Lakshmi stores serial: திருட்டு தாலியை வச்சு எதுக்கு இவ்வளவு சீனு?
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் தாலியை வைத்து நிறைய எபிசோட்கள் பயணிக்குது.அதுவும் தேவை இல்லாத காட்சிகள் நிறைய இருக்கிறது. இது எதற்கு என்று புரியவில்லை.
அதுவும் திருட்டுத் தனமாக கட்டிய தாலியை வைத்து இத்தனை காட்சிகள் தேவையா என்று, நமக்கே கூட அலுப்பு தட்டுகிறது.
தாலியின் புனிதத் தன்மையை கூட்டி காண்பிப்பதாக நினைத்து ஓவர் சென்டிமென்ட். நிஜமா வாழ்க்கைக்கு உதவாது.

மஞ்சள் தாலி
கடற்கரையில் ரவி ரவுடிகளின் தொல்லையால், பாக்கிய லட்சுமிக்கு தாலி கட்டிவிடுகிறான். அதுவும் ரவுடிகள் தொல்லையால், அவர்கள் கையால் வாங்கிய வெறும் மஞ்சள் மட்டுமே கட்டி முடிச்சு போட்டு கொடுத்த தாலி, பயத்தில் கட்டியது அதற்கு பாக்கியலட்சுமி இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?

தாத்தா மரியாதை
திருட்டு தாலி கட்டிக்கொண்டு வந்து பேத்தி நிற்கும்போது, தாத்தாவும் ஆதரவு தருவது ரொம்ப வேடிக்கை. அப்புறம் பெரியவங்க பார்த்து, முப்பத்து முப்பது கோடி தேவர்கள்,முனிவர்கள் சாட்சியாக கட்டும் தாலிக்கு மதிப்பு என்ன இருக்கிறது? இதை கழட்டிப் போடு, கல்யாணம் எல்லார் சம்மதத்தோடு நடக்க நான் பார்த்து பேசறேன்னு ஒரு பெரியவர் தனது அனுபவத்துக்கு முடிவு எடுக்க வேண்டாமா?

ஓவர் சென்டிமென்ட்
திருட்டு தாலிக்கு ஓவர் சென்டிமென்ட் கொடுப்பது ரொம்ப வேடிக்கையா இருக்குது.பெண்கள் கழுத்தில் பிடிக்காதவன் தெரியாமல் தாலி கட்டிவிட்டாலும், நடைமுறையில் இப்படித்தான் சென்டிமென்ட் காண்பிப்பாங்களா? கட்டின புருஷன் மேலேயே ஒரு வெறுப்பு அல்லது அவன் தவறு செய்தால்,பெண்கள் தாலியை கழட்டி எறிகிறார்கள்.

நோ பின்னோக்கி
பெண்களை முன்னோக்கிய பாதையில் வளர்ச்சியை நோக்கி கொண்டு போங்க. என்னதான் உயர்ந்த பதவியில் வெளியில் இருந்தாலும், வீட்டுக்கு அவள் மனைவிதான்., அந்த பொறுப்புணர்ச்சி 99 சதவிகித பெண்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.ஆனால், திருட்டு தாலிக்கு இத்தனை முக்கியத்துவம் தரவே வேணாம்ங்க.
எங்கள் பெண்களை தவறான பாதையில் வழி நடத்தாதீர்கள்!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications