குழந்தைங்க செத்துட்டாங்களானு தெரியலயே? குழம்பி சொன்ன அபிராமி.. இந்த பெண்ணுக்கு தண்டனை தராமல் எப்படி?
சென்னை: "எந்த தண்டனையை தருவதாக இருந்தாலும், அதை தீர்ப்பாக எழுதும்போது, நாம் சரியாகத்தான் தண்டனை தருகிறோமா? என்ற லேசான அக்கறையும் இருக்கும்.. ஆனால், கொஞ்சம்கூட சந்தேகத்திற்கு இடமில்லாத அளவுக்கு சாட்சியங்களுடைய அடிப்படையில், இப்படித்தான் தீர்ப்பு தர வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.. இதற்கு அசாத்தியமான மன உறுதி வேண்டும்" என்று அபிராமிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் சுமதி, கருத்து தெரிவித்துள்ளார்.
Vikatan யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் சுமதி, "அபிராமியின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று சொல்ல, இது கொண்டாடக்கூடிய விஷயமில்லை.. ஆனால், இந்த தீர்ப்பு மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது..

சமூகத்துக்கென ஒரு ஒழுக்கம் உள்ளது.. அந்த கட்டுப்பாட்டை மீறி, ஒருவரை கொன்றுவிட்டு, தான் மட்டுமே இன்பமாக இருக்கலாம் என்ற நியதியை ஏற்க முடியாது..
பெரியர்களுக்குள் பிரச்சனை
தம்பதிக்குள் பிரச்சனை என்றால், அவர்கள் பிரிந்து போகலாம், இதற்கு சட்டத்தில் ஆயிரம் வழி உள்ளது. ஆனால், ஒரே நேரத்தில் கணவன், 2 குழந்தைகளையும் சேர்த்து கொலை செய்ய முடிவு செய்தார்..
முதலில் இது பெரியவர்களுக்கான பிரச்சனை.. அபிராமிக்கு இன்னொரு நபரை பிடித்திருக்கிறது என்றால், அதுவும் யோசிக்கக்கூடிய விஷயம்தான்.. ஆனால், அப்போதும்கூட, அது தம்பதிகளுக்கான பிரச்சனை மட்டுமே..
சம்மந்தமில்லாமல் 2 குழந்தைகளையும் கொல்வது ஏற்க முடியாதது. குற்றத்துக்கு பால் பேதம் கிடையாது என்பதை முதன்முதலில் அதிர்ச்சியூட்டத்தக்க வகையில் மக்கள் மனதில் பதிய செய்தது, இந்த அபிராமி வழக்குதான்.
நீதிபதியின் மனநிலை
தீர்ப்பின்போது அபிராமி அழுதுள்ளார்.. பொதுவாக, நீதிபதியின் மனநிலை, மிகவும் கடினமான இடம்.. வெளியிலிருந்து பார்த்து, அவரது பணி எளிதானது என்று சொல்லிவிடுகிறோம்.. ஆனால், அது அவ்வளவு சாதாரணமானது இல்லை..
எந்த தண்டனையை தருவதாக இருந்தாலும், அதை தீர்ப்பாக எழுதும்போது, நாம் சரியாகத்தான் தண்டனை தருகிறோமா? என்ற லேசான அக்கறையும் இருக்கும்.. ஆனால், கொஞ்சம்கூட சந்தேகத்திற்கு இடமில்லாத அளவுக்கு சாட்சியங்களுடைய அடிப்படையில், இப்படித்தான் தீர்ப்பு தர வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.. இதற்கு அசாத்தியமான மன உறுதி வேண்டும்..
கண்ணீர் விட்ட அபிராமி
இதுபோன்ற விஷயங்களுக்கு கருணையை பார்க்காமல், குற்றவாளி அழுகிறார், கெஞ்சுகிறார் என்கிற தயவுதாட்சண்யமும் இல்லாமல், தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தரும் என்பது நேற்றைய தினம் நிரூபணமாகியிருக்கிறது.. நீதியரசர் செம்மல் அவர்கள் தந்த இந்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்க வேண்டும்.
கருணை அடிப்படையில் தன்னை விடுவிக்குமாறு அபிராமி கேட்கிறார்.. ஆனால், இந்த உலகத்தில் கருணை என்ற வார்த்தையை கூட சொல்ல தகுதியில்லாதவர் அபிராமிதான்..
அபிராமியின் கணவர் தனியார் வங்கியில் வேலை பார்த்துள்ளார். வீட்டிலிருந்த அபிராமி டிக்டாக்கில் புகழ் பெற்றுவிட்டார்.. ஆனால், எப்பேர்ப்பட்ட துறையாக இருந்தாலும், ஒருவரின் வெற்றி இதயத்துடன் நின்றுவிட வேண்டும்.. அது மண்டைக்குள் ஏறிவிடக்கூடாது.. அப்படி ஏறிவிட்டால், அது வீழ்ச்சிக்கு அடிகோலிவிடும்..
அபிராமி - மிஸ்ஸிங்
ஏற்கனவே ஒருமுறை விஜய்யுடன் தகராறு செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் அபிராமி.. அவரது பெற்றோர்தான், அபிராமியை சமாதானப்படுத்தி அழைத்து வந்துள்ளனர்.. 2வது முறை அபிராமி மிஸ்ஸிங் என்றதும், விஜய் வீட்டுக்குதான் சென்று தேடியிருக்கிறார்கள்.. அப்போதுதான் பிரியாணிக்கடை சுந்தரம் சிக்கினார்.. அவரைவைத்துதான், அபிராமியை பிடித்தனர்.
சோஷியல் மீடியா ஒரு காரணம் என்றாலும், அதுவே முற்றிலும் காரணம் கிடையாது.. ரீல்ஸ் போடுபவர்கள் எல்லாருமே இப்படி செய்வதில்லையே?
ஆடியோ கேட்டேன்
ஆனால், அபிராமியை பொறுத்தவரை, கொடூர மனநிலைமையின் உச்சமாக இருந்திருக்கிறார்.. சுந்தரத்துடன் அபிராமி பேசும் ஆடியோவை நான் ஒருமுறை கேட்க நேர்ந்தது..
அபிராமி: 5, 5, மாத்திரை தந்தேன்.. ஆனால், தூங்கிட்டு இருக்கிற மாதிரி தான் இருக்கு/
சுந்தரம்: செத்துட்டாங்களா?
அபிராமி: தூங்கற மாதிரிதான் இருக்கு.. ஆனால் என்ன நடக்குதுன்னே தெரியலயே
சுந்தரம்: என்ன நீ, இவ்ளோ தைரியமே இருக்கே, பதட்டமே இல்லாமல் இருக்கே? எனக்கே பயமா இருக்கு....
இப்படி இருவரும் பேசிக் கொண்டார்கள்.. செத்துட்டாங்களான்னு ஒரு கேள்வியை, எந்த தாயால எதிர்கொள்ள கொள்ள முடியும்? ஆனால், பதட்டமேயில்லாமல் பேசினார் அபிராமி.. இப்படியொரு கிரிமினல் பெண்ணுக்கு, இந்த தண்டனை தரப்படாவிட்டால், வேறு எந்த கிரிமினலுக்கு இப்படியொரு தண்டனையை தர முடியும்? என்றெல்லாம் பேசியிருக்கிறார் வழக்கறிஞர் சுமதி.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications