கோலாகலமாக நடந்த மகாநடிகை கிராண்ட் பினாலே.. டைட்டில் வென்றது யார் தெரியுமா? 2வது இடத்தில் இவங்கதான்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் ஒவ்வொன்றிற்கும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
அப்படியான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் மகாநடிகை. வாரந்தோறும் ஞாயிறு இரவு 8:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. தேசிய விருது பெற்ற நடிகை சரிதா, நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட விஜய் ஆண்டனி மற்றும் பிரபல நடிகையான அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க ஆர்.ஜே விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

போட்டியாளர்கள் தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தும் மிகப்பெரிய மேடையாக இந்த மகாநடிகை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் பிப்ரவரி 2-ம் தேதி அன்று கோலாகலமாக நடைபெற்றது. ஹேமதி, ஜாப்னா உட்பட 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தனர். ஒவ்வொரு ரவுண்டிலும் நடிப்பின் மூலமாக நடுவர்களை பார்வையாளர்களையும் பிரம்மிக்க வைத்த போட்டியாளர்கள் இறுதி போட்டியில் கடுமையாக போட்டி போட்டனர்.
போட்டியின் இறுதியில் மக்களின் ஓட்டுகள் மற்றும் நடுவர்களை மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பிடித்து டைட்டிலை வென்றார் பலரின் பேவரைட் போட்டியாளரான ஹேமதி. அவருக்கு அடுத்தப்படியாக ஜாப்னா ரன்னராக வெற்றி பெற்றுள்ளார்.

புதுமுக நடிகைக்கான தேடலாக ஒளிபரப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்காக ஜீ தமிழ் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடத்தி இறுதியாக 10 போட்டியாளர்களை தேர்வு செய்து 10 பயிற்சியாளர்களை கொண்டு அவர்களுக்கு பயிற்சியும் அளித்து இந்த போட்டியை சிறப்பாக கொண்டு சென்றது பாராட்டுதலுக்குரிய ஒன்றாகும்.
மகாநடிகை நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து வெகுவிரைவில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிகழ்ச்சியையும் ஆர்.ஜே விஜய் தொகுத்து வழங்க பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications