கூலி திரைப்படத்திற்குப் பிறகு மௌனம் கலைத்த லோகேஷ்! "ரசிகர்களின் கற்பனைக்கு என்னால் படம் எடுக்க முடியாது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான 'கூலி' திரைப்படம், விமர்சன ரீதியாகக் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. படம் வெளியாகி ஒரு மாதத்திற்குப் பிறகு, தனது மௌனத்தைக் கலைத்து, லோகேஷ் கனகராஜ் ஊடகங்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர், 'கூலி' படத்தின் எதிர்பார்ப்புகள், விமர்சனங்கள் மற்றும் தனது அடுத்தகட்ட திட்டங்கள் குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Lokesh Kanagaraj Rajinikanth Coolie

எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும்

'கைதி' மற்றும் 'விக்ரம்' படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் உச்ச இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்த லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்துடன் இணைந்தபோது, 'கூலி' படத்திற்கான எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்தது. விஜய் நடித்த 'லியோ' படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை விடவும், 'கூலி' படத்திற்கு அதிகமாக இருந்தது. அதிலும், படத்தில் நாகார்ஜுனா, உபந்திரா, அமீர்கான் போன்ற பல நட்சத்திரங்கள் நடிப்பதாக வந்த தகவல்களும், படம் LCU-வில் இருக்குமா அல்லது 'டைம் ட்ராவல்' படமா என்ற ரசிகர்களின் யூகங்களும் இந்த ஹைப்பை மேலும் அதிகரித்தன.

லோகேஷ் கனகராஜ், இந்த ஹைப் படத்திற்குப் பாதகமாகிவிடக் கூடாது என்பதற்காக, படத்தின் அறிவிப்புகள், டீசர், ட்ரெய்லர் வெளியீட்டில் மிகவும் கவனமாக இருந்தார். சில இடங்களில் பேசும்போது கூட படம் டிக்கெட் காசுக்கு ஒருத்தாக இருக்கும், அதிகமான எதிர்பார்ப்போடு வராதீர்கள் படத்தை படமாக மட்டும் பாருங்கள் என்று கூட சொல்லி இருந்தார். ஆனால், ரசிகர்கள் தங்கள் கற்பனையில் உருவாக்கிய கதைகளும் எதிர்பார்ப்புகளும், விமர்சனங்களில் ஒருவித ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

மௌனம் கலைத்த லோகேஷ்

படம் வெளியான பிறகு வந்த எதிர்மறை விமர்சனங்கள் குறித்து இதுவரை பேசாமல் இருந்த லோகேஷ், இப்போது மனம் திறந்து பேசியுள்ளார். "கூலி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படம் LCU-வில் இருக்குமா, டைம் ட்ராவல் படமா என ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள். ஆனால், நான் இந்தத் தகவல்களை ஒருபோதும் சொல்லவில்லை. 18 மாதங்களாகப் படம் குறித்த தகவல்களை வெளியில் கசியவிடாமல் நான் பொத்திப் பொத்தி வைத்தேன்."

"ரசிகர்களின் எதிர்பார்ப்பை 100 சதவீதம் பூர்த்தி செய்யும்படி யாராலும் ஒரு படம் எடுக்க முடியாது, என்னாலும் முடியாது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறை சொல்ல முடியாது. அவர்களின் எதிர்பார்ப்புதான் என்னை போன்றவர்களை இந்த இடத்தில் அமர வைத்துள்ளது."

அடுத்த படத்தில் பார்க்கலாம்

"நான் ஒரு கதை எழுதுகிறேன், அது ரசிகர்களுக்குப் பிடித்தால் எனக்குச் சந்தோஷம். பிடிக்கவில்லை என்றால், அடுத்த படத்தில் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முயற்சிப்பேன்" என்று லோகேஷ் தனது இயல்பான பாணியில் பேசினார்.

மேலும், ஒரு படத்தின் வெற்றி என்பது வசூலில் இல்லை என்றும், ஒரு இயக்குனர் தனது திரைப்படத்தை வெளியிட்டாலே அது ஒரு வெற்றிதான் என்றும், லாப நஷ்டம் என்பது தயாரிப்பாளருக்கு மட்டுமே என்றும் லோகேஷ் கூறியது திரை வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் காத்திருப்பு

'விக்ரம்' படத்திற்குப் பிறகு வெளியான 'லியோ' மற்றும் 'கூலி' ஆகிய இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், லோகேஷ் கனகராஜ் மீண்டும் தனது 'கைதி' மற்றும் 'விக்ரம்' பட பாணியில், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படி ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

லோகேஷின் அடுத்த படம் கார்த்தியின் 'கைதி 2' ஆக இருக்குமா அல்லது ரஜினி - கமல் இருவரையும் வைத்து அவர் இயக்கப் போகும் படமா என்பது குறித்த அறிவிப்புக்காக ஒட்டுமொத்த கோலிவுட்டும் காத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+