சீரியலில் கதாநாயகனாகும் சினேகன்.. அவருக்கு ஜோடி விஜய் டிவி பிரபலம்.. இந்த சேனலில் தான்!
சென்னை: பாடலாசிரியரான சினேகன் கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் சீரியலில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக செய்தி வாசிப்பாளரும் பிக் பாஸ் பிரபலமான அனிதா சம்பத் நடிக்கிறார்.
பாடலாசிரியராக மக்கள் இடையே பரீட்சையமான சினேகன் பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தார். அதற்கு முன்பு அவர் எத்தனையோ ஹிட்டான பாடல்களை எழுதி இருந்தாலும் இந்த பாடல்கள் எல்லாம் சினேகன் எழுதியது என்பது பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான் பல ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரர் நான் என்று முகத்தை காட்டி பிரபலம் ஆகி இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கட்டிப்பிடி வைத்தியராக செயல்பட்டது இப்ப வரைக்கும் விமர்சிக்கப்பட்டாலும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் சினேகன் கலந்து கொண்டிருந்தார். அதுபோல எட்டு வருடங்களாக சினேகன் நடிகை கன்னிகாவை காதலித்து வந்த நிலையில் அது வெளியே தெரியாமல் இருந்தபோது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகத்தான் தன்னுடைய காதலையும் அறிவித்திருந்தார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்து சில வருடங்கள் கழித்து நடிகர் கமல்ஹாசன் தலைமையில் திருமணமும் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவியோடு அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் ரில்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வரும் சினேகன் சினிமாக்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் தான் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதி தாங்கள் அப்பா அம்மா ஆக போகிறோம் என்று ரசிகர்களிடம் மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்திருந்தனர்

அதை தொடர்ந்து சினேகனுக்கு பெரிய அதிர்ஷ்டம் ஒன்று கிடைத்திருக்கிறது. அதாவது கலைஞர் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பவித்ரா சீரியலில் சிநேகன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார்.

சீரியலின் கதைப்படி அனிதா சம்பத் பணக்கார வீட்டு பெண் போல இருக்கிறார். ஆனால் பாவாடை தாவணியில் தான் இருக்கிறார். கிராமத்தில் பண்ணையார் மகள் போல இருக்கும் அனிதா சம்பத் வீட்டில் தான் சினேகன் வேலை செய்கிறார். சினேகன் கழுத்தில் துண்டு போட்டு கொண்டு பக்கா கிராமத்துக்காரராக மாறி இருக்கிறார். அதுபோல இந்த சீரியலில் வில்லியாக சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தில் நடித்த நடிகை ராதா நடிக்கிறார். இந்த சீரியல் ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. சீரியல் எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications