Actor Rajesh Cemetery: தனக்குத் தானே கட்டிய கல்லறையில் துயில் கொண்ட நடிகர் ராஜேஷ்!
சென்னை: மறைந்த நடிகர் ராஜேஷின் உடல், அவர் கட்டிய கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த மகள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்குப் பிறகு கீழ்ப்பாக்கம் கல்லறையில் ராஜேஷ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தமிழ் திரையுலகின் குணச்சித்திர நடிகரான ராஜேஷ் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 45 ஆண்டுகளில் 150 படங்களுக்கும் மேல் நடித்து பிரபலமானவர் நடிகர் ராஜேஷ். திரைப்படங்களை தவிர்த்து சின்னத்திரையிலும் நடித்து வந்தார். யூடியூப் சேனலில் ஜோதிடம் தொடர்பான நிகழ்ச்சியை தொகுத்து வந்தார்.

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும் இரண்டு ஆண்டுகளாக பொறுப்பு வகித்திருந்தார். இந்த சூழலில் ராஜேஷ் (76) உடல் நலக் குறைவு காரணமாகச் சென்னையில் 29 ஆம் தேதி காலமாகினார். அவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ராஜேஷின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, அமைச்சர்கள், திரையுலகினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். ராஜேஷின் மகள் வெளிநாட்டில் இருந்ததால் அவர் வந்த பிறகு உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
கனடாவில் இருந்து நேற்று நள்ளிரவில் சென்னை திரும்பிய ராஜேஷின் மகள் திவ்யா, தமது தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். தொடர்ந்து இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்குப் பிறகு ராஜேஷ் உடல் அசோக் நகரில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு ராஜேஷ் உடலுக்கு சிறப்பு பிராத்தனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அசோக் நகரில் இருந்து ராஜேஷ் உடல் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 35 ஆண்டுகளுக்கு முன்பு தனக்குத் தானே கல்லறையை வடிவமைத்திருந்தார் ராஜேஷ். அதில் தான் அவரது தந்தை, தாயின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டிருந்தன.
தாய், தந்தை, மனைவி ஆகியோர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே ராஜேஷ் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. ராஜேஷ் தனக்காக கட்டிய கார்ல் மார்க்ஸ் கல்லறை பாணியில் கட்டப்பட்ட கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
முன்பு ஒரு பேட்டியில் இந்த கல்லறை பற்றி கூறியிருந்தார் நடிகர் ராஜேஷ். "நான் 1988 ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்ற போது கார்ல் மார்க்ஸ் கல்லறைக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அதைப் போலவே எனக்கும் ஒரு கல்லறையை எனது 40 வயதில் கட்டியிருக்கிறேன். இதற்கு முன்பு முதலில் மார்பளவு கட்டியிருந்தேன். அது இடிந்துவிட்டது. இப்போது கிரைனைட் கற்களில் கட்டி முடித்திருக்கிறேன்.
இதை கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன். அவர்தான், உயிரோடு இருக்கும் போதே அவருக்கு கல்லறையை கட்டி, பின்பு 27 வருடங்கள் கழித்து இறந்தார். தனக்கு எவன் கல்லறை கட்டுகிறானோ அவன் நூறு ஆண்டுகள் வாழ்வான் என சீன பழமொழி ஒன்று உண்டு. ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் இறந்த பின்பு என்னுடைய கல்லறை இப்படி இருக்க வேண்டும் என என் பிள்ளைகளுக்கு எப்படி நான் சொல்ல முடியும்?
எனக்கு மார்க்ஸ் போன்று கல்லறையை கட்டவேண்டும் என என் மகள், மகனுக்கு எப்படி சொல்ல முடியும்? அவர்களுக்கு அதற்கெல்லாம் நேரம் இருக்குமோ இல்லையோ எனத் தெரியவில்லை. அதனால்தான் நானே பைபில் வசனம் உள்ளிட்ட நிறைய விஷயங்களை குறிப்பிட்டு எனக்கு நானே கல்லறை கட்டி முடித்துவிட்டேன். என் கல்லறையை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது" எனக் கூறி இருந்தார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications