Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமன் உன்னை காக்கட்டும்.. அல்லாஹ்... அதிசய துவராகமயி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் சாய் பாபா சீரியல் பார்க்க ரொம்ப பரவசமா இருக்கு. சன் டிவியில் காலை 9 மணிக்கு ஆரம்பிச்சு 3 சீரியல்கள் பக்தி காவியமா இருக்கு. ஜெய் அனுமான், விநாயகர், சாய் பாபான்னு மூணு சீரியல்.

நல்ல நேரத்துல இந்த சீரியல்களை ஒளிபரப்பறதால வீட்டில் இருக்கும் பெரியவங்களுக்கு நல்லா பொழுது போகுது. ரொம்ப ஆவலா வீட்டுல யார் தொந்திரவும் இல்லாம இந்த சீரியல்களை பார்க்கறாங்க.

காலையில எழுந்த உடனே டென்ஷன்னு கின்ஷன்னு எதுவும் இல்லாம மனசு வெறுமையா இருக்கற நேரத்துல இந்த மாதிரி பக்தி சீரியல்கள் பார்ப்பது மனசுக்கு புது உற்சாகத்தைத் தருதுன்னு சொல்றாங்க.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகைக்காக சாய் பாபாவின் சீடர்கள், பக்தர்கள் எல்லாரும் விளக்கு செய்து விக்கறாங்க. அங்க ஒரு கண் தெரியாத அம்மா விளக்கு வாங்கிக்கோங்க.. என்கிட்டே விளக்கு வாங்கிக்கோங்கன்னு கத்தினாலும் யாரும் விளக்கு வாங்காமா உன் விளக்கு சரியில்லேன்னு சொல்லிட்டு, சாயின் பக்தை சம்பாவின் விளக்கை மட்டும் வாங்கிக்கறாங்க.

எல்லா விளக்கையும்

எல்லா விளக்கையும்

சம்பாகிட்ட இருந்த எல்லா விளக்கும் வித்து போயிருது..ஆனா, பக்கத்துல இருக்கும் கண் தெரியாத அம்மாவின் விளக்கு ஒண்ணுகூட விக்கலியேன்னு சம்பாவுக்கு கவலையாயிருது. அந்த அம்மாகிட்ட இருந்த விளக்கு எல்லாத்தையும் காசு குடுத்து சம்பா வாங்கிக்கறா.

சாயிடம்

சாயிடம்

சம்பா சாயிடம் போய், சாய்.. இன்னிக்கு புதுசா கண்ணு தெரியாத ஒரு அம்மா விளக்கு வித்துக்கிட்டு இருந்தாங்க. அவங்களை இதுக்கு முன் துவாரகமயில நான் பார்த்ததே இல்லை சாய். விளக்கு கோணலா இருக்குன்னு யாருமே அவங்ககிட்ட விளக்கு வாங்கலை சாய் .. பாவமா இருந்துச்சு.. எல்லா விளக்கியும் நான் விளக்கு வித்த காசுல வாங்கிட்டேன். ஆனா, பாருங்க தீபாவளி பண்டிகையை கொண்டாட என்கிட்டே காசு இல்லை.இனிமே விளக்கு செய்து எப்படி விக்க முடியும் சாய்னு கேட்கறா.

சரி செய்யலாம்

சரி செய்யலாம்

இந்த விளக்கையே சரி செய்து விக்கலாம் சம்பான்னு சாய் சொல்ல, அப்படியா சாய் சொல்றீங்க..எங்கே எப்படி சரி செய்யறதுன்னு சொல்லி குடுங்கன்னு கேட்க, எல்லா குழந்தைகளுக்கும் அந்த விளக்குகளை எப்படி சரி செய்யறதுன்னு சாய் சொல்லித் தர்றார்.

விளக்குகள்

விளக்குகள்

விளக்குகள் அருமையாக மாறிவிட அதை வித்துட்டா சம்பா. கண்ணு தெரியாத அம்மாவை காக்கா துரத்துது, வேற இடத்துக்கு போனா எறும்பு கடிக்குது. ரொம்ப அவஸ்தைப் பட்டு வாழை மரத்தின் அடியில் உட்கார்ந்து நிம்மதி பெருமூச்சுவிட, தொலைவில் இருக்கும் துவாரகமயி ஆஸ்ரமத்தில் துளசி செடிக்கு சாய் ஊத்திய தண்ணீர் சற்று தொலைவில் இருக்கும், இந்த அம்மாவை உட்கார விடாமல் செய்யுது.

வழியில்லை

வழியில்லை

சாகவும் வழியில்லை, மறுபடியும் காக்கா துரத்துதுன்னு புலம்பிகிட்டே நடக்க ஆரம்பிக்க, அம்மா.. உங்ககிட்ட விளக்கு வங்கினேனே நினைவு இருக்கா.. அது நான்தான் அம்மான்னு சொல்றா. ஐயோ.. நீ விளக்கு விக்கலையா.. என்கிட்டே உனக்கு தர காசு இல்லையேம்மா.. எல்லாத்தையும் சாப்பபட்டுக்கு செலவு பண்ணிட்டேனேன்னு புலம்பறாங்க.

விளக்கை

விளக்கை

இல்லை அம்மா.. உங்க விளக்கை எல்லாம் சாய் சொல்லி குடுத்த மாதிரி சரி செய்து வித்துட்டோம். இன்னும் நீங்க வீட்டுக்கு போகலையான்னு கேட்கறா. எனக்கு வீடுன்னு இருந்தாதானே போவேன்னு கண்ணீர் விடறாங்க அந்த அம்மா. சரி வாங்க நான் சாய்கிட்ட அழைச்சுட்டு போறேன்னு சொல்லி அழைச்சுட்டு போறா.

கேள்விப்பட்டு இருக்கேன்

கேள்விப்பட்டு இருக்கேன்

சாய் உங்களை பத்தி நான் கேள்விப்பட்டு இருக்கேன். வாழ்க்கையில் உங்களை ஒரு தடவையாவது பார்த்துடனும்னு நினைச்சேன்.. ஆனா, எனக்கு கண்ணு தெரியாம போச்சு. உங்க கிட்ட எது கேட்டாலும் நீங்க தருவீங்களாமே .. நான் சாகணும் சாய்னு சொல்றாங்க.

செய்தால்

செய்தால்

ராமன் உங்களை காக்கட்டும்.. நான் சொல்றதை நீங்க செய்தால், நீங்க கேட்டது கிடைக்கும்னு சாய் சொல்றார். கண்ணு தெரியாத என்னால எப்படி நீங்க சொல்றதை செய்ய முடியும்னு அந்த அம்மா சொல்றாங்க. அதுக்குள்ளே சம்பா இன்னிக்கு தீபாவளி.. நீங்க புது புடவை உடுத்திக்கோங்கன்னு தன் அம்மா புடவையை எடுத்துட்டு வந்து தர்றா. தலைவாரி கொண்டை போட்டு பூ வச்சும் விடறா.

தீபங்கள்

தீபங்கள்

இன்னிக்கு நீங்கதான் துவாரகமயி முழுக்க விளக்கு ஏத்தி வைக்க போறீங்கன்னு சாய் சொல்ல, கண்ணு தெரியாத என்னால எப்படி சாய் முடியும்னு அந்த அம்மா கேட்கறாங்க. நான் உங்களுக்கு உதவி செய்யறேன்னு சொல்லிட்டு. விளக்கை கையில குடுத்து.. இத்தனை அடி இப்படி எடுத்து வைங்க.. இந்த இடத்துல குனிஞ்சு வைங்கன்னு வழி காட்டறார். இப்போ இந்த கடைசி விளக்கை பெண் குழந்தைங்க கோலம் போட்டுக்கிட்டு இருக்காங்க. அந்த கோலத்துல வைங்கன்னு சொல்றார் சாய். அதே போல அவங்களும் வைக்க விளக்குகள் எரிந்தன.

முழுவதும் தீபம்

முழுவதும் தீபம்

இப்போது துவாரகமயி முழுக்க எவ்ளோ வெளிச்சம்.. எல்லா தீபமும் நீங்க ஏத்தி வச்சதுன்னு சொல்றார் சாய். அந்த அம்மா என்னாலயும் வேலை செய்ய முடியும்னு குதூகலிக்கறாங்க. சாய் இப்போ சொல்லுங்க நான் உயிரோட இருந்து என்ன பண்ண போறேன்.. சகணும்னு சொல்றாங்க. உங்களால எல்லா வேலையும் செய்ய முயடியும்போது நீங்க ஏன் சாகணும்னு சாய் கேட்கறார்.

பார்க்க

பார்க்க

உங்களை . பார்க்கமுடியலை.தனியா ஒரு வேலை செய்ய முயடியலை நான் எதுக்கு இருக்கணும்னு கேட்கறாங்க. சரி, நீங்க கடைசியா ஒரு விளக்கு எந்த இடத்துல வச்சீங்களோ அதை எடுத்துட்டு வாங்கன்னு சொல்றார் சாய். கண்ணு தெரியாத அந்த அம்மா, சரியாக போயி, கோலத்து நடுவுல வச்ச விளக்கை எடுத்துக்கிட்டு வர்றாங்க. என்ன ஆச்சரியம் அந்த விளக்கிலிருந்து இரு ஒளிகள் வந்து அந்த அம்மாவுக்கு பார்வை வந்துருது.

ஆஹா நீங்க உண்மையா அற்புதம் செய்துட்டீங்க சாய்..என்று சிலாகித்து பரவச நிலைக்கு போறாங்க அந்த அம்மா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+