வாழைப்பழத் தோலில் வழுக்க போவது யாரு...இந்த வாரம் தரமான சம்பவம் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : மாஸ்டர்செஃப் நிகழ்ச்சியில் இந்த வாரம் வித்தியாசமான பொருள்களை வைத்து ரசிகர்களை மட்டுமல்லாமல் கன்டஸ்டன்ட்களையும் விழிபிதுங்க வைத்திருக்கிறார்கள்.

யாரு இதில் சிறப்பாக செய்து பால்கனிக்கு போகிறார்களோ இல்லை சொதப்பி வெளியே வருகிறார்களோ என்று ரசிகர்களுக்கும் ஆர்வம் பொங்க தான் செய்திருக்கிறதாம்.

பழத்தை சாப்பிட்டு விட்டு தூக்கி வீசும் தோலில் பல டிப்ஸ்களை செய்து அசத்தி நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நடுவர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் கன்டஸ்டன்ட் கள் ஷாக் கொடுத்து விட்டார்கள்.

இது என்ன தோலுக்கு விளம்பரமா?

இது என்ன தோலுக்கு விளம்பரமா?

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கு மாஸ்டராக இந்த வாரம் பக்கா பிளான் போட்டிருக்கிறார்கள். ஆனால் அதையும் நாங்கள் விட்டு வைக்க மாட்டோம் என்று சர்வ சாதாரணமாகச் செய்து முடித்திருக்கிறார்கள். இதைப் பார்க்கும் ரசிகர்களும் அப்படி என்னதான் செய்துவிட்டார்கள் என்று ஆர்வம் பொங்க காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி மட்டும் ரொம்பவே பயந்து விட்டார் போல, எல்லோரும் சாப்பிட்டுவிட்டு ஒன்றும் ஆகவில்லை என்றால் நான் சாப்பிடுகிறேன் என்று பயம் கலந்த முன்னேற்பாட்டுடன் கூறியிருக்கிறார். ஆனால் கண்டஸ்டண்டுகள் செய்யும் சமையலை பார்த்து ரசிகர்கள் ரொம்பவே ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

எதையும் சமாளிக்கும் கன்டஸ்டன்ட்கள்

எதையும் சமாளிக்கும் கன்டஸ்டன்ட்கள்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர்செப் நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே ரசிகர்களாக மாறிவிட்டார்கள். இந்த நிகழ்ச்சியில் இன்டர்நேஷனல் லெவலில் சமையல் வேலை செய்து அசத்துவார்கள் என்று முதலில் ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்கள் பின்பு கிராமிய சமையலையும், புதிய புத்தாக்கத்தில் இவர்கள் செய்வதை பார்த்து ரசிக்கத் தொடங்கி விட்டார்கள். அதிலும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதிக்கு ரசிகர்களின் மத்தியில் ஏற்கனவே பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில், இப்போ கொஞ்சம் அதிகமாகத்தான் ஆகி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சில ரசிகர்கள் என்ன திடீரென்று விஜய் சேதுபதி இப்படி இறங்கிவிட்டார். இவரை சினிமாக்களில் ஹீரோவாக பார்த்துக்கொண்டிருந்தால் தான் சிறப்பு என்று சிலர் பீல் பண்ணியும் வருகின்றனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத விஜய் சேதுபதி சிறப்பாக தன்னுடைய வேலையை தனக்கே உரிய நக்கல் தனத்துடனும் செய்துகொண்டிருக்கிறார்.

யாரும் சளைத்தவர்கள் இல்லையே

யாரும் சளைத்தவர்கள் இல்லையே

இந்த நிகழ்ச்சியில் கண்டஸ்டன்டுகள் சாதாரண கிராமத்திலிருந்து வந்தவர்களும் நகரத்தில் உள்ளவர்களும் என பலதரப்பட்டவர்களும் இருக்கின்றனர். ஆனால் ஒருவருக்கு ஒருவர் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று ஒவ்வொரு வாரமும் தங்களுடைய திறமைகளை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குள் ஏற்படும் போட்டிகளும் ஆரோக்கியமான போட்டியாக தான் இருக்கிறது. அதனால் தான் ஒருவரை விடவும் இன்னொருவர் சிறப்பாக தங்களுடைய கலையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். சமையல் என்பது வெறும் வயிற்றுக்கு கொடுக்கும் சாப்பாடு மட்டுமல்லாமல் அது ஒரு கலை, அதை முழு மனதோடும், ஆரோக்கியத்தோடும் செய்தால்தான் சமையல் செய்பவர்களுக்கும் அதை நம்பி சாப்பிடுபவர்களுக்கும் சிறப்பு என்பதை தற்போது இந்த கண்டஸ்டன்டுகள் ஒவ்வொருவரும் நிரூபித்து வருகிறார்கள்.

வெற்றி கிக்கா தான் இருக்கு

வெற்றி கிக்கா தான் இருக்கு

இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 12 பேர் இருந்து கொண்டிருக்கும் வேளையில் போனவாரம் ஒரு கன்டஸ்டன்ட் மட்டும் நிகழ்ச்சியில் இருந்து விலகி இருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் இந்த வாரம் யாரு அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்ல இருக்கிறார், என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தாலும் இந்த வாரத்திற்கான டாஸ்க் பார்த்து கொஞ்சம் அசந்து தான் போய் விட்டார்கள். அது எப்படி இதுல போயி செய்ய முடியுமா என்று சிலர் கூறிக் கொண்டிருக்கும் போது, சிலர் ஐயோ!!என்று முகம் சுளிக்கவும் செய்கின்றனர். ஆனாலும் அது எல்லாம் அவ்வளவு பெரிய மலையை தூக்குகிற விசயமல்ல எங்களால் எதையும் செய்ய முடியும் என்று பரபரக்கும் கண்டஸ்டன்கள் விறுவிறப்பாக சமையலை செய்து முடித்துவிட்டார்கள். வேலை செய்து கொண்டிருக்கும் போதெல்லாம் பார்த்து ரசிக்கும் விஜய் சேதுபதி சமையல் முடிந்த பிறகுதான் கொஞ்சம் முன்னெச்சரிக்கையோடு இருக்கிறார்.

நாவில் நீர் ஊறுது..

நாவில் நீர் ஊறுது..

இந்த வாரத்தின் யார் அசத்துவார் யார் சொதப்புவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தாலும் இவர்கள் செய்த சமையலை பார்த்ததும் அப்படியே சாப்பிடலாம் போல என்று நாக்கில் நீர் ஊறுகிறது. ஒரு சிலருக்கு இந்த நிகழ்ச்சிதான் தமிழில் சிறந்த நிகழ்ச்சி என்றும் ரசிகர்கள் புகழாரம் சூட்டுகிறார். இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது இது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போன்று இருக்கும் என்று எதிர்பார்த்து நின்ற ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல இந்த நிகழ்ச்சியும் ரசிகர்களின் மனதை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. பிரம்மாண்டமான செட்டில் இவர்கள் செய்யும் பிரம்மாண்டமான சமையல்களை பார்த்து பலர் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும்தானா? இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஒளிபரப்பினால் நன்றாக இருக்குமே என்று பீல் பண்ண தொடங்கிவிட்டனர். காரணம் சீரியல்களில் வரும் அழுகை சீன்களை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களை இந்த மாதிரி ஜாலியான மற்றும் மனதிற்கு இதமான நிகழ்ச்சியை பார்க்கும் போது அனைவருக்குமே பிடித்து இருக்கிறது. ஆனால் இந்த வாரத்தில் சம்பவம் சரியாக இருக்கப்போகிறது. யாரு அசத்தப் போகிறார் யார் இதில் சொதப்ப போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+