வதந்திக்கு பதிலடி! தன் மகன் போட்டோவை வெளியிட்ட ஜாய் கிரிஸில்டா.. மாதம்பட்டி ரங்கராஜனுக்கு பஞ்சாயத்து
சென்னை: பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் ஜாய் கிரிஸில்டா இடையேயான சர்ச்சை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பெரிய விவாதமாக மாறியது. அந்த விவகாரம் தற்போது அமைதியாக இருந்த நிலையில், இன்று ஜாய் கிரிஸில்டா தனது மகனின் புகைப்படத்தை முதல் முறையாக சமூக வலைதளத்தில் பகிர்ந்திருப்பது மீண்டும் அந்த விவகாரத்தை பேசப்படும் நிலையில் கொண்டு வந்துள்ளது.

மகன் புகைப்படம் வெளியீடு
இன்ஸ்டாகிராமில் ஜாய் கிரிஸில்டா இன்று தனது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்த பதிவில் அவர் தனது மகனின் அழகான புகைப்படத்தை வெளியிட்டு, அதற்கு "Madhampatty Ragha Rangaraj" என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.
இந்த பெயர் குறிப்பே சமூக வலைதளங்களில் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், அந்த பெயரில் மாதம்பட்டி ரங்கராஜனின் பெயர் இடம்பெற்றிருப்பதாக பலர் கூறி வருகின்றனர். இதனால் அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் யார்?
கோயம்புத்தூரைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜன்ஒரு பிரபல சமையல் கலைஞர், தொழிலதிபர் மற்றும் நடிகர். பெரிய அளவிலான திருமண விழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு உணவு ஏற்பாடு செய்வதில் அவர் மிகவும் பிரபலமானவர்.
"மாதம்பட்டி கேட்டரிங்" என்ற பெயரில் அவருடைய நிறுவனம் பலருக்கும் பிரபலமாக இருக்கிறது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரின் முக்கிய நிகழ்ச்சிகளில் உணவு ஏற்பாடுகளை செய்து அவர் புகழ் பெற்றார்.
மேலும் சினிமாவிலும் அவர் நடித்துள்ளார். மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் நடிகராகவும் ரசிகர்களிடையே அறிமுகமானார்.
எழுந்த சர்ச்சை
சில மாதங்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை வடிவமைப்பாளர், மாதம்பட்டி ரங்கராஜன் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
அவரது குற்றச்சாட்டுப்படி, தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாகவும், தன்னுடைய குழந்தைக்கு அப்பா அவர்தான் என்றும் கூறி அவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.இந்த புகார் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு, பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டன. சிலர் ஜாய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். அதே நேரத்தில் சிலர் மாதம்பட்டி ரங்கராஜை ஆதரித்து பதிவுகள் வெளியிட்டனர்.

போலீஸ் புகார் மற்றும் விசாரணை
ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. அந்த காலகட்டத்தில் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறி, பல யூடியூப் சேனல்கள் மற்றும் செய்தி தளங்களில் தொடர்ந்து பேசப்பட்டது. அப்போது மாதம்பட்டி ரங்கராஜன் கட்டாயத்தின் பெயரில் தான் நான் ஜாய்க்கு தாலி கட்டினேன் ஆனால் அவருடைய குழந்தை என்னுடையது என்று நிரூபனம் ஆனால் அந்த குழந்தையை என் ஆயுசு முழுக்க கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இரு தரப்பினரிடமிருந்தும் பல்வேறு விளக்கங்களும் வெளியானதால் இந்த விவகாரம் நீண்ட நாட்கள் பேசப்பட்டு வந்தது.
தற்போது மீண்டும் பேசப்படும் காரணம்
அந்த சர்ச்சை மெதுவாக அமைதியாகி இருந்த நிலையில், தற்போது ஜாய் கிரிஸில்டா தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டு "Madhampatty Ragha Rangaraj" என்று பெயரை குறிப்பிட்டிருப்பது மீண்டும் இந்த விவகாரத்தை சமூக வலைதளங்களில் பேசப்படும் நிலையில் கொண்டு வந்துள்ளது.
இந்த பதிவை பார்த்த பலரும் குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் சிலர் மீண்டும் பழைய சர்ச்சையை நினைவுகூரும் விதமாக கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications