ஷாருக்கானை முதல் மனைவியுடன் சந்தித்த மாதம்பட்டி ரங்கராஜ்! நெருக்கமான போட்டோவை வெளியிட்ட ஜாய்
சென்னை: சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வரும் ஒரு பெயர் என்றால் அது மாதம்பட்டி ரங்கராஜன் தான். சமையல் கலைஞராகவும், சினிமா நடிகராகவும் அறிமுகமான அவர், இப்போது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை காரணமாகவே அதிக கவனம் பெறுகிறார். குறிப்பாக, அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு, இந்த விவகாரத்தை மீண்டும் சூடுபிடிக்க வைத்துள்ளது.
இன்று ஜாய் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த அந்த பதிவு, வழக்கமான சாட் போஸ்ட் போல இல்லை. "என் குழந்தைக்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன்" என்று சவால் விடுவது போல தான் இருந்தது. இன்று காலையில் மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவருடைய முதல் மனைவி இருவரும் ஷாருக்கானை குடும்பத்துடன் சந்தித்த வீடியோவை போஸ்டாக போட்டிருந்தனர். அதைத் தொடர்ந்து ஜாய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

மாதம்பட்டி ரங்கராஜன் சமையல் குக் வித் கோமாளி (Cook With Comali) நிகழ்ச்சி மூலமாக வீடு வீடாக அறிமுகமானவர். அதே நேரத்தில் 'மெஹந்தி சர்க்கஸ்' போன்ற படங்களில் நடித்ததன் மூலம் நடிகராகவும் தன்னை நிரூபித்தவர். முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ், இரண்டு குழந்தைகள், குடும்பம் என்ற நிலை இருந்தபோதும், பின்னர் ஜாய் கிரிஸில்டாவுடன் ஏற்பட்ட உறவுதான் இன்று இந்த சர்ச்சைகளுக்குக் காரணமாக மாறியுள்ளது.
ஜாய் கூறும் குற்றச்சாட்டுகள் லேசானவை அல்ல. திருமணம், வாக்குறுதி, நம்பிக்கை, கர்ப்பம், பின்னர் தனிமை-இந்த எல்லாமே அவரது பதிவுகளில் மறைமுகமாகவும் நேரடியாகவும் சொல்லப்பட்டுள்ளன. இதை வெறும் "பர்சனல் இஷ்யூ" என்று ஒதுக்க முடியாத அளவுக்கு, அவர் போலீசிலும் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ரங்கராஜன் காவல் நிலைய விசாரணைக்கும் அழைக்கப்பட்டார்.
இந்த நிலையில், விவகாரத்திற்கு இன்னொரு திருப்பம் கொடுத்தது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் வெளியிட்ட ஒரு பதிவு. அவர் நடிகர் ஷாருக்கானை குடும்பமாக சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படங்கள் வந்ததும், "இது ஒரு டைமிங் போஸ்டா?" "இதற்குப் பிறகுதான் ஜாய் இப்படி ஒரு பதிவை போட்டாரா?" என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழ ஆரம்பித்தன.
ஜாய் வெளியிட்ட பதிவுகள் மாதம்பட்டி ரங்கராஜனுடன் எடுத்த நெருக்கமான போட்டோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்கள். பிறகு அந்த பதிவில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு இரண்டு பொண்டாட்டி, மூன்று மகன்கள் இதை யாராலும் மாற்ற முடியுமா? முடியாது! இது மாதம்பட்டி ரங்கராஜ் சாகும் வரை அழிக்க முடியாத உண்மை. ராகா ரங்கராஜ் இதை பொய் ஸ்டேட்மென்ட் போட்டு அவரால் மறைக்க முடியுமா? குழந்தையின் சாபம் சும்மா விடுமா என்ன? வினை விதைத்தவன் வினையை அறுப்பான் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

நேற்று தான் தன்னுடைய குழந்தை ராகா ரங்கராஜ் உடன் மாதம்பட்டி ரங்கராஜனின் சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு போயிருப்பதாக போஸ்ட் வெளியிட்டு இருந்தார். சில நாட்களாகவே மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட்க்கு வராமல் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார் என்று போஸ்ட் போட்டுக் கொண்டிருந்த நிலையில் இன்று அவர் தன்னுடைய முதல் மனைவியோடு போஸ்ட் போட்ட, அடுத்த நொடி ஜாய் கிரிஸில்டா இப்படி ஒரு பதிவை போட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications