சின்ன வயசுல பட்ட பாடு.. போராடி முன்னேறிய குஷ்பு.. மயிலாப்பூரில் ஆசை நிறைவேறுதா.. பிரபலம் பளிச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குஷ்பு எதிர்பார்த்த மயிலாப்பூர் அல்லது தி.நகர் தொகுதியை வரப்போகும் சட்டமன்றத்தில் தமிழக பாஜக வழங்க வாய்ப்புள்ளது.. அப்படி குஷ்பு போட்டியிட்டால், அவரை விரைவில் எம்எல்ஏவாக சட்டமன்றத்தில் பார்க்கலாம்.. 100 சதவீதம் குஷ்பு வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. குஷ்புவின் நீண்ட கால ஆசை எம்பியாக வேண்டும் என்பதுதான். திரைப்பட கலைஞர்களின் கோட்டாவில் செல்ல விரும்புகிறார்.. அதுவும் நிறைவேறும்" என்று பத்திரிகையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "குஷ்புவை பொறுத்தவரை சிறந்த மனிதாபிமானி.. அதில் மாற்றுக்கருத்தில்லை.. என் நண்பர்கள் அந்த காலத்தில் குஷ்புவிடம் பேட்டி எடுக்க சென்றபோது, நிறைய அரசியல், சமூக சிந்தனையுடன் குஷ்பு உளளதாகவும் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

Television Kushboo actress Khushbu

சின்ன வயதில் தந்தையாரால் கஷ்டப்பட்டுள்ளார் குஷ்பு.. பல ஆண்களால் வஞ்சிக்கப்பட்டுள்ளார்.. பம்பாயில் சாதாரண குடும்பத்தை சேர்ந்த குஷ்பு, பெங்களூருக்கு வந்து சினிமாவில் நடித்தார்.. அங்கு தமிழகத்தை சேர்ந்த ஒரு மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகனை திருமணம் செய்ய முயற்சி செய்தார்.. ஆனால் அது முடியவில்லை.. பிறகு தமிழகத்துக்கு வந்தார்.. பெரும் போராட்டத்துக்கு பிறகு முன்னணி நடிகையானார்..

சர்ச்சை பேச்சு - பாய்ந்த வழக்குகள்

திமுக, காங்கிரஸ், பாஜக என ஒவ்வொரு கட்சியாக சென்றார்.. பலகட்ட போராட்டத்திலும் சர்ச்சையான பேச்சுகள் குஷ்பு மீது எழுந்தன. முக்கியமாக, தமிழகத்துக்கு பெண்கள் கற்பு பற்றி கவலைப்படக்கூடாது என்பார்.. இதனால் வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு நூற்றுக்கணக்கான வழக்குகள் பாய்ந்தன.

தமிழ் கலாச்சாரம் என்பது கற்போடு சம்பந்தப்பட்டது.. கற்பினை உலகுக்கு எடுத்துக்காட்டியவர்கள் தமிழர்கள்.. ஒரு பெண் தவறு செய்தால், அந்த சந்ததியே மாறும், சமூகமே மாறிவிடும். யாருக்கோ பிள்ளையை பெற்று, ஒரு பெண் வீட்டினில் வளர்த்து வர முடியாது.. மரபணு ரீதியாக மனிதர்களின் குணங்களை கடத்தக்கூடியதுதான் சந்ததி..

தேசிய பொறுப்பில் குஷ்பு

எந்த நாட்டுக்கு ராஜாவாக இருந்தாலும்சரி, இன்னொரு ராஜா வீட்டில்தான் பெண் எடுப்பார்கள். ஏனென்றால், பெண்கள் சீரழிந்து சின்னாபின்னமாகிவிட்டால், அந்த குடும்பத்தின் மரபே காணாமல் போய்விடும். குஷ்புவுக்கு இதுபற்றின ஆழ்ந்த அறிவு கிடையாது.. காரணம் அவர் ஒரு முகமதிய பெண்..

துபாயில் இருந்து வந்த மர்ம போன்தான், சுந்தர் சியை குஷ்பு கழுத்தில் தாலி கட்ட வைத்தது.. இன்று 2 குழந்தைகள், கணவருடன் நல்ல முறையில் வாழ்ந்து வருகிறார்.. பாஜகவின் தேசிய அளவிலான பொறுப்பில் உள்ளார் குஷ்பு. காங்கிரஸ் கட்சியிலிருந்தபோதும் தேசிய அளவில் பொறுப்பில் இருந்தார்.. திமுகவிலிருந்தபோதும் தேசிய அளவில் பொறுப்பில் இருந்தார்..

ஒருபக்கம் திரைப்பட முகம், இன்னொரு பக்கம் அரசியல் முகம்.. இந்த இரு முகமும் சேர்ந்ததால்தான், கடந்த முறை மயிலாப்பூர் தொகுதியில் சீட் கேட்டார்.. ஆனால் தமிழக பாஜக தரவில்லை.. தி.நகர் தொகுதியில் சீட் கேட்டார் குஷ்பு.. அதையும் அண்ணாமலை, ஏற்கவில்லை.


சட்டமன்றத்தில் பார்க்கலாம்

மயிலாப்பூர் பாஜக ஆதரவாளர்கள் குஷ்புவுக்கு ஓட்டுபோட்டுவிடடால், பாஜகவின் மாநில தலைவராக வந்துவிடுவாரோ? என்று நினைத்து, குஷ்பு கேட்ட தொகுதிகளை அண்ணாமலை தரவில்லை. ஆனால், பெரிய சட்டமன்ற உறுப்பினராக வந்திருக்க வேண்டியவர் குஷ்பு.. அதை அண்ணாமலை தடுத்துவிட்டார்.

தற்போது நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார்.. நிச்சயம் குஷ்பு எதிர்பார்த்த மயிலாப்பூர் அல்லது தி.நகர் தொகுதியை வரப்போகும் சட்டமன்றத்தில் வழங்க வாய்ப்புள்ளது.. அப்படி குஷ்பு போட்டியிட்டால், அவரை எம்எல்ஏவாக சட்டமன்றத்தில் பார்க்கலாம்.. 100 சதவீதம் குஷ்பு வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. குஷ்புவின் நீண்ட கால ஆசை எம்பியாக வேண்டும் என்பதுதான். திரைப்பட கலைஞர்களின் கோட்டாவில் செல்ல விரும்புகிறார்.. அதுவும் நிறைவேறும்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+