கவிஞர் சினேகன் வாங்கிய விருது.. மனைவி போட்ட எமோஷனல் போஸ்ட்.. பதிவில் சொன்ன வார்த்தை.. சூப்பர்!
சென்னை: கவிஞர் சினேகனுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தலைமை ஏற்று நடத்திய பாரதி விழாவில் "பாரதி கவிசிகரம்" என்ற விருது கிடைத்திருக்கிறது. அந்த விருதை சினேகன் வாங்கியது குறித்து அவருடைய மனைவி கன்னிகா எமோஷனலாக போஸ்ட் போட்டு இருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
கவிஞர் சினேகன் தமிழ் சினிமாவில் பல பாடல்களை எழுதி இருக்கிறார். நாம் முணுமுணுக்கும் பல ஹிட்டு பாடல்களுக்கு சொந்தக்காரர் இவர்தான் என்று பலருக்கு தெரியாது. அந்த அளவிற்கு இவருடைய பாடல்கள் மக்களின் மனதை எளிமையாக தொடும் வகையில் இருக்கும். அதே நேரத்தில் காதல் கலந்தும் இருக்கும். துள்ளல் பாடல், சோகப்பாடல் என்று பலவிதமான உணர்வுகளையும் கொடுக்கும் சினேகனுக்கு இதுவரைக்கும் பெரிய விருதுகள் எதுவும் கிடைக்கவில்லை.

சினேகன் எழுதிய பாடல்கள்
இது குறித்து சினேகனும் அவருடைய மனைவியும் பல இடங்களில் பேசி இருக்கிறார்கள்.. சினேகனுடைய ரசிகர்கள் கூட சினேகன் உடைய பாடல்களுக்கு விருதுகள் கிடைத்தது. ஆனால் அந்த பாடலை எழுதிய சினேகனுக்கு விருது கிடைக்கவில்லை என்று வருத்தங்களை தெரிவித்து இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்கும்போது சினேகன் நடிகை கன்னிகாவை தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கவிஞர் சினேகன் மனைவி
கன்னியா விருதுநகர் பக்கத்தில் உள்ள ராஜபாளையத்தை சேர்ந்தவர் நீண்ட தலை முடிக்கான அழகி பட்டம் வாங்கி இருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் சிலம்பம், புத்தகம் எழுதுதல், ஓவியம் வரைதல் என்று பல திறமைகளை கொண்ட கன்னிகா எப்படியாவது சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்திருந்தார். அப்போது சினேகன் தான் கன்னிகாவிற்கு பல உதவிகள் செய்து இருக்கிறார். ஆனாலும் கன்னிகாவால் சினிமாவில் கதாநாயகியாக ஜொலிக்க முடியவில்லை.
காதல் திருமணம்
ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த கன்னிகாவிற்கு சன் டிவியில் சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் இவர்களுடைய காதலையும் வெளிப்படையாக வெளியே சொல்லி இருந்தனர். பத்து வருடங்களாக கன்னிகா மற்றும் சினேகன் இருவரும் ரகசியமாக காதலை மூடி வைத்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் கலந்து கொண்ட பிறகு இவர்களுடைய காதல் ரகசியம் வெளியே தெரிய ஆரம்பித்தது.
சினேகன் குழந்தைகள்
அடுத்த சில வருடங்களில் இவர்கள் திருமணமும் செய்துவிட்டனர் திருமணத்திற்கு பிறகு மூன்று வருடங்களுக்கு பிறகு இப்போது சினேகன் மற்றும் கன்னிகா தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். இந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் தான் காதல், கவிதை என்று பெயர் சூட்டி இருந்தார். சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் கன்னிகா அதனுடைய கணவர் எழுதிய பாடல்களை ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.
கன்னிகா வெளியிட்ட பதிவு
பலருக்கு இந்த பாடல்கள் எல்லாம் சினேகன் எழுதியது என்று தெரியாமல் இருக்கும் நிலையில் அதை கன்னிகா அனைவருக்கும் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சினேகனுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் விருது கிடைத்திருக்கிறது. அது பற்றி கன்னிகா வெளியிட்ட பதிவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி அவர்கள் தலைமை ஏற்று நடத்திய பாரதி விழாவில் "பாரதி கவிச்சிகரம்" என்ற விருதை சினேகன் வாங்கி இருக்கிறார். "இந்த நிகழ்வு எனக்கு ரொம்பவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது ஆல் த பெஸ்ட்" என்று கணவருக்கு வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார்.
தொடரும் மகிழ்ச்சி
சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் காதலை அறிவித்த போது பல விமர்சனங்கள் வந்தது. இருவருக்கும் அதிக வயது வித்தியாசம் இருப்பதால் இவர்களால் திருமண வாழ்க்கையில் தாக்கு பிடிக்க முடியாது என்று பலர் கூறி வந்தனர் ஆனால் அதை எல்லாம் தாண்டி இவர்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications