சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையோடு புகைப்படம் எடுத்த தோனி.. இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் பாட்டியாக நடித்து வரும் நடிகையின் பெயர் ரேவதி இவர் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரரான மகேந்திர சிங் தோனியோடு எடுத்த புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்து வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் கதை வேகமாக பயணித்து வருவதும் அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்கள் வந்து கொண்டிருப்பதும் இந்த சீரியலில் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்களும் ரசிகர்களின் மத்தியில் அதிகமாக பிரபலம் அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் பலரையும் நமக்கு இப்படி ஒரு பாட்டி இல்லையே என்று பீல் பண்ணவைத்த முத்துவின் பாட்டி தான் நடிகை ரேவதி. இவர் சிறகடிக்க ஆசை சீரியலில் மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலிலும் பழனிச்சாமியின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது என்றால் மௌனராகம் சீரியல் தான்.
மௌன ராகம் சீரியலில் கதாநாயகியின் பாட்டியாகத்தான் நடித்து பிரபலமடைந்திருந்தார். முதல் சீசனில் மட்டுமல்லாமல் இரண்டாவது சீசனிலும் நடித்து பிரபலம் அடைந்திருந்தார். இப்படியாக பல சீரியல்களில் குணச்சித்திர இடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான தோனியோடு கிரவுண்டில் வைத்து எடுத்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ரேவதி சீரியலில் மட்டுமல்லாமல் நடிகர் எம் ஜி ஆர், சிவாஜி காலத்தில் கதாநாயகியாகவும் முக்கிய கேரக்டரிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் இப்போது இளைஞர்கள் மத்தியிலும் பாட்டி என்று செல்லமாக அழைக்கப்படும் நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அதுபோல சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் பாட்டி அதிகமாக இப்போது வரவில்லையே என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பொங்கல் நேரத்தில் கிராமத்தில் பொங்கல் பங்க்ஷன் கொண்டாடும்போது முத்து எப்படி கிராமத்தில் பாட்டி வீட்டில் வளர்ந்தார் என்ற ஃப்ளாஷ் பிளாஷ்பேக் கதை ஒன்று இருப்பதை காட்டி இருந்தனர். ஆனால் இப்போதைக்கு அந்த பிளாஷ் பேக் உடைபடாமல் இருக்கிறது.
ஆனால் ரோகிணி பியூட்டி பார்லர் ரகசியம் விஜயாவிற்கு தெரிய வந்திருக்கிறது. அதை தொடர்ந்து பெரிய அளவில் திருப்பம் இல்லாததால் இனி முத்துவின் பிளாஷ்பேக் கதை மீண்டும் தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications