ADயுடன் கிரஷ்! புரிய வைத்த அம்மா! கேரள சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியரின் வாழ்வில் இத்தனை சோகங்களா
சென்னை: ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர், நடிகைகள் வீழ்ந்து பின்னர் திரும்பி வந்தவர்கள். அவர்கள் யார் யார் என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 'வேட்டையன்' ரிலீஸ்... 1975ல பாண்டியன்...ஐம்பதாவது வருடத்தில் வேட்டையன்.. ரொம்ப எமோஷனலான விஷயம் ரஜினிக்கு. ஐம்பது வருடமாக ஒரு சக்ஸஸ்ஃபுல் ஹீரோவா அவர் இருப்பது மிகப்பெரிய விஷயம்.

ஃபங்ஷன்ல தலைவர் அமிதாப் பற்றி சொன்ன விஷயங்கள்.. இப்போ டிரெண்டிங்ல இருக்கு. வீழ்ந்து போய் ஒரு மனிதன் எப்படி திரும்பி வருகிறான் என்பதற்கு உதாரணமா அந்தக் கதையை சொன்னார்.
என்ன ப்யூட்டீன்னா இந்தப்படத்தில் நடித்த பலரும் வீழ்ந்து வந்தவங்க தான்.
#ஃபகத்ஃபாஸில்... முதல் படமான 'கையெத்தும் தூரத்து'வில் 2002ல் அப்பாவால் அறிமுகப்படுத்தப்பட்டு 'ஷானு' என்கிற பெயரில் நடித்து அந்தப்படம் தோல்வியுற்றது. பத்திரிக்கைகள் 'அப்பா ஃபாஸில் என்பதால் இவர் ஹீரோவாகி விட்டார்' என எழுதித்தள்ளிய போது 'என் தோல்விக்கு என் அப்பாவை குற்றம் சொல்லாதீர்கள்.

எந்த பயிற்சிகளும் இல்லாமல் நான் வந்த என் தவறு" என சொல்லிலவிட்டு அமெரிக்கா போய் படிக்கப் போய் விட்டார். திரும்ப 2009-ல் வெறியோடு வந்து எல்லா ஹீரோக்களோடும் போட்டி போட்டு இன்றைக்கு தென்னிந்தியாவே பாராட்டும் நடிகராக திரும்பி வந்து விட்டவர்.
#மஞ்சுவாரியர் பற்றி சொல்லாம இருக்கமுடியாது. சாதாரண நடிகையாக உள்ளே வந்தவர். முதல் படத்திலேயே உதவி இயக்குனரோடு க்ரஷ்ஷாகி ஷுட்டிங்கின் பாதியிலேயே ஓடிப்போன மஞ்சுவை கஷ்டப்பட்டு புரியவைத்து நடிகையாக்கினார் அவர் அம்மா. படம் பெரிய ஹிட். கூடவே கிஃப்ட்டாக வந்தது சக ஹீரோ திலீப்பின் காதல். நல்ல பீக்கில் இருக்கும் போது திருமணம் செய்த போது அந்த ஜோடியை கேரளமே கொண்டாடியது.

ஒரு மகளைப் பெற்றதும் பின் கணவன் வேறொரு நடிகையோடு தொடர்பானதோடு அல்லாது மற்றொரு நடிகையின் பலாத்கார வழக்கிலும் அடிபட தனியாக விவாகரத்து வாங்கி வந்து திரைத்துறையில் நுழைந்து உடலை குறைத்து இப்போது கேரளத்தில் சூப்பர்ஸ்டார் நடிகை...நம்ப முடியாத கம்பேக்...
#ராணா...பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும் தாத்தா ராமாநாயுடுவாகவே இருந்தாலும் ராணா தனக்கென ஒரு தனித்துவம் வேண்டுமென நினைத்தார். பாகுபலி போன்ற படத்துக்காக கடும் உடற்பயிற்சி செய்த காரணமோ அல்லது வேறு காரணமோ சிறுநீரக கோளாறு, இதயம் சீராக இயங்காதது போன்ற உடல் உபாதைகளோடு வாழ்வு 30% முடிவு தேதி தீர்மானிக்கப்பட்டதாக ராணா, ஒரு சமந்தாவின் டாக்ஷோவில் கலங்கியதைக் கண்டு ஆந்திரமே கலங்கிப் போனது. ஆனாலும் விடாமல் சினிமாவில் நடிப்பதை விடாமல் சோகங்களை தூக்கி ஓரங்கட்டி போட்டு விட்டு வந்து விட்டார். நெஞ்சுரம் கொண்ட பல்வாள்தேவன்....

#ராவ் ரமேஷ்... மிகப்பெரிய வில்லன் நடிகர் ராவ் கோபால் ராவ். சிரஞ்சீவி படங்களில் 80களில் ஆஸ்தான வில்லன். இவரின் மகனாக பிறந்தும் சினிமா அத்தனை எளிதாக வசப்படவில்லை ராவ் ரமேஷுக்கு. சென்னையில் படித்து வளர்ந்து போட்டோகிராபி ஆர்வத்தில் ஒளிப்பதிவாளர் கே.எஎஸ்.பிரகாஷ் ராவிடம் உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த போது கண்டசாலா ரத்னகுமார் இயக்கிய சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்தன. அப்படி நடித்தும் அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டன. பின் சென்னை திரும்ப வந்து 'செல்லமடி நீ எனக்கு' போன்ற சீரியல்களில் நடித்து வந்திருக்கிறார். ஒரு படத்தில் சிம்ரனின் அண்ணனாக திரையுலகில் நுழைந்து சிறு சிறு வேடங்களில் படித்தவர் இன்று தவிர்க்க முடியாத நடிகராகி விட்டார். தமிழில் ஈசன் படம் மூலம் சசிகுமார் நடிக்க வைக்க ஜெய்பீம் படத்திலும் நடித்தார். நல்ல நடிகர் ராவ் ரமேஷ்...

கம்பேக் என்றால் அமிதாப் மட்டுமல்ல. மேலே சொன்னவர்களோடு தலைவரையும் சொல்லலாம். அபிராமி, ரோஹிணி போன்றவரும் லிஸ்ட்டில் உண்டு... படத்தில் ஒரு வேட்டையன். இவர்கள் எல்லோருமே நல்ல வாழ்க்கையை வேட்டையாடிப் பெற்றவர்கள்... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications