியதுதானே? எதற்காக கொலை வரை யோசிக்க வேண்டும்? காமம் கண்ணை மறைத்துவிடுகிறது.. கொலை செய்துவிட்டு வாழ முடியுமா?
மாமியார், மாமனார்
கஜேந்திரா என்பவரை 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த சைத்ராவுக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.. சைத்ராவுக்கு புனித் என்ற நபருடன் கள்ள உறவு இருந்துள்ளது..
மனைவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை கணவரும் கண்டுபிடித்துள்ளார்.. தன்னிடம் சிரித்துகூட பேசாமல், வேறு யாருடனோ மனைவி போனில் எந்நேரமும் சிரித்து பேசுவதால் சந்தேகமடைந்து மனைவியின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார்.. அப்போதுதான் அதில் ஏடாகூடமான மெசேஜ்கள் புனித்துடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்..
பிறகு தன்னுடைய மாமனார், மாமியாரிடம் இந்த விஷயத்தை கொண்டு சென்று, மகளை கண்டுபிடிக்குமாறு சொன்னார்.. உடனே அவர்களும், தங்கள் மகளை அழைத்து பஞ்சாயத்து பேசியிருக்கிறார்கள். அப்போது நடந்த வாக்குவாதத்தில், மனைவியை கை நீட்டி அடித்து விட்டார் கஜேந்திரா.. இது சைத்ராவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், நேரடியாக போலீசுக்கு சென்று, தன்னை தாக்கி கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது புகார் தந்துவிட்டார்.
உடனே போலீசாரும் கஜேந்திராவை கைது செய்து, சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள்.. பிறகு ரிமாண்டில் வெளியே வரும்போது, மனைவியிடம் இனிமேல் ஒழுங்காக நடந்து கொள்ளுமாறு அட்வைஸ் தந்து அனுப்பினார்கள் போலீசார்..
இந்த விஷயமெல்லாம் கள்ளக்காதலன் புனித்துக்கு தெரிந்து பீதியடைந்து, சைத்ராவிடமிருந்து மெல்ல விலக தொடங்கினார்.. ஜெயிலிலிருந்து வீட்டுக்கு வந்த கணவன் சைத்ராவிடம், இனிமேல் உன்னை அடிக்க மாட்டேன் என்று மன்னிப்பு கேட்டார்.. உடனே சைத்ராவும், என்னையும் மன்னித்து விடுங்கள் என்றார். இதற்கு பிறகு தம்பதிகள் சண்டையின்றி குடும்பம் நடத்தினார்கள்.
களைப்பு, உடல்வலி, அசதி
ஆனால், அதற்கு பிறகு, அந்த குடும்பத்திலுள்ள கஜேந்திரா, சைத்ராவின் அம்மா, அப்பா, சைத்ராவின் 2 பிள்ளைகள் எல்லாருக்குமே உடலில் ஒருவித களைப்பும், கை கால் வலியும் ஏற்பட துவங்கியது.. காலையில் யாராலுமே சீக்கிரம் எழ முடியவில்லை..
ஒருநாள் தன்னுடைய அம்மாவின் ஹேண்ட்பேக்கில் கலர் கலராக மாத்திரை அட்டைகள் இருப்பதை 2 பிள்ளைகளும் பார்த்துள்ளனர். ஒவ்வொரு கம்பெனியிலிருந்தும், ஒவ்வொரு மாத்திரைகளை சைத்ரா வாங்கியதும், அதை தினமும் தங்களுக்கு சாப்பாட்டில் கலந்து தந்ததும் குடும்பத்தினருக்கு தெரியவந்தது..
அடுத்த கள்ளக்காதலன்
கள்ளக்காதலன் தொல்லைதான் ஒழிந்துவிட்டதே, சைத்ரா ஏன் இதை செய்ய வேண்டும் என்று கண்காணித்தபோதுதான், பக்கத்து வீட்டுக்காரர் ஷிவு என்பவருடன் மற்றொரு காதல் அரும்பியிருக்கிறது..
ஒருகட்டத்தில் ஷிவுடன் வீட்டை விட்டு கிளம்பிவிடவும் முடிவு செய்தார்.. ஆனால் ஷிவு, வருவதானால் நீ மட்டும் தனியாக வேண்டும், 2 குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார். இதற்கு பிறகுதான், தூக்க மாத்திரை ஐடியாவை ஷிவு சொல்லியிருக்கிறார்.
கலர் கலர் மாத்திரைகள்
அன்றிலிருந்து தினமும் சாப்பாடு, டீ, காபி அனைத்திலும் மாத்திரையை கலந்து ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் சைத்ரா தந்து வந்தது அம்பலமானது. முதலில் கஜேந்திரா தனக்கு மட்டும்தான் உடல்வலி என்று நினைத்துள்ளார்.. அதேபோல பெற்றோர்களும், தங்களுக்கு வயதானதால்தான் உடம்பு வலி வந்துள்ளதாக நினைத்துள்ளனர்.. பிறகுதான் மொத்த பேரையுமே குளோஸ் செய்ய, சைத்ரா முடிவு செய்தது தெரியவந்தது.
முதலில் தான் மட்டும் மருத்துவமனைக்கு சென்று செக்கப் செய்துள்ளார் கஜேந்திரா.. அப்போது உடம்பில் அல்பிமின், கிரியாட்டின், யூரியா போன்றவை கூடுதலாகி இருப்பது தெரியவந்தது. உடனே குடும்ப உறுப்பினர்களுக்கு டெஸ்ட் செய்தால், இதே அல்பிமின் பிரச்சனை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
மொத்த ஆதாரங்கள்
இதற்கு பிறகுதான் மருத்துவ ரிப்போர்ட், மாத்திரை அட்டைகள் உட்பட அனைத்து ஆதாரங்களையும் வைத்து, மனைவி, ஷிவு மீது கொலைமுயற்சி புகார் தந்தார்..
இப்போது, சைத்ரா, ஷிவு இருவரும் கைதாகி விசாரணையில் உள்ளனர். குன்றத்தூர் அபிராமியும் இப்படித்தான் தன்னுடைய குழந்தைகளுக்கு மாத்திரைகளை தந்தார்.. கர்ப்பப்பையில் கரு உண்டாகாமல் தடுக்க பயன்படுத்தும் மாத்திரைகளை, கர்ப்பப்பைகூட வளராத தன்னுடைய பிஞ்சு குழந்தைகளுக்கு தந்தார்.. அப்போதும் குழந்தைகள் சாகவில்லை என்பதால், குழந்தைகளின் நெஞ்சு மீது ஏறி உட்கார்ந்து மூச்சை பிடித்து கொன்றார்..
மன்னிக்கவே கூடாது
இதுபோன்ற பெண்கள், கணவனை பிடிக்கவில்லையென்றால், விவாகரத்து செய்ய வேண்டியதுதானே? குழந்தைகளை ஏன் கொல்ல வேண்டும்?
நல்லவேளை, பெங்களூர் வழக்கில் கஜேந்திரா கடைசி நேரத்தில் உயிர் தப்பி, குடும்பத்தையும் காப்பாற்றியிருக்கிறார்.. கல்லை போட்டுகூட கொன்றிருக்கலாம்.. நம்பவைத்து முதுகில் குத்தி, தினம் தினம் மாத்திரைகளை தந்து குடும்பத்தை கொல்ல நினைத்த இதுபோன்ற பெண்களை எல்லாம் மன்னிக்கவே கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications