என்னது கயலை சுட்டுட்டாங்களா..எழிலை காப்பாற்ற போய் இப்படி ஆயிருச்சே..என்னாகுமோ? ரசிகர்கள் கவலை
சென்னை: கயல் டிவி சீரியலில் நடித்து வரும் சைத்ரா ரெட்டி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எழிலை காப்பாற்ற போய் இப்படி ஆகிவிட்டதே.. எழில் மீதான காதலை இன்னும் எத்தனை நாட்களுக்கு மறைக்கப்போகிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சன் டிவி சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இல்லத்தரசிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் சீரியல் 'கயல்'. இந்த சீரியலில் கயல் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சைத்ரா ரெட்டி.

பாசமான அக்கா. குடும்பத்திற்காக உழைத்து தம்பி தங்கை, அண்ணனின் குடும்பத்திற்காக அவர்களின் வெற்றிக்காக பாடுபடுகிறாள். தங்களின் குடும்பத்தை அழிக்க நினைக்கும் பெரியப்பா குடும்பத்தை எப்படி சமாளிக்கிறாள் என்பதுதான் கதை.
மற்றொரு பக்கம் எழில் தன்னை காதலிப்பது அறிந்து அதை அறியாதது போலவே அவன் மீதான காதலை வெளிப்படுத்தாமலேயே இயல்பாக இருப்பது போல நடிக்கிறாள் கயல். இந்த சீரியல் தற்போது பல்வேறு திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. கயலுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த பல சதிகளை செய்கிறார் பெரியப்பா.
இந்நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதற்கு காரணம் அந்த வீடியோவில் சைத்ராவை சுடுவது போன்று காட்சி உள்ளது.

இந்த காட்சிகள் 'கயல்' சீரியலுக்காக எடுக்கப்பட்டவை என்று கூறி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சைத்ரா ரெட்டி வெளியிட்டுள்ளார்.
வரும் வாரம் ஒளிப்பரப்பாக உள்ள எபிசோடில் எழில் மீது யாரோ துப்பாக்கியால் சுடும் போது அவனை தள்ளி விட்டு தன் மீது தாங்கிக் கொள்கிறாள் கயல். ரத்த வெள்ளத்தில் சாய்கிறாள் கயல்.

டம்மி துப்பாக்கி மூலம் கயலை சுடும் அந்த காட்சி ரியலாக இருக்கிறது. இதை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் எப்படி நடிக்கிறீங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். எழிலை காப்பாற்றுவதில் இருந்தே தெரிகிறது நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று பிறகு ஏன் நீங்கள் மறுக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எழில் மீதான காதலை கயல் எப்போது சொல்லப்போகிறாள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications