ஐயோ வேற வண்டியில காத்தை புடுங்கி விட்ட தேஜா... தியேட்டரில் படம் பார்க்கும் லட்சுமி ஸ்டோர்ஸ்
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலை மக்கள் விரும்பிப் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. கதை, வசனம், ரொமான்ஸுன்னு எல்லாமே ரசிக்கவும், விரும்பவும் கூடியதா இருக்கு.
தேர்தல் பிரச்சாரம்னு குஷ்பூ தலைக்காட்டாம இருக்க கூடாததுன்னே சின்ன சின்ன காட்சிகளில் வந்து போற மாதிரி இப்போ காமிக்க ஆரம்பிச்சு இருக்காங்க.

அதோட குஷ்பூ ரெண்டு நாள் தலை காட்டலேன்னா கதையும் சுவாரஸ்யமா நகராது போலவே கதை அமைப்பும் இருப்பதால குஷ்பூ சின்சியரா சீரியலில் ஆஜராயிடறாங்க.
அன்னிக்கு நடந்த கண்கட்டி விளையாட்டுல ஜெயிக்கறவங்க என் கூட சினிமாவுக்கு வரலாம்னு ரவி சொல்ல, பாக்கியலட்சுமி ஜெயிச்சுடறா. தேஜா ரவி வண்டியில காத்தை பிடுங்கறேன்னு சொல்லிட்டு, ஜவுளிக்கடைக்கு வந்திருந்த யாரோ ஒருத்தரின் வண்டியின் காத்தை பிடுங்கி விட்டுடறா.
ரவியும், பாக்கிய லட்சுமியும் வண்டியில தேஜாவுக்கு டாடா காமிச்சுட்டு கிளம்பறாங்க. தேஜா வயித்தெரிச்சலாகி, குஷ்பூ ஓரகத்திக்கு போன் செஞ்சு சொல்லிடறா... வரட்டும்னு ஒரு சண்டையை இழுக்க காத்திருக்கா. குஷ்பூ வந்தவுடன் லட்சுமியும், ரவியும் சினிமாவுக்கு போயிருக்காங்க.. குடும்ப கவுரவம் போச்சுன்னு கத்தறா.

நீ பார்த்தியா லட்சுமியும், ரவியும் தியேட்டர்ல இருக்கறதைன்னு குஷ்பூ கேட்கறாங்க. நான் பார்க்கலை, என் ஃபிரண்ட் ஒருத்தி சொன்னான்னு சொல்ல, பொன்னம்மா போயி உள்ள இருக்கறவங்களை கூட்டிகிட்டு வான்னு குஷ்பூ சொல்றாங்க.
உள்ளேயிருந்து கையில் காபியோடு வர்றா பாக்கியலட்சுமி. சும்மா தேஜாவை வெறுப்பேத்த வண்டியில வர்ற மாதிரி டாடா காமிச்சுட்டு வந்து, பிறகு லட்சுமி ஆட்டோவில் வீட்டுக்கு வந்துடறா. மேடம் காபி எடுத்துக்கோங்கன்னு சொல்ல, எனக்கு வேணாம்னு கடுப்படிக்கறா ஓரகத்தி.

தியேட்டர்னு எல்லாரும் ஆசை காமிச்சுட்டீங்க.. இப்போ எல்லாரும் தியேட்டர் எஃபட்டுல வீட்டிலேயே படம் பார்க்கலாம்னு கூட்டமா உட்கார்ந்து 96 படம் பார்க்கறாங்க. பொன்னம்மா பெரிய கவரில் பாப்கார்ன் கொண்டு வந்து தர, குஷ்பூவின் ஓரகத்தி டாக்டரம்மா அதைத் தட்டி விடறா லட்சுமி மேல.
தெரியாம தட்டிருச்சுன்னு பொய் சொல்றா. ரவியும், லட்சுமியும் பக்கத்து பக்கத்துல உட்கார்ந்து பார்க்க, குஷ்பூ தன் கணவருடன் பார்க்க, ஓரகத்தி அவள் புருஷனுடன் பார்க்க என்று குடும்பமே சந்தோஷமா படம் பார்க்கும் காட்சி நல்லா இருக்கு.

அதைத்தான் குஷ்பூ சொல்றாங்க குடும்பமே சந்தோஷமா இருக்கும்போது.. எதுக்கு இப்படி பண்றேம்மான்னு ஓரக்கத்தியைப் பார்த்து கேட்கறாங்க. இப்போ இது போல குடும்பங்களை பார்க்கறது அரிதா இருக்கு.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications