பொண்டாட்டி பிள்ளைகளை தவிக்க விட்டு செல்பவன் நல்ல மனுஷனா? மறைமுகமாக ஜெயம் ரவியை தாக்கினாரா குஷ்பு?
சென்னை: மனைவியையும் குழந்தைகளையும் தவிக்கவிட்டுவிட்டு தனியே செல்பவன் நல்ல மனிதனே இல்லை என நடிகை குஷ்பு தனது சமூகவலைதள பதிவில் தெரிவித்துள்ளார். இதில் அவர் யாருடைய பெயரையும் வெளியிடாவிட்டாலும் நெட்டிசன்கள் இதை ஜெயம் ரவிக்கு, குஷ்பு தெரிவித்ததாகவே கூறி வருகிறார்கள்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட வைரல் பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு உண்மையான மனிதன், தனது குடும்பத்திற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார். அந்த மனிதர் மீது அளவுக் கடந்த அன்பு வைத்திருக்கும் மனைவி, குழந்தைகள், பெற்றோர், உறவினர் உள்ளிட்டோருக்கு முன்பு அவருடைய ஆசைகள், சுதந்திரம், தேவைகள் எல்லாமே இரண்டாம் பட்சம்தான்.

வாழ்க்கை எனும் பயணத்தில் எல்லா திருமணங்களிலும் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். சில தவறுகளும் நடக்கத்தான் செய்யும். அதற்காக அவர் ஆண்டுக்கணக்கில் உருவாக்கி வைத்த குடும்ப கட்டமைப்பை தவிக்கவிட்டுவிட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. உறவு முறைகளில் அன்பு சில சமயங்களில் குறையலாம். ஆனால் அந்த நபர் மீதான மரியாதை எப்போதும் அப்படியேதான் இருக்கும்.
தன் பிள்ளைகளுக்கு உயிர் கொடுத்த மனைவியை ஒரு ஆண் எப்போதும் மதிப்பான். தான் செய்யும் காரியங்கள் தன்னை பார்த்து வளரும் தனது குழந்தைகளுக்கு ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியாதது சுயநலம் ஆகும். இந்த நடவடிக்கை அவர்களையே மீண்டும் திருப்பி அடிக்கும். அதை உணர்வதற்குள் வாழ்க்கையில் எல்லாமே கையை விட்டு போய்விடும்.
ஒரு தாயை, குறிப்பாக உங்களை நேசித்து ஆதரித்த ஒருவரை அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது. இது இதயத்தை உடைக்கும் இரக்கமற்ற நிலையை வெளிப்படுத்துகிறது. ஒரு உண்மையான மனிதன் தன்னை உயர்த்துவதற்கு முதலில் தன் குடும்பத்தை உயர்த்த வேண்டும்.
காதலிலும் அன்பிலும் மாறுபாடுகள் , ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் மரியாதைதான் நிரந்தரம். இதுதான் இரு இதயங்களையும் ஆன்மாக்களையும் இணைக்கிறது. எல்லா நாட்களும் சரியாக அமையும் என சொல்ல முடியாது. ஆனால் இந்த மரியாதை இருந்தால் இருண்ட காலத்திலும் நமக்கு நம்பிக்கையும் புரிதலும் கிடைக்கும்.
நமக்காக இருப்பவர்களை மதிப்பது, நம் உலகமாக இருக்கும் குடும்பத்தை கொண்டாடுவதுதான் உண்மையான வலிமையாகும். உங்களுடன் நிற்பவர்களை மதிப்பதும் உங்கள் உலகமான குடும்பத்தை போற்றுவதும்தான் உண்மையான பலம். இதுதான் காலத்தால் உடைக்க முடியாத பிணைப்பை ஏற்படுத்தும். இந்த உண்மையை ஏற்காத நபர்கள் அன்பின் பாதையிலிருந்தும் நிறைவான வாழ்க்கையிலிருந்தும் விலகிச் சென்றுவிடுவர். இவ்வாறு குஷ்பு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவில் யாருடைய பெயரையும் போடவில்லை என்றாலு்ம இது ஜெயம் ரவிக்கான பதிவு என நெட்டிசன்கள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் ஆர்த்தியின் தாயும் ஜெயம்ரவியின் மாமியாருமான சுஜாதா விஜயகுமார், குஷ்புவின் நெருங்கிய தோழி. அது போல் ஆர்த்தி, ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த இன்ஸ்டா போஸ்ட்டிற்கும் குஷ்பு லைக் போட்டிருந்தார்.
மேலும் ஆர்த்தியும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்வதற்கு குஷ்புதான் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கேற்ப நெட்டிசன்களும் அக்கா , அவர்களை சேர்த்து வையுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஜெயம் ரவி செய்தியாளர்களை சந்தித்த பேசிய போது விவாகரத்து குறித்து ஒன்றரை மாதத்திற்கு முன்பே அவருக்கு (ஆர்த்திக்கு) நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். ஆனால் தனக்கு தெரியாது என அவர் ஏன் சொல்கிறார் என தெரியவில்லை, குழந்தைகளுக்காக எதுவும் பேச வேண்டாம் என பார்க்கிறேன். நீதிமன்றத்தில் ஒரு நாள் உண்மை வெளிவரும் என தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications