Rangaraj: 2வது திருமணம் மிரட்டலால் நடந்தது! DNA டெஸ்ட்க்கு ரெடி! நடந்தது இது தான்!- மாதம்பட்டி ரங்கராஜ் அறிக்கை!
சென்னை: தமிழ் திரையுலகில் கடந்த சில மாதங்களாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் நடிகை ஜாய் கிரிஸில்டா விவகாரம், முடிவடையாமல் மீண்டும் ஒரு புதியத் திருப்பத்தை எட்டியுள்ளது. ஜாய் கிரிஸில்டா, ரங்கராஜ் தன்னோடு நடந்த திருமணத்தையும், குழந்தையையும் ஏற்றுக்கொண்டதாக அறிவித்த நிலையில், இதற்கு மறுப்புத் தெரிவித்து ரங்கராஜ் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதனால், இந்த பிரச்சனை மீண்டும் பூதாகரமாகியுள்ளது.

ஜாய் கிரிஸில்டாவின் அதிரடி அறிவிப்பு
நேற்று ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பரபரப்பானப் பதிவை வெளியிட்டிருந்தார். "மகளிர் ஆணையம் நடத்திய சமீபத்திய விசாரணையில், எனது முன்னாள் கணவர் மாதம்பட்டி ரங்கராஜ், என்னைக் காதலித்து திருமணம் செய்ததையும், இந்தக் குழந்தை தனக்குத்தான் சொந்தம் என்பதையும் ஒப்புக்கொண்டார்" என்றுத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.
நீதி உறுதி
மேலும், ரங்கராஜ், ஆணையத்தின் முன் "குழந்தையின் தந்தை நான் தான்" என்று ஒப்புக்கொண்டதால், "இதையடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்; நீதி நிலைநாட்டப்படும்" என்ற நம்பிக்கையுடன் "#justice will prevail" என்ற ஹேஷ்டேக்கையும் ஜாய் கிரிஸில்டா இணைத்திருந்தார். இதற்கு முன்பே, குழந்தைப் பிறந்தபோது, அவர், "#junior madhampattyrangaraj" என்றுப் பதிவிட்டு, ரங்கராஜ்தான் குழந்தையின் தந்தை என்பதை உறுதிப்படுத்தியிருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜின் மறுப்பு
ஜாய் கிரிஸில்டாவின் இந்த அறிவிப்பு, பலருக்கும் நிம்மதியை கொடுத்த நிலையில், இன்று நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை மீண்டும் ஒரு புதியப் பிரச்சனையைத் தோற்றுவித்துள்ளது. ரங்கராஜ் தனது அறிக்கையின் தொடக்கத்திலேயே, "மகளிர் ஆணையத்தில் குறிப்பிட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை" என்று திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.
சட்டப்படியான நடவடிக்கை
அந்த பதிவில், நான் தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை நான் திட்டவட்டமாக கூறுகிறேன். ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக பலமுறை மிரட்டியதால் இந்த திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது. செப்டம்பர் 2025-ல் ஆயிரம் விளக்குகள் மகளிர் காவல் நிலையத்தில் புலனாய்வு அதிகாரி முன்பும் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்திலும் விரிவான வாக்குமூலத்தை நான் ஏற்கனவே அளித்துள்ளேன். இந்த திருமணம் மிரட்டலில் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.
மேலும், கமிஷனின் முன் நடந்த அடுத்தடுத்த நடவடிக்கைகளின் போதும் ஜாய் எனக்கு மாதத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பராமரிப்பு தொகையாகவும் தனது bmw காருக்கு 1.25 லட்சம் மாதாந்திர இஎம்ஐவை செலுத்த வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அந்த கோரிக்கையை மறுத்துவிட்டேன். நான் ஒருபோதும் டிஎன்ஏ பரிசோதனையை மறுத்ததில்லை. மேலும் அந்த குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் (டிஎன்ஏ டெஸ்ட்டில்) அந்த குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வேன் என்றும் கூறினேன்.
அந்த வாக்குமூலம் ஏற்கனவே ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலைய விசாரணை அதிகாரி முன்பு செப்டம்பர் 2025ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த வாக்குமூலத்தையும் நான் அளிக்கவில்லை. அந்த பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். மேலும் உண்மையை நிறுவ அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன். ஆணையத்தின் முன் நடந்த அனைத்தும் சட்டத்தின்படி நீதிமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்படும் என்று அந்த அறிக்கையை மாதம்பட்டி ரங்கராஜன் முடித்திருக்கிறார்.
ஜாய் கிரிஸில்டா தனதுப் பிஞ்சு மகனுடன் தனியாக நீதிக்காகப் போராடி வரும் நிலையில், ரங்கராஜின் இந்த மறுப்பு அறிக்கை, இந்தப் பிரச்சனை இப்போதைக்கு முடிவுக்கு வராது என்பதையேத் தெளிவாகக் காட்டுகிறது. அடுத்து மகளிர் ஆணையம் மற்றும் காவல்துறை என்ன முடிவெடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications