சரிகமப சீனியர் 6இல் திவினேஷ் பாடிய பாடல்.. கண் கலங்கிய ஸ்ரீனிவாஸ்.. இந்த அன்புக்கு ஈடு இல்லை.. நெகிழ்ந்த அரங்கம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னரான திவினேஷ், சரிகமப சீனியர் சீசன் 6 நிகழ்ச்சியில் மீண்டும் பாடுவதற்காக வந்திருக்கிறார். திவினேஷ் பாடிய பாடலை கேட்டு நடுவர் ஸ்ரீனிவாஸ் கண்கலங்கி அழுது இருக்கிறார். அப்போது சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் அதர்வாவும் திவினேஷ் பாடலை கேட்டு வியந்து போய் இருக்கிறார்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனாலயே ஒவ்வொரு சேனலிலும் புது புது ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஜீ தமிழில் சரிகமப நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் ஜூனியர் மற்றும் சீனியர் என்று இரண்டு பிரிவாக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

சரிகமப சீனியர் போட்டியாளர்கள்
அதில் ஜூனியர்களுக்கான லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி சமீபத்தில் தான் முடிவடைந்தது. அந்த நிகழ்ச்சி முடிவடைந்த அடுத்த வாரத்திலேயே சீனியர்களுக்கான ஆறாவது சீசன் தொடங்கப்பட்டது. ஜூனியர்களுக்கான நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக திவினேஷ் தேர்வு செய்யப்பட்டார் ரன்னராக ஹேமித்ரா தேர்வு செய்யப்பட்டார். திவினேஷ் இந்த நிகழ்ச்சியில் அதிகமான பழைய பாடல்கள் தான் பாடி இருந்தார். 70s காலகட்டத்தில் உள்ள பாடல்களை இப்போதுள்ள தலைமுறையினரும் கேட்டு மயங்கும் வகையில் இவருடைய குரல் வளம் இருந்தது.
திவினேஷ் பாடிய பாடல்
அதுபோல தாத்தா பாட்டிகளின் மனதை கொள்ளை கொண்ட பேரனாக மாறிவிட்டார். இவர் மீண்டும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பாட வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வேண்டுகோள் வைத்து வந்தனர். அதன் காரணமாகவே சீனியர்களுக்கான ஆறாவது சீசனிலும் திவினேஷ் ஏற்கனவே பாடியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த வாரத்தில் டூயட் ரவுண்டு நடைபெறுகிறது. அதிலும் திவினேஷ் பாட வந்திருக்கிறார். திவினேஷ் பிரதீபா உடன் சேர்ந்து "மலர்ந்து மலராத" என்ற பழைய பாடலை பாடி இருந்தார்.

மாறாத அன்பு
அந்த பாடல்கள் பிரதீபா மற்றும் திவினேஷ் பாடிக்கொண்டிருக்கும் போது திவினேஷ் தோள் மீது கை வைத்து தட்டி கொடுத்ததை பார்க்கும்போது அவ்வளவு அருமையாக இருக்கிறது. ஒரு அக்கா தன்னுடைய தம்பியை எவ்வளவு பாதுகாப்பாக பார்த்துக் கொள்வாரோ அதுபோல அந்த மேடையில் பார்த்துக் கொண்டார். இருவரும் பாடல் பாடி கொண்டு இருந்தாலும் அந்த நேரத்திலும் அவர்கள் இருவருக்கும இருந்த சகோதர அன்பு பார்ப்பவர்களையும் வியக்க வைத்தது.












Click it and Unblock the Notifications