எரிமலையாய் வெடித்து சிதறிய மது...குரலை உயர்த்திப் பேசி மாட்டிக்கொண்ட தாமரை
சென்னை: இதுவரைக்கும் தமிழ் அதிகம் பேசத் தெரியவில்லை என்று திணறிக் கொண்டிருந்த மது தற்போது பேசியதைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள்.
பங்க்ஷன் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது பிரச்சனையும் பூகம்பமாக வெடித்துக் கொண்டிருக்கிறது.
தனக்கும் குரலை உயர்த்திப் பேச தெரியும் என்று இவர் தாமரையிடம் கூறியதை பார்த்ததும் வேற லெவல் என்ட்ரி என்று இவரை ரசிகர்கள் உசுப்பேற்றி வருகின்றனர்.

அதிகமான போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் தான் ஒவ்வொரு சீசனும் இருக்கும். ஆனால் தற்போது இரண்டாவது சீசன் மட்டும் இதற்கு ஒரு மாற்றாக இருக்கும் என்று ஆரம்பத்தில் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இதுவும் வழக்கமாக இருக்கும் சீசன் களை போன்றதுதான் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான போட்டியாளர்கள் முதலில் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். இதனால் பிரச்சனைக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.

வெளிநாட்டுப் போட்டியாளர்கள்
இதில் நடிகர்கள் மட்டுமல்லாமல் பலருக்கும் பரிச்சயமில்லாத பல மாடல் அழகிகள் வரை பலதரப்பட்ட போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் ஜெர்மனி, மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இந்த சீசனில் போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது வழக்கமாக நடப்பதாக இருந்தாலும் தற்போது ஜெர்மனியில் இருந்து இதில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் மதுமிதா விற்கும் தமிழ் ரசிகர்கள் அதிகமாக உருவாக தொடங்கிவிட்டனர்.

மதுவின் மனக்குமுறல்
இவர் திக்கி திக்கி பேசும் தமிழ் அழகை ரசிப்பதற்காகவே இவர் ஒரு ப்ரமோ வில் வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவந்தனர். கடந்த வாரம் முழுக்க இவர் இந்த வீட்டின் தலைவராக இருந்தாலும் இவருக்கு தூங்குபவர்களை கண்காணிக்கும் பணி மட்டும்தான் செய்ய முடிந்தது என்று கண்கலங்கி கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன் மனதிற்குள் இருக்கும் கோபத்தை யாரிடம் காட்டலாம் என்று எண்ணிக்கொண்டு இருந்தாரோ என்னவோ இன்றைய ப்ரமோவில் இவர் வேற லெவல் சண்டையை தொடங்கி இருக்கிறார்.

கொண்டாட்டத்திலும் பஞ்சாயத்து
கிராமத்துப் பையிங்கிளியாக இந்த சீசனில் அறிமுகமாகியிருக்கும் தாமரைச்செல்வி ஒவ்வொரு நாளும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார். இவர் மீது தப்பு இருப்பது போலவே ப்ரமோவில் காட்டி விட்டாலும் நிஜத்தில் எபிசோட்டில் அப்படி ஒன்றும் இல்லாமல் புஸ்சென்று போய்விடும். ஏற்கனவே காயின் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. இந்த நேரத்தில் தற்போது இவருக்கு மதுமிதாவுக்கு பிரச்சனை முட்டி இருக்கிறது. தாமரை செல்வியை, மதுமிதா வா...போ என்று ஒருமையில் அழைத்ததாகவும் அது தனக்கு பிடிக்கவில்லை என்று தாமரை பேசியதற்கு அது ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை என்று மது பேசியிருக்கிறார். இவர்கள் இருவரின் பஞ்சாயத்தை பார்த்ததும் ரசிகர்கள் கொண்டாட்டம் என்று பார்த்தால் இங்கே பஞ்சாயத்துக்கு பஞ்சம் இல்லையே என்று கூறிவருகின்றனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications