"இது திருப்பி கொடுக்கும் நேரம்!” மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக குழந்தைகளை வைத்து ஜாய் கிரிஸில்டா போட்ட போஸ்ட்
சென்னை: சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா ஆகியோருக்கு இடையே நடக்கும் குடும்ப சண்டையும், சட்டப் போராட்டமும் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கு! ரங்கராஜ் இரண்டாவது திருமணத்தை மறுத்து, DNA பரிசோதனை கோரிக்கை வைத்த நிலையில், ஜாய் கிரிஸில்டாவும் தொடர்ந்து அவரைத் தாக்கி போஸ்ட் போட்டு வரும் சூழலில், குழந்தைகள் தின வாழ்த்து பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜ் பயோகிராபி
மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் துறையில் பிரபலமாக வலம் வருகிறார். இவர் சமையல் மட்டுமல்லாமல் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். இவர் தன் முதல் மனைவி ஸ்ருதியை திருமணம் செய்திருந்த நிலையில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவையும் காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
கிரிஸில்டா - ரங்கராஜ் மோதல்
முதல் மனைவியைத் விவாகரத்து செய்யாமலும், ஜாய் உடனானத் திருமணத்தைப் பதிவு செய்யாமலும் சில காலம் கழித்து, ரங்கராஜ் ஒரு கட்டத்தில் ஜாயை விட்டு விலக முடிவெடுத்தார். இதனால் கோபமடைந்த ஜாய் கிரிஸில்டா, இந்த விஷயத்தை வீதிக்குக் கொண்டு வந்துவிட்டார். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்த சமயத்தில்தான், கிரிஸில்டாவுக்கு ரங்கராஜ் மூலம் ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது.
ரங்கராஜின் அறிக்கை
முதலில், மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில், ரங்கராஜ் இரண்டாவது திருமணத்தை ஒப்புக்கொண்டதாகவும், பிறந்த குழந்தையை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் ரங்கராஜோ, "அதெல்லாம் இல்லை. என்னை மிரட்டித்தான் இந்தத் திருமணம் நடந்தது. அந்தக் குழந்தை என்னுடையதுதான் என்பதை DNA பரிசோதனை மூலம் உறுதி செய்தால் மட்டுமே, குழந்தையை ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறி டுவிஸ்ட் அடித்தார்.
முதல் மனைவியின் ஆதரவு
ரங்கராஜின் DNA பரிசோதனை கோரிக்கை, இப்போராட்டத்தில் வென்றுவிட்டதாக நினைத்திருந்த ஜாய் கிரிஸில்டாவுக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதியோ கணவருக்கு முழுக்க முழுக்க அவருக்கு ஆதரவுக் கரத்தை நீட்டிப் புது தெம்பை அளித்தார். இருப்பினும், ஜாய் கிரிஸில்டாவோ எப்படியாவது ரங்கராஜை வென்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால், இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
குழந்தைகள் தின போஸ்ட்
மாதம்பட்டி ரங்கராஜ், DNA பரிசோதனைக் கோரிக்கை வைத்து விலகினாலும், ஜாய் கிரிஸில்டா தொடர்ந்து அவரைச் சமூக ஊடகங்களில் தாக்கி போஸ்ட் போட்டு வருகிறார். தனக்குப் பிறந்திருக்கும் குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்நிலையில் இன்று குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தனது மூத்த மகன் இளைய மகனுக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, பின்னணியில் நடிகர் விஜய்யின் 'தீ தளபதி' பாடலில் வரும் "இது திருப்பி கொடுக்கும் நேரம் மாமே..." என்ற வரிகள் வரும்படி எடிட் செய்திருக்கிறார்.
இந்தப் பதிவு இணையத்தில் பெரிய கவனத்தை ஈர்த்திருக்கிறது. ரங்கராஜை நேரடியாகத் தாக்காமல், மறைமுகமாக ஒரு பாடலின் வரிகள் மூலம் இந்தக் குழந்தைகள் தின வாழ்த்திலும் அவர் குறி வைத்திருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ரங்கராஜ் இந்தக் களேபரங்கள் எதற்கும் ரியாக்ட் செய்யாமல், தனது தொழிலில் பிஸியாக இருக்கிறார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications