Lakshmi Stores Serial: ப்ரியா என் மகள்தான்...சீன் சூப்பர்!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மினிஸ்டர் சகுந்தலா தேவியின் சாக்லேட் கம்பெனி தயாரிப்பில் போதை பொருள் கலந்து இருப்பதை மகாலட்சுமி போலீசில் புகார் குடுத்துடறாங்க.
இந்த கேஸில் மகாலட்சுமியின் கணவர் தேவராஜும் சம்பந்தப்பட்டு இருக்கார் என்று சகுந்தலாதேவி சொன்னாலும், அவர் உண்மை தெரியும் மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் கம்பெனியில் பார்ட்னர் ஆகி இருக்கார்னு மகாலட்சுமிக்கு தெரியும்.
கோர்ட் கேஸில் மினிஸ்டரின் தரப்பு வாதம் எடுபடாமல் போகிறது. உண்மை நிரூபிக்கப்பட்டு, தீர்ப்புக்கு தேதி சொல்லி இருக்காங்க.இந்த நேரத்தில்தான் மினிஸ்டர் சகுந்தலாதேவி போகிற போக்கில் ஒரு உண்மையை சொல்லிட்டு போறாங்க.

உண்மை ப்ரியா
மகாலட்சுமி இந்த தோல்வி எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை.ஆனால், நான் ஒரு உண்மையை சொன்னால் உன்னால் தங்கிக்கவே முடியாதுன்னு மினிஸ்டர் சொல்ல, என்ன உண்மை அதுன்னு கேட்கறாங்க மகாலட்சுமி. சொன்னா நீ தாங்கமாட்டே மகாலட்சுமின்னு மினிஸ்டர் கிண்டல் பண்ணை சும்மா எதாவது உளறிக்கிட்டு இருக்காதேன்னு சொல்றாங்க மகாலட்சுமி. அது ப்ரியா பத்தின உண்மை என்று மினிஸ்டர் சொல்றாங்க.

என்னாச்சு ப்ரியாவுக்கு
என்னாச்சு என் ப்ரியாவுக்கு? அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு அப்பறம் நான் சும்மா இருக்கமாட்டேன்னு மகாலட்சுமி பதறி கேட்க, பிரியா உன் மகளே இல்லை.. இந்த உண்மை தெரியுமா உனக்குன்னு கேட்டுட்டு மினிஸ்டர் கார்ல் ஏறி போயிடறாங்க. மகாலட்சுமி உடனே அழுதுகிட்டு வீட்டுக்கு ஓடி வராங்க.

கோப்புக்களை கலைச்சு
அழுதுகிட்டே எல்லா கோப்புக்களை கலைச்சு போட்டுட்டு இல்லே இல்லேன்னு திட்ட, வேலைக்காரி பொன்னம்மா என்னம்மா நீங்க சொல்லிட்டு தேடுங்க.நானும் தேடித் தரேன்.சொன்னாதாம்மா தெரியும்.சொல்லிட்டு தேடுங்க..நானும் தேடறேன்னு சொல்லியும் மகாலட்சுமி எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தேட , ரவி,கமலா எல்லாரும் வந்து என்ன அண்ணின்னு கேட்டும் பதிலில்லை.

அரை சாமி
சாமி அறையில் இருந்த ஒரு டிராவை திறந்து பார்த்தால்,அங்கு இருக்கிறது ப்ரியாவின் பர்த் சான்றிதழ். அதை எடுத்து தன்னோடு அணைச்சுக்கிட்டு, ப்ரியா என் பொண்ணுதான்னு மகாலட்சுமி அழ, உங்க பொண்ணுதான் ப்ரியா.யாரும்மா இல்லேன்னு சொன்னாங்கன்னு வேலைக்காரி கேட்கறாங்க.
அதுக்கு ஏத்த மாதிரி பிரியா ஸ்கூல் விட்டு வர,யார் என்ன சொன்னாலும் நீ என் பொண்ணுதான்னு அவளை அணைச்சுக்கறாங்க. அவள் சீ என்று தள்ளி விடுகிறாள் அம்மாவை. குஷ்பூ இந்த எபிசோடில் மகாலட்சுமியா நல்ல நடிச்சு இருக்காங்க.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications