Madhampatty Rangaraj: இனி ஓட முடியாது, உன் மகன் கேள்வி கேட்க வருவான்! மாதம்பட்டி ரங்கராஜை டேக் செய்து ஜாய் பதிவு!
சென்னை: பிரபல 'மாதம்பட்டி பாகசாலா' கேட்டரிங் நிறுவனத்தின் பங்குதாரர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது அவர் மீது திருமணம் செய்து ஏமாற்றியதாக புகார் அளித்திருந்த ஜாய் கிரிசில்டா தொடர்ந்து சோசியல் மீடியாவில் தன்னை பற்றி விமர்சித்தும் அவதூறு பரப்பும் வகையிலும் செய்தி பரப்ப கூடாது என்று தடை விதிக்கக் கோரி நிறுவனம் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. இது மாதம்பட்டி ரங்கராஜுக்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்த தீர்ப்பு வந்ததை தொடர்ந்து ஜாய் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மீண்டும் மாதம்பட்டி ரங்கராஜனை தாக்கி ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.

நிறுவனத்தின் வாதம்
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார் என்று ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ரங்கராஜுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இதை தடுக்க கோரி, மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் மனுத் தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவில், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிசில்டா பேசியதால், அந்நிறுவனத்திற்கு 15 நாட்களில் ரூ.12.5 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறி தடை மற்றும் அவதூறாக வெளியிடப்பட்ட வீடியோக்களை நீக்க உத்தரவிடக் கோரி இருந்தனர்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
இந்த வழக்கு செப்டம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, ஜாய் கிரிசில்டாவின் தரப்பு வழக்கறிஞர் ஆவேசமாக வாதிட்டார்: "மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் பற்றியோ, நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கை குறித்தோ எதையும் பதிவிடவில்லை. 11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறும் நிலையில், கேட்டரிங் ஆர்டர் விவரங்கள் எந்த விவரங்களையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை. எனவே, கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தானதற்கும், ஜாய் கிரிசில்டாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை" என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில் குமார், இன்று தீர்ப்பளித்து, ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கிரிசில்டாவின் பதிவு
இந்த விவகாரம் வெளியானதில் இருந்து மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய பல தகவல்கள் வெளியாகி வந்தன. ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி சமூக வலைதளத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், தன்னுடைய கணவர் மாதம்பட்டி ரங்கராஜனுக்கு கடைசி வரைக்கும் சப்போர்ட்டாக இருப்பேன், வெளியில் இருந்து வருபவர்கள் யாராக இருந்தாலும் எங்கள் குடும்பத்தில் நிம்மதியே கலைக்க முடியாது என்று கூறியிருந்தார்.
ஜாய் கிரிசில்டாவின் மகிழ்ச்சி இந்த நிலையில் இன்று தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் மகிழ்ச்சியில் இருக்கும் ஜாய் கிரிசில்டா, தன்னுடைய பக்கத்தில், "உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும், மாதம்பட்டி ரங்கராஜ் ஓடவும் முடியாது ஒளியவும் முடியது, உன்னை கேள்வி கேட்க உன் வீரமிக்க மகன் எழுந்து வருவான்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஜாய் கிரிசில்டாவுக்குப் பெரிய வெற்றியாகவும், மாதம்பட்டி ரங்கராஜுக்குப் பெரிய சறுக்கலாகவும் அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications