திடீரென்று சீரியலில் இருந்து விலகிய மகாநதி சீரியல் லட்சுமி பிரியா.. இனி அவருக்கு பதில் யார் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மகாநதி சீரியலில் கங்கா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை லட்சுமி பிரியா தான் நடித்துக் கொண்டிருக்கும் சீரியலில் இருந்து விலக போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆனால் அது மகாநதி சீரியல் இல்லை. மலையாளத்தில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியலில் இருந்துதான் லட்சுமி பிரியா விலகப் போகிறாராம். அதுபோல அந்த சீரியலில் இனி அவருக்கு பதிலாக சன் டிவி சீரியல் நடிகை ஒருவர் நடிக்கப் போகிறாராம். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

 Mahanadhi serial Actresses Lakshmi Priya quit from a Chandrakantham serial

முதல் முறையாக சீரியலில் அறிமுகமாகி இருக்கும் லட்சுமி பிரியாவிற்கு சின்னத்திரையில் அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர். ஆனால் இவர் ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு காலேஜ் படிப்பை முடித்ததும் முழு நேரமாக மாடலிங் துறையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்.

அதோடு மிஸ் மிராக்கி 2018 என்னும் அழகிப்போட்டியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆகவும் தேர்வாகி இருக்கிறார். அதைத்தொடர்ந்து சில பத்திரிகைகளில் முன் பக்க அட்டை படத்தில் இடம்பிடிக்கிற மாதிரியான போட்டோ சூட்டுகளை நடித்தி வந்து இருக்கிறார். பட வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறி இறங்கிய இவருக்கு சில வருடங்கள் கழித்து தான் நடிகர் யோகி பாபுவோடு சேர்ந்து பன்னிக்குட்டி என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த திரைப்படம் லட்சுமி பிரியாவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்திருந்த நிலையில் அதை தொடர்ந்து பெரிய அளவில் இவருக்கு சினிமா வாய்ப்பு வராத போது இவர் சின்னத்திரையில் கவனத்தை திருப்பி இருக்கிறார். அப்போதுதான் அவருக்கு மகாநதி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி பிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி போட்டோ ஷூட் புகைப்படங்களை போஸ்ட் போட்டு 40 ஆயிரத்திற்கு அதிகமான ரசிகர்களை பாலோ பண்ண வைத்திருக்கிறார்.

அதுபோல லட்சுமி பிரியா யோகி பாபுவின் பன்னிக்குட்டி திரைப்படத்தில் மட்டுமல்லாமல் திரிஷாவுடன் ரோட், சிம்புவின் பத்து தலை, ட்ரிப் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் லட்சுமி பிரியா தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்தில் சந்திரகாந்தம் என்ற சீரியலில் நந்தா கேரக்டரில் நடித்து வருகிறார்.

 Mahanadhi serial Actresses Lakshmi Priya quit from a Chandrakantham serial

இந்த நிலையில் இவர் திடீரென அந்த சீரியலில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் லட்சுமி பிரியாவிற்கு பதிலாக அந்த சீரியலில் புதிய நந்தா கேரக்டரில் நடிகை மான்சி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மான்சி வேறு யாரும் இல்லை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் வில்லியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+