இரட்டைக் குழந்தைகள் உடன் “வேரை” தேடிச்சென்ற கன்னிகா- சினேகன்.. பலரையும் வியக்க வைத்த வீடியோ
சென்னை: கவிஞர் சினேகன் தன்னுடைய மனைவி கன்னிகாவுடன் தன் இரட்டை குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அதனுடைய சொந்த ஊரான மதுரைக்கு சென்றிருக்கிறார். அங்கு தன்னுடைய வயதான தந்தையிடம் தன் குழந்தைகளை காட்டி ஆசீர்வாதம் வாங்கி இருக்கிறார். குழந்தைகள் பிறந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் முதல் முறையாக தன்னுடைய குழந்தைகளோடு சினேகன் சென்று இருக்கிறார். அப்போது எடுத்த வீடியோவை சினேகன் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.
பாடலாசிரியர் சினேகன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருந்தாலும் அவர் பிரபலமானது பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் தான். இந்த நிகழ்ச்சியில் அதிக நாட்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தார். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான சினேகன் இந்த நிகழ்ச்சியிலும் கட்டிப்பிடி வைத்தியராக பிரபலமானார். பலருடைய ஃபேவரிட் பாடல்களுக்கு பாடல் வரிகள் எழுதுனது இவர்தான் என்பதே பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் இவருடைய ஹிட் பாடல்கள் குறித்த விவரங்கள் எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் தெரிய வந்தது.

மனைவியின் சப்போர்ட்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கலைஞர் டிவியில் ஒரு சீரியலிலும் சினேகன் நடித்திருக்கிறார். அதுபோல ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமா, சீரியல் என்று பிசியாக இருந்தாலும் தான் பாட்டு எழுதுவதை தொடர்ந்து கொண்டிருக்கிறோம். சினேகன் சீரியல் நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினேகனின் மனைவி கன்னிகா சினிமாவில் நடிப்பதற்காக தன்னுடைய சொந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்தபோது சினேகன் தான் அவருக்கு உதவி செய்தது.
காதல் திருமணம்
பல இடங்களுக்கு ஆடிஷனுக்கு அனுப்பி வைத்ததும் சினேகன் தானாம். முதலில் இவர்களுக்குள் நட்பாக தொடங்கிய பழக்கம் பிறகு காதலாக மாறியது. பத்து வருடங்களாக காதலித்தாலும் இவர்களுடைய காதலை ரகசியமாகவே வைத்திருந்தனர். திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்புதான் இவர்களுடைய காதல் விஷயமே அனைவருக்கும் தெரிய வந்தது. கமல்ஹாசனின் தீவிரமான ரசிகரான சினேகன் தன்னுடைய திருமணத்தை கமல்ஹாசன் தான் முன் நின்று நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
சினேகன் குழந்தைகளின் பெயர்
அதுபோலவே கமல்ஹாசனும் திருமணத்தை நடத்தி வைத்திருந்தார். இவர்களுடைய திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சினேகனின் தந்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. வயதான தந்தை குறித்து பல இடங்களில் சினேகன் பேசி இருக்கிறார். தன்னுடைய அம்மா மறைவுக்குப் பிறகு தான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், அதிலிருந்து தான் எப்படி மீண்டு வந்தேன் என்றும் பல இடங்களில் சினேகன் பேசி இருக்கிறார்.
குழந்தைகளுக்கு ஆசிர்வாதம்
சினேகன் கன்னிகா தம்பதிக்கு மூன்று வருடங்களுக்கு பிறகு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தது. இரட்டைப் பெண் குழந்தைகளுக்கும் கமல்ஹாசன் தான் காதல் கவிதை என்று பெயர் வைத்திருந்தார். இந்த குழந்தைகள் பிறந்து மூன்று மாதங்களை கடந்துவிட்ட நிலையில் இன்று சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார். சினேகனின் தந்தையிடம் தன் குழந்தைகளை காட்டி அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு சினேகனின் அம்மா புகைப்படம் அன்பு தன் குழந்தைகளை படுக்க வைத்து அவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கி இருக்கிறார்.
ட்ரெண்டான வீடியோ
சினேகன் அடிக்கடி தன்னுடைய சொந்த ஊரில் குடும்பத்தோடு இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அதிலும் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய குடும்பத்தோடு ஒரே வீட்டில் தங்கும் வீடியோ வைரலானது. அப்போது செல்போனை எல்லோரும் தனியாக எடுத்து வைத்துவிட்டு கதை பேசியபடியே தூங்கி இருந்தனர் அந்த வீடியோக்களை பார்க்கும் பலரும் இதுபோல ஒரு நாளாவது குடும்பத்தோடு தங்க வேண்டும் என்றெல்லாம் கருத்து கூறி வந்தனர். இப்போது சினேகன் தன்னுடைய வயதான தந்தையிடம் குழந்தைகளை காட்டி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications